பாகப்பிரிவினை பத்திரம்.. மதுரை விஏஓ மீனாட்சி கலையை பார்த்தீங்களா? ஆசை யாரை விட்டது.. அசிங்கமா போச்சு
மதுரை: மதுரை, திருவள்ளூர், என ஒரே நாளில் பல்வேறு மாவட்டங்களில் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கி கைதாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை தந்து வருகிறது. இது தொடர்பாக கைதானவர்களிடம் விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் எண்ணிக்கைகள் பெருகி வருகிறது. அதிலும் பத்திரப்பதிவு துறையில் பெண் அதிகாரிகளே லஞ்சம் வாங்கி கைதாகி வருவது அதிகரித்து வருவது மிகப்பெரிய அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.

லஞ்சம், ஊழல் தொடர்பாக அரசு ஊழியர்கள், அதிகாரிகளும் ஊழல் தடுப்பு போலீசாரால் தொடர்ந்து சுற்றி வளைக்கப்பட்டு கைதாகி கொண்டிருக்கிறார்கள். அப்போதும்கூட, இந்த எண்ணிக்கையும், அது தொடர்பான குற்றமும் குறைந்தபாடில்லை.
நேற்றுகூட, வருமானத்துக்கும் அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில், காஞ்சிபுரம் மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அதிகாரி சியாமளா என்பவர் வீட்டில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு நடத்தினார்கள். இதில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது உறுதியானதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தரப்பில் சொல்லப்படுகிறது.
விஏஓ கைது: பொறுப்பு மிக்க அரசு பதவிகளை வகித்துக் கொண்டு, லஞ்சம் வாங்கி பொதுவெளியில் சிக்கி இதுபோன்ற பெண் அதிகாரிகள் கைதானாலும்கூட, இந்த அவலம் தொடர்ந்தபடியே உள்ளது.. மதுரை மாவட்டம் பேரையூர் அருகே வீட்டு மனைகளுக்கு பட்டா வழங்குவதற்கு ரூ. 6 ஆயிரம் லஞ்சம் வாங்கியிருக்கிறார் பெண் விஏஓ.. இவரும் இப்போது கைதாகி உள்ளார்.
நிலப்பட்டா: சின்னரெட்டிப்பட்டியை சேர்ந்த மொகைதீன் செரீப்.. இவரது பெற்றோர் பெயரில் சின்னரெட்டிப்பட்டியில் 2 வீட்டு மனைகள் இருப்பதால், இதற்கு பட்டா வாங்க முடிவு செய்தார். இதற்காக சின்னரெட்டிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் டிஎம்டி. மீனாட்சிகலையை செரீப் அணுகியுள்ளார்.. அப்போது பட்டா வழங்க ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம் விஏஓ.
ஆனால், இந்த லஞ்சப்பணத்தை கொடுக்க விரும்பாத மொகைதீன் செரீப் மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார்.. அவர்களது ஆலோசனைப்படி, ரசாயனம் தடவிய ரூ.6 ஆயிரத்தை செரீப், அலுவலக உதவியாளரிடம் கொடுத்தார்.
லஞ்சப்பணம்: அந்த லஞ்சப்பணத்தை வாங்கி, விஏஓ மீனாட்சி கலை தன்னுடைய ஹேண்ட்பேக்கில் வைத்தார். அப்போது, மறைந்திருந்த போலீசார் கையும், களவுமாக பிடித்து விஏஓவை கைது செய்தனர். லஞ்சம் வாங்கி பெண் விஏஓ கைது செய்யப்பட்ட சம்பவம் பேரையூர் தாலுகாவில் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டத்திலும், பத்திரப்பதிவு செய்து, நில ஆவணங்களை தருவதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியிருக்கிறார் ஆர்.கே.பேட்டை சார் பதிவாளர். இவரும் இப்போது கைதாகி உள்ளார்.
நில ஆவணம்: ஆர்.கே.பேட்டை அருகே உள்ள ஆர்.ஜெ.கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த பழனி.. இவருக்கும், இவரது அண்ணனுக்கும் பாலாபுரம், மகான்காளிகாபுரம் ஆகிய பகுதிகளில் பூர்விக சொத்தான 2 ஏக்கர் நிலம் இருந்தது. சகோதரர்கள் இருவருமே வயதாகிவிட்டதால், தங்கள் வாரிசுகள் 5 பேருக்கு, 2 ஏக்கர் நிலத்தை பாகப்பிரிவினை செய்து, கடந்த ஜூன் 21-ம் தேதி ஆர்.கே.பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு செய்திருநதனர்.
ஆனால், பத்திரபதிவு செய்த நில ஆவணங்களை அளிக்க ஆர்.கே.பேட்டை சார் பதிவாளர்(பொறுப்பாளர் ) சிவலோகநாதன் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க சகோதரர்கள் விரும்பவில்லை.
அதிரடி கைது: இதனால், ஒழிப்புத் துறை போலீஸாரிடம் புகார் அளிக்கவும், அவர்கள் சொன்ன ஆலோசனை பேரில், ரசாயனம் தடவிய பணத்தை சார் பதிவாளர் சிலலோகநாதனிடம் தந்தனர். இறுதியில் கையும் களவுமாக சிக்கினார் சார் பதிவாளர். இதே சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்த, ஆவண எழுத்தரான ஆறுமுகம், ரூ.10 ஆயிரத்தை பழனியிடம் பெற்றார். இவரையும், போலீசார் கைது செய்தனர். இப்படி ஒரே நாளில் நேற்றைய தினம் மட்டும் நான்கைந்து அரசு அதிகாரிகள் லஞ்ச புகாரில் கைதாகி உள்ளனர்...!!
12 ஆயிரம் லஞ்சம்: இதோ இன்றுகூட ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் ஒப்பந்ததாரராக பதிவு செய்ய ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஒன்றிய அலுவலக மேலாளர் ராமச்சந்திரன் கைதாகியிருக்கிறார்.
செந்தில்குமார் என்பவர், தன்னுடைய தந்தை அங்குச்சாமி பெயரில் மூன்றாம் நிலை ஒப்பந்ததாரராக பதிவு செய்ய தாலுகா அலுவலகத்தில் கடந்தாண்டு மனு அளித்தார். பிறகு கடந்த ஜூலையில் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கட்டினார்.
கைது: இதுதொடர்பான சான்றிதழை அவர் கேட்டதற்குதான, ஒன்றிய அலுவலக மேலாளர் ராமச்சந்திரன், ''ரூ.20 ஆயிரம் தனக்கும், ஆபீஸ் செலவிற்கும் கொடுத்து விட்டு சான்றிதழை வாங்கி கொள்ளுங்கள்" என்று சொன்னாராம். இன்று 20 ஆயிரம் லஞ்சப்பணத்தை கை நீட்டி வாங்கியபோதுதான் அதிகாரிகளால் கையும் களவுமாக சிக்கி கொண்டுள்ளார்.. இப்போது விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications