மருதமலை மாமணியே முருகய்யா! முருகன் மாநாட்டில் திடீரென பாடிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை ரியாக்ஷன்
மதுரை: மதுரை முருகன் மாநாட்டில் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தெலுங்கில் பேசி ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணை வரவேற்றார். தொடர்ந்து மருதமலை மாமணியே முருகய்யா என்ற பாடலை முழுமையாக மேடையில் நயினார் நாகேந்திரன் பாடினார். அப்போது அண்ணாமலை கைதட்டி வரவேற்றார். கூட்டத்தில் பங்கேற்று இருந்தவர்களும் கைகளை தட்டியதால் அரங்கம் அதிர சத்தம் எழுந்தது.
மதுரை பாண்டிக்கோவில் அருகே அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் நேற்று முருக பக்தர்கள் மாநாடு நடந்தது. இதை முன்னிட்டு அறுபடை முருகன் கோவில்களின் மாதிரிகள் கண்காட்சியாக அமைக்கப்பட்டு, வழிபாடுகள் அங்கு நடந்து வந்தன. நாள்தோறும் ஏராளமானவர்கள் தரிசித்தார்கள்.

மாநாட்டு மேடை திருப்பரங்குன்றம் மலையை பின்னணியாக வைத்தும், அதில் முருகப்பெருமான் படத்துடன், அறுபடை வீடுகளின் கோபுரங்களும் இடம்பெறுவது போன்றும் வடிவமைக்கப்பட்டு இருந்தது. நேற்று காலை முதலே தொண்டர்கள் மாநாட்டு திடலுக்கு திரண்டு வர தொடங்கினர். பலர் காவி உடைகளுடன், மேள, தாளங்களுடன் ஆடிப்பாடியும் வந்தனர். பலர் கந்த சஷ்டி கவசத்தை பாடியபடி வந்தனர்.
மாலை 3 மணி அளவில் மாநாட்டு மேடையில் கலை நிகழ்ச்சிகள் தொடங்கின. தொடர்ந்து நடைபெற்ற மாநாட்டுக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் வரிசையாக பேசினர். தொடர்ந்து மாநாட்டு மேடையில் இருந்தவர்களும், மாநாட்டுக்கு வந்திருந்தவர்களும் ஒரே நேரத்தில் கந்தசஷ்டி கவசம் பாடினர். இது ஒரு கின்னஸ் சாதனையாக அமைந்தது. மாநாடு இரவு 9 மணி அளவில் நிறைவுபெற்றது.
முன்னதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:-
கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..
மருதமலை மாமணியே முருகய்யா..
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா..
என்ற பாடலை முழுமையாக நயினார் நாகேந்திரன் பாடினார். அப்போது மேடையில் இருந்த அண்ணாமலை உற்சாகத்துடன் கைகளை தட்டி வரவேற்றார். அதேபோல, கூட்டத்தில் பங்கேற்று இருந்தவர்களும் கைகளை தட்டியதால் அரங்கம் அதிர சத்தம் எழுந்தது.
முருகா.. முருகா.. என்று சொன்னால் உருகாதோர் யாருமில்லை.. தமிழ்க் கடவுள் முருகன் என்று சொன்னால் அது மிகையல்ல.. முருகா என்ற சொல்லில் வல்லினம், இடையினம், மெல்லினம் இருக்கிறது. நம்முடைய கலாச்சாரம் ஒருமித்த கலாச்சாரம்.. உங்களை எதாவது ஒரு மொழியை தான் படிக்க சொல்கிறோம்.. தமிழ், பக்கத்தில் இருக்கிற தெலுங்கு.. நம்ம கலாச்சாரம், பண்பாடு.. மலையாளம், அருகில் கன்னடம், தெலுங்கு இருகிறது. இந்த கலாச்சாரம் மாறிவிடக்கூடாது என்பதற்காக தான் இந்த முருகன் மாநாடு.. என்று நயினார் நாகேந்திரன் பேசினார்.
-
தாமரையை கழட்டி வெச்சிட்டு அண்ணாமலை பின்னாடி போகும் ஃபேன்ஸ்.. 2 நாளில் திருப்பம்! பாஜக எதிர்பார்க்கல -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
"அண்ணாமலையை விட்ற கூடாது!" புதிய இயக்கத்தில் முதல் ஆளாக இணைந்த கூமாபட்டி தங்கபாண்டி! பின்னணி என்ன? -
அண்ணாமலையிடம் கேளுங்கள்.. தாமரையில் ஒரு இதழை கூட அசைக்க முடியாது..தமிழிசை சௌந்திரராஜன் -
அண்ணாமலையை நம்பி ஏமாறாதீங்க! ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் வேண்டாம்! நயினார் அட்வைஸ் -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
விஜய் Vs உதய் Vs அண்ணாமலை? திராவிடக் கடப்பாரைகளை வளைத்த Gen Z! இளைஞர்களால் மாறும் அரசியல் களம்! -
அண்ணாமலை மாயமான்.. ஆர்எஸ்எஸ்-இன் புதிய அவதாரம்.. வீரமணி விமர்சனம் -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம்












Click it and Unblock the Notifications