என்னங்க சாப்பாடு இது.. வாயிலயே வைக்க முடியல! மதுரையில் குமுறிய வீரர்கள்! கதவு இல்லாமல் கழிப்பறை வேற!
மதுரை: மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான குடியரசு தின குழு விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்ட உணவு தரமின்றி வழங்கப்பட்டதாக திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், பள்ளிக் கல்வித் துறை மற்றும் விளையாட்டுத்துறை அதிகாரிகள் மெத்தனப்போக்குடன் செயல்பட்டதாக உடற்கல்வி ஆசிரியர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், மதுரை எம்ஜிஆர் விளையாட்டு அரங்கத்தில் 65 ஆவது குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடங்கி வரும் பதினோராம் தேதி வரை நடைபெறுகிறது.

இறகுப்பந்து, மேசைப்பந்து, டென்னிஸ், கபடி மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு இடையேயான மாநில அளவிலான போட்டி நடைபெறுகிறது.
இதனையடுத்து, நேற்று மாலை முதலே அனைத்து பகுதிகளில் இருந்தும் விளையாட்டு ஆசிரியர்களுடன் மாணவ மாணவியர்கள் வருகை புரிந்தனர். இந்நிலையில் இன்று காலையில் வழங்கப்பட்ட உணவு உண்பதற்கு தகுதியற்ற முறையிலும், பிற்பகல் உணவு இடைவேளை கடந்தும் சரியான உணவு வழங்கப்படவில்லை என மாணவிகள் விளையாட்டுத்துறை ஆசிரியர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விளையாட்டை ஒருங்கிணைக்க கூடிய ஒருங்கிணைப்பாளர்கள் செய்வதறியாது அவர்களை சமாதானப்படுத்தி உடனடியாக தற்காலிகமாக அருகில் இருக்கக்கூடிய வேறு ஒரு உணவகத்தில் இருந்து குஸ்கா உள்ளிட்டவைகளை வரவழைத்து மாணவிகளுக்கு வழங்கினர். என்னதான் தற்காலிகமாக உணவு வழங்கினாலும் தாங்கள் தங்கக் கூடிய இடம் போதுமானதாக இல்லை என்றும் உணவு உண்ணும் படியாக இல்லை என்றும் வேதனைப்பட தெரிவித்தனர்.
மாணவ மாணவிகளை அழைத்து வந்த உடற்கல்வி ஆசிரியர்கள் பேசும் போது பள்ளிக்கல்வித்துறை மூலம் நடத்தப்படும் இத்தகைய போட்டியில் தங்குவதற்கு தகுந்த இடமும் உண்பதற்கு சரியான உணவும் வழங்கப்படாதது வேதனை அளிக்கிறது எனவும் தங்கள் பங்கிற்கு ஆதங்கப்பட்டனர்.
மேலும் ஏராளமான மாணவிகள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள வந்திருக்கும் நிலையில் கழிவறை கூட ஒழுங்காக இல்லை.. கதவுகள் இல்லாமலும், உடைந்தும் இருக்கிறது. இப்படி இருந்தால் எப்படி என குற்றம் சாட்டினர். இந்த நிலையில் இது தொடர்பாக விளையாட்டுத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது மாணவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உணவு ஆர்டர் கொடுத்த இடத்தில் சில பிரச்சினைகள் இருந்தது உண்மைதான். அது சரி செய்யப்பட்டு விட்டது" என விளக்கம் அளித்துள்ளனர்.
-
தேசியக்கொடியை கொண்டு வாங்க! டெல்லியில் லேண்ட் ஆனதும் ஆப்ஜித் தீப்கே பதிவு.. பரபரப்பில் ஜந்தர் மந்தர் -
கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்.. வேலையை காட்டிய டெல்லி போலீஸ்! 6 பேர் அதிரடி கைது! -
திருப்பரங்குன்றம் தீபம்.. அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் பதிலுக்கு தமிழிசை சௌந்திரராஜன் கண்டனம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications