எங்களை வைத்து வழக்கை முடிச்சிட்டாங்க! காரணமான ஸ்டாலின்.. திறவுகோலாக ஜெயலலிதா! உருகிய ரவிச்சந்திரன்!
மதுரை : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வெளிநாட்டு உள்நாட்டு சக்திகள் தொடர்பில் உள்ளன எனவும், எங்களை வைத்து இந்த வழக்கை முடித்துக் கொண்டார்கள் என மதுரை மத்திய சிறையில் இருந்து வெளியான ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதைப் போல தங்களையும் விடுவிக்க வேண்டும் என நளினி உள்ளிட்ட ஆறு பேர் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்திருந்த நிலையில் நேற்று உச்சநீதிமன்றம் 6 பேரை விடுதலை செய்து தீர்ப்பு அளித்துள்ளது.
இதனைத் தொடந்து நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்டோர் வேலூர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இவ்வழக்கில் ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டிருந்த பேரறிவாளன் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

ரவிச்சந்திரன்
இந்நிலையில் தனது சொந்த ஊரான சூரப்பநாயக்கன்பட்டியில் கிராமத்தில் இருந்த நிலையில் இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். இந்நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகல் கிடைக்கப் பெற்றதை தொடர்ந்து சூரப்ப நாயக்கன்பட்டியில் இருந்து ரவிச்சந்திரன் மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு விடுதலை தொடர்பான ஆவணங்களில் கையெழுத்திட்டார்.

விடுதலை
பின்னர் அவர் விடுதலை செய்யபட்ட நிலையில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாகினர். தொடர்ந்து பேசிய ரவிச்சந்திரன்," இந்த துயரம் எனக்கானது மட்டும்தான், ஆனால் என் மகிழ்ச்சி அனைவருக்குமானது. செங்கோடியின் தியாகத்தை நெஞ்சில் ஏந்துகிறேன். இதற்கு காரணமாக இருந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், விடுதலைக்கு திறவுகோல் தந்த ஜெயலலிதாவிற்கும், விடுதலையை உறுதி செய்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

உலக தமிழ் இனம்
மகிழ்ச்சியை விட இந்த தீர்ப்பு ஆறுதலைத் தருகிறது, விடுதலைக்கு குரல் கொடுத்து, போராடி, சிறைப்பட்ட தமிழ் திராவிட உணர்வாளர்களுக்கு நன்றி. உலக தமிழ் இனத்தின் அன்பை என்னால் என்றும் மறக்க முடியாது. அரசியல் ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் விடுதலைக்கு குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி. இத்தனை ஆண்டுகளாக எனக்காக இருந்த குடும்பமும், தோழர்கள் உடனும்தான் எனக்கான அடுத்த பயணம். சமூகத்திற்கு பயன்படும் வகையில்தான் என் வாழ்வு இருக்கும்

வெளிநாட்டு உள்நாட்டு சக்திகள்
என்னுடைய நூல் எழுதும் பணிகள் தொடரும். எங்கள் விடுதலைக்காக உழைத்திட்ட உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனைவருக்கும் நன்றி. என் தாயாரின் 30 ஆண்டுகால துயரம், வலி முடிவுக்கு வந்துள்ளது. இந்த 30 ஆண்டுகளில் எஞ்சியது அன்புள்ள உறவுகள் மட்டும்தான். இந்த 30 ஆண்டுகளில் நான் இழந்ததற்கு கணக்கே இல்லை.இந்த வழக்கில் வெளிநாட்டு உள்நாட்டு சக்திகள் தொடர்பில் உள்ளன. எங்களை வைத்து இந்த வழக்கை முடித்துக் கொண்டார்கள். தமிழரின் அறம்தான் எங்களை இன்று விடுதலை செய்துள்ளது" என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications