கப்பலூர் சுங்கச்சாவடியை என்ன விலை கொடுத்தாவது நீக்குவோம்.. முற்றுகையிட்ட மக்கள்.. எம்எல்ஏ கைது
மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்யக்கோரி மக்கள் முற்றுகை போராட்டத்தில் இறங்கி உள்ளனர். இதன் காரணமாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தில் மக்களுடன் ஆர்பி உதயகுமார் எம்எல்ஏவும் இறங்கி உள்ளார். அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில் இருக்கும் சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்யக்கோரி மாபெரும் பந்த் போராட்டம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் திருமங்கலம் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதி மக்கள் வழக்கமாக சென்று கொண்டிருந்த சாலையில் அமைக்கப்பட்ட ரிங் ரோடு மற்றும் நெடுஞ்சாலையில் பயணப்படும் வாகனங்களுக்கு வைக்க வேண்டிய டோல்கேட்டை ஆகியவை திருமங்கலம் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.

இதனால் திருமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்கள் தினமும் 100க்கணக்கில் பணம் கட்ட வேண்டிய நிலை இருந்து வருகிறது. வாடகை கார்கள், ஓலா போன்ற நிறுவன வாகனங்கள் போன்றவற்றை புக் செய்தால் அப் அண்ட் டவுன் டோல்கேட் கட்ட வேண்டி இருக்கிறது என்றும் மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
உள்ளூர் வாகன பதிவு வாகனங்களுக்கு நீண்ட போராட்டத்திற்கு பின் முதலில் விலக்கு கொடுத்துள்ளார்கள். ஆனதால் திடீரென 50% கட்டணம் நிர்ணயித்தார்கள். இதனால் வணிகம் சம்பந்தமாக பொருள் கொண்டு வரும் வாகனங்களும் பாதிக்கப்பட்டது. இதனால் வெகுண்டெழுந்த பொதுமக்கள், கப்பலூர் சுங்கச்சாவடியை என்ன விலைக் கொடுத்தாவது நீக்குவோம் என்று ஆவேசம் அடைந்துள்ளனர். இன்று திருமங்கலம் பகுதி மக்களால் பந்த் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சுங்கச்சாவடிக்கு சென்ற பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் இறங்கினார்கள். அங்கு ஏற்கனவே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தால் பரபரப்பான சூழல் நிலவியது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட திருமங்கலம் அதிமுக எம்எல்ஏ ஆர்பி உதயகுமார் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பொதுமக்கள் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி ஆவேச குரல் எழுப்பி வருகிறார்கள்.

முன்னதாக மக்கள் போராட்டம் அறிவித்ததன் காரணமாக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இது தொடர்பாக அரசு வெளியிட்ட அறிவிப்பில், " மதுரை மாவட்டத்தில் 'கப்பலூரில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அமைக்கப்பட்ட சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகன ஓட்டிகளிடமிருந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் திருமங்கலம், T. கல்லுப்பட்டி, பேரையூர் மற்றும் ராஜபாளையம் வாகன உரிமையாளர்கள் சங்கம் மறியலில் ஈடுபட்டு சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டது. இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் 09.07.2024 அன்று இதற்கு தீர்வு காண கூட்டம் நடத்தினார்.
அக்கூட்டத்தில் பொதுமக்கள், உள்ளூர் வாகனங்களுக்கு ஏற்கனவே 2020-ம் வருடத்திற்கு முன்னர் அளித்த விலக்கு தொடர வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக, தலைமைச் செயலாளர்தலைமையில் 18.07.2024 அன்று சென்னையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய தலைவரிடம், விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் உள்ளூர் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிப்பதிலிருந்து விலக்களித்து ஏற்கனவே 2020-ம் ஆண்டிற்கு முன்னால் வழங்கப்பட்ட சலுகைகளை தொடருமாறு கோரினார்.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைவர் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். எனவே, இந்தச் சுங்கச் சாவடியைச் சுற்றியுள்ள மக்கள் பாதிக்காதவாறு தமிழ்நாடு அரசு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது" என்று தெரிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த மக்கள் திட்டமிட்டப்படி இன்று போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications