அலறிய பெண்..! துப்பாக்கியால் சுட்ட போலீஸ்..! ரவுடி குருவி விஜய் சிக்கியது எப்படி? மதுரை பரபரப்பு!
மதுரை அண்ணாநகரில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை: அண்ணாநகரில் நள்ளிரவு நேரத்தில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ரவுடியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தப்பி ஓட முயன்ற போது காலில் சுட்டு பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
காவல்துறையினரால் சுடப்பட்ட ரவுடியின் பெயர் குருவி விஜய் என்பதாகும். மதுரை அண்ணாநகரில் செண்பகத்தோட்டம் மீனவ சங்க கட்டிடம் அருகே ஒரு பெண்ணை நேற்று நள்ளிரவு ரவுடி குருவி விஜய் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றபோது அந்தப்பெண் கத்தி சத்தம் போட்டார்.

சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தனர். சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வந்தனர். காவல்துறையினரைப் பார்த்ததும் குருவி விஜய் மற்றும் அவனது கூட்டாளிகள் போலீசாரை தாக்க முயன்றனர்.
இதனையடுத்து காவல்துறையினர் தற்காப்புக்காக குருவி விஜய் காலில் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ரவுடிக்கு காலில் காயம் ஏற்பட்டது. ரவுடியையும் அவனது கூட்டாளிகளையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
காலில் காயம் பட்ட குருவி விஜய் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications