வாரிசுகள் அரசியலுக்கு வந்தால் என்ன தப்பு.. தகுதி இருந்தால் வரலாம்.. ஓ.பி.எஸ் சொல்வதை பாருங்க!
வாரிசுகள் அரசியலுக்கு வரக்கூடாது என எந்த சட்டமும் இல்லை என மதுரையில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
Recommended Video

மதுரை: வாரிசுகள் அரசியலுக்கு வரக்கூடாது என எந்த சட்டமும் இல்லை என மதுரையில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தேனி மக்களவை தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் மகன் ஓ.ரவீந்திரநாத் குமார் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். இதையடுத்து மகனை ஆதரித்து சோழவந்தான் மற்றும் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிகளில் ஓ.பன்னீர் செல்வம் பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.

இன்று மதுரை அலங்காநல்லூர் பகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகனுடன் இணைந்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இந்த பிரசாரத்தின் போது அமைச்சர் உதயக்குமார், மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடன் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் வாரிசு அரசியல் குறித்த விமர்சனத்துக்கு பதில் அளித்து பேசுகையில், அரசியல்வாதிகளின் வாரிசுகள் அரசியலுக்கு வரக்கூடாது என்று எந்த சட்டமும் இல்லை, தகுதியின் அடிப்படையில் வாரிசுகளை மக்கள் ஏற்றுக் கொண்டால்.
அவர்கள் வருவதற்கு அரசியலமைப்பு சட்டத்தில் உரிமை உள்ளது என்றார். முன்னதாக திமுக தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின். "வாரிசு என்பதற்காக மட்டுமே யாருக்கும் தேர்தலில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. உழைப்பு மற்றும் கட்சி பணியை மனதில் வைத்தே வாய்ப்பு தரப்பட்டுள்ளது" என விளக்கம் அளித்து இருந்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications