Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொட்டல் வரி போட்ட மதுரை பில் கலெக்டர்.. இப்படியொரு மேட்டரா? நிலம் உள்ளோர் அறிய விளக்கம் தந்த பெயிரா

Subscribe to Oneindia Tamil

மதுரை: வீட்டுமனைக்கான பொட்டல் வரி ரசீது வழங்க ரூ.9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பில் கலெக்டர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.. இப்படியொரு செய்தி பத்திரிகைகளில் வெளியானதிலிருந்தே, பொட்டல் வரி என்பது என்ன? என்ற குழப்பம் பொதுமக்களை சூழ்ந்தது.. இதற்குதான் பெயிரா தெளிவான விளக்கம் ஒன்றை தந்துள்ளது.. பொதுமக்களின் நன்மையை கருதி, பொடடல் வரி என்றால் என்ன? என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறது.

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ஹென்றி விடுத்துள்ள அறிக்கையில், "வீட்டுமனைக்கான பொட்டல் வரி குறித்து கடந்த வாரம் பத்திரிகைகளில் வெளிவந்து பொதுமக்களிடையே பேசும் பொருளாக மாறி உள்ள சொல் இந்த வீட்டுமனை பொட்டல் வரி.

vacant land tax Pottal Vari Madurai

தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் நகராட்சி நிர்வாகத்தினால் வசூலிக்கப்படும் காலி மனை வரி ((VACANT LAND TAX) குறித்து அனைவரும் அறிந்ததே.

பொட்டல் வரி

ஆனால் தமிழ்நாட்டில் பெரும்பாலான பொதுமக்களுக்கு வீட்டுமனை பொட்டல் வரி என்கின்ற வார்த்தை பயன்பாட்டில் உள்ளது எனவும் மேலும் அதனைக் குறித்து புரிதல் இல்லாததும் எனது கைபேசிக்கு வந்த அழைப்புகள் மூலம் எனக்கு தெரிய வந்தது.

ஆகவே பத்திரிகைகளில் வரும் செய்திகளை வாசித்து செய்திகளாக கடந்து போவதை விட, செய்திகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயல்படுவது மிகச் சிறப்பானதாகும் எனக்கருதி இத்தகவலை பதிவு செய்கிறேன்.

பொட்டல் காடு வழக்க சொல்

நாம் முதலில் பொட்டல் என்றால் என்ன என்பதனை குறித்து பார்ப்போம். அதாவது புல்பூண்டுகள் கூட முளைக்காத புழுதி நிரம்பிய மிகப்பெரிய திறந்தவெளி தரிசு நிலத்தை தான் நாம் பொட்டல் நிலம் அல்லது பொட்டல் காடு என்று அழைக்கின்றோம். பொட்டல் என்னும் சொல்லானது சங்க காலம் முதலே வழக்கத்தில் இருந்து வருகிறது.

உதாரணமாக சங்க கால நூலான சிலப்பதிகாரத்தில் பாண்டிய மன்னனால் கோவலனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மன்னரின் ஆணைப்படி கோவலனின் தலை வெட்டுண்டு தண்டனை நிறைவேற்றபட்ட இடம் மதுரை மாடக்குளம் அருகே உள்ளது. இந்த இடம் இன்றளவும் கோவலன் பொட்டல் என அழைக்கப்படுகிறது.

மதுரை புறநகர் பகுதிகள்

இன்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பொட்டல் என்கின்ற வார்த்தை வட்டார வழக்கு சொற்களாக புழக்கத்திலும் - பழக்கத்திலும் வழக்கத்திலும், இருந்து வருகிறது. மேலும் மதுரை மாநகரானது மாநகராட்சி என்கின்ற அந்தஸ்தில் இருந்தாலும், மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பெரும்பாலான புறநகர் பகுதிகளில் பல பகுதிகள் இன்றளவும் கிராமங்களைப் போன்றே பொட்டல் நிலங்களாகவே இருந்து வருகின்றன.

முன்பு இப்பொட்டல் நிலங்கள் நெற்கதிர்களை போரடிக்கவும், ஊரின் பொது நிகழ்வுகளை நடத்தவும் பயன்பட்டு வந்தன. இன்றும் கூட வருவாய்த்துறை ஆவணங்களில் பொட்டல் நில வரி என்று குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.


தரிசு நிலங்கள் - நெற்கதிர்கள்

தற்பொழுது விவசாய பணிகளில் நவீன இயந்திரங்களின் வருகையின் காரணமாக பொட்டல் நிலங்களில் நெற்கதிர்களை போர் அடிக்கும் சூழல் வெகுவாக குறைந்த காரணத்தினால் ஜல்லிக்கட்டு, விளையாட்டுகள் மற்றும் அரசியல் பொதுக்கூட்டங்கள் என பொது நிகழ்வுகள் நடைபெறும் இடமாக திகழ்கிறது.

இந்நிலையில் கடந்த வாரம் செய்தித்தாள்களில் வெளியான வீட்டுமனை பொட்டல் வரி குறித்த செய்தியில் திருப்பங்குன்றம் அருகிலுள்ள பாம்பன்சாமி நகரைச் சேர்ந்தவர் தனது வீட்டுமனைக்கான பொட்டல் வரியினை (காலி மனை இட வரி) செலுத்துவதற்காக தனது வார்டில் அமைந்துள்ள மாநகராட்சி கணினி வரி வசூல் மையத்தினை அணுகியுள்ளார். அப்பொழுது அங்கு பணியில் இருந்த பில் கலெக்டர் மேற்கண்ட நபரின் மனைக்கு பொட்டல் வரி விதிக்க ரூபாய் 9000 லஞ்சம் கேட்டுள்ளார்.


காலி நில வரி வசூல்

இதனை குறித்து சம்பந்தப்பட்ட நபர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்ததின் அடிப்படையில் பில் கலெக்டர் கைது செய்யப்பட்டதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது. இந்த நிகழ்வு பத்திரிகைகளில் வெளியான பிறகு தான் வீட்டுமனை பொட்டல் வரி என ஒன்று இருப்பது குறித்து பொதுமக்கள் பலருக்கும் தெரியவந்தது.

பொதுவாக தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்பு திட்டங்களான நிறுவனங்கள், கட்டிடங்கள், வீட்டுமனை அபிவிருத்தி மற்றும் தனி வீடுகள், குடியிருப்பு திட்டங்கள் என அபிவிருத்தி செய்யும்போது காலி நிலங்களுக்கு நகராட்சி நிர்வாகம் 13 அரையாண்டுகளுக்கான காலி நில வரியினை (VACANT LAND TAX) வசூலிக்கும் முறையினை நடைமுறைப்படுத்தியிருந்தது.

நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகள்

தற்போது நகராட்சி நிர்வாகம் கடந்த 2024 பிப்ரவரி மாதம் முதல் நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் அமைந்துள்ள காலி மனைகளுக்கும் - நிலங்களுக்கும் கூட 13 அரையாண்டுகளுக்கு காலி இட வரி வசூலிக்கும் முறையை நடைமுறைப்படுத்தியுள்ளது.

மேற்கண்ட குறிப்புகள் மற்றும் தகவல்கள் மூலம் பொதுமக்களுக்கு வீட்டுமனை பொட்டல் வரி மற்றும் காலி நில வரியினை குறித்த விவரங்கள் மற்றும் புரிதல்கள் தெளிவான முறையில் தகவலாக கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்" என்று டாக்டர். ஆ.ஹென்றி தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+