வாய் உதார் வேணா மாட்டிக்காத வீணா! துணிவு Vs வாரிசு! மாஸ் மாட்டும் மதுரையன்ஸ்! ஆரம்பிச்சிட்டீங்களா?
மதுரை : நடிகர் அஜித் நடித்த துணிவு திரைப்படமும் நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படமும் பொங்கல் அன்று ஒரே நாளில் வெளியாக உள்ள நிலையில், போஸ்டருக்கு பெயர் போன மதுரையில் அஜித்குமார் மற்றும் விஜய் ரசிகர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள போஸ்டர் போட்டி மதுரை ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்தின் புரோமோசன் பணிகளில் படக்குழு கவனம் செலுத்தி வரும் நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான 'ரஞ்சிதமே' மற்றும் செகண்ட் சிங்கிளான தீ தளபதி யூடியூபில் வெளியானது.
தமன் இசையில் நடிகர் விஜய் பாடியுள்ள ரஞ்சிதமே பாடலும், சிம்பு பாடிய தீ தளபதி ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றிருக்கிறது. நடிகர் விஜய்யுடன் முதன்முறையாக இயக்குனர் வம்சி படிப்பள்ளி சேர்ந்திருப்பதும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பினை கூட்டி இருக்கிறது.

நடிகர் விஜய்
இந்த படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், பிரபு, பிரகாஷ் ராஜ், யோகி பாபு, சம்யுக்தா, சங்கீதா என பல தென்னிந்திய முன்னணி திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் நடிகர் விஜய் திரைவாழ்வில் இவர் நடிக்கும் 66 வது திரைப்படமாகும். இந்த படத்தினை விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

நடிகர் அஜித்
இந்நிலையில், நடிகர் அஜித் நடித்த துணிவு திரைப்படமும் நடிகர் விஜய் நடித்த திரைப்படம் வாரிசு என்ற திரைப்படமும் பொங்கல் அன்று ஒரே நாளில் வெளியாக உள்ளது. துணிவு இயக்குனர் ஹச். வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் 3 வது படமாகும் இதே கூட்டணியில் 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை' திரைப்படத்தினை தொடர்ந்து மூன்றாவது முறையாக உருவாகியுள்ள நிலையில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.

ரசிகர்கள் ஆவல்
இப்படத்தில் இடம் பெற்றுள்ள சில்லா சில்லா, காசேதான் கடவுளடா பாடல்களும் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் திரைப்பட அப்டேட்டுகள் வரும்போது அஜித் ரசிகர்களும், நடிகர் அஜித்தின் திரைப்பட அப்டேட்கள் வரும்போது விஜய் ரசிகர்களும் கலாய்ப்பதும் வாடிக்கைதான். இந்நிலையில் தான் தற்போது விஜய் அஜித் ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. காரணம் நடிகர் அஜித் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் இரு திரைப்படங்களும் விரைவில் வெளியாக இருக்கிறது.

போஸ்டர் யுத்தம்
அந்த வகையில் தற்போது சமூக வலைதளங்களில் வெடித்து போஸ்டர் யுத்தத்தில் இறங்கி இருக்கிறார்கள் மதுரை ரசிகர்கள். இரு படங்கள் தொடர்பாக ஏற்கனவே சமூக வலைதளங்களில் மோதலில் ஈடுபட்டு வரும் நிலையில், போஸ்டருக்கு பெயர் போன மதுரையில் அஜித் குமார் மற்றும் விஜய் ரசிகர்களுக்கிடையே போஸ்டர் போட்டி ஏற்பட்டுள்ளது. மதுரை மாநகர் முழுவதும் இரண்டு பேர் ரசிகர்களும் போஸ்டர் போட்டி போட்டு தங்களது ஆதரவை அவர்தம் விருப்பும் நடிகர்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.

பரபரப்பு
தற்சமயம் மதுரை மாநகரில் இரண்டு பேர் போஸ்டரும் அருகே அருகே போட்டி போட்டுக் கொண்டு ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது விஜய் ரசிகர்கள் ' 40 தொகுதி மக்களின் வாரிசு தளபதி எங்கள் விஜய்' என்றும், அஜித் ரசிகர்கள் "வாய் உதார் வேணா மாட்டிக்காத வீணா.. நம்மளோட வேலை பார்த்து ஊரே பேசும் தானா" என்ற வசனங்களுடன் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களிலும் பரவி வருகிறது.
-
அப்பா விட்டதை பிடிக்கும் மகள்.. மதுரை அரசியலில் கால் பதிக்கும் கயல்விழி அழகிரி! தவெக தான் அடுத்து? -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
விஜய் - ராகுல் சந்திப்பு நடக்காமல் போனதற்கான உண்மைக் காரணம் என்ன? அதிர்ச்சி தரும் பின்னணி -
முதல்வர் விஜய்.. பதவியேற்ற 20 நாட்களில் 6 பெரிய சறுக்கல்கள்.. சொதப்பல் மேல் சொதப்பல்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
ஏனுங்க, கொஞ்சம் கேளுங்க.. கோயம்புத்தூர்-க்கு விஜய் விசிட்.. கூடவே ஒரு சர்ப்ரைஸ்..சொன்னது யார் தெரியுமா? -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
தமிழகத்தில் 3 பவர் சென்டர்களாம்! டெல்லியில் விஜய் கால் வைத்ததும் வந்து விழுந்த விமர்சனம்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
Ajith Mother Passes Away: மூன்று வருடத்திற்குள் பெற்றோரை இழந்த அஜித்.. அம்மா இறந்ததும் வைரலாகும் குடும்ப ரகசியம்












Click it and Unblock the Notifications