சாத்தான்குளம் வழக்கு! ஜெயராஜ் மனைவிக்கு ரூ 1.04 கோடி நிவாரணம்! 9 போலீஸாருக்கு எவ்வளவு அபராதம்?
மதுரை: சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கில் 9 போலீஸாருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கான அபராத தொகை எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளலாம்.
சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், காவலர்கள் சாமதுரை, முத்துராஜ், செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ் மற்றும் வெயில்முத்து, சார்பு ஆய்வாளர் பால்துரை ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் பால்துரை ஏற்கனவே உடல்நல பிரச்சனையால் இறந்துவிட்டார். மீதியுள்ள 9 பேரும் இந்த வழக்கை சந்தித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது 6 ஆண்டுகள் கழித்து இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 23 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த வழக்கில் கைதான 9 போலீஸாரும் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் அறிவித்தார்.
மேலும் இவர்களுக்கான தண்டனை விவரங்கள் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டன. அதில் 9 போலீஸாருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. சுமார் 650 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் நீதிபதி முத்துக்குமரன் கூறியிருப்பதாவது: காவல் நிலைய மரணங்கள் இங்கு மட்டுமல்ல, உலகம் எங்கும் நடக்கிறது.
குறிப்பாக அமெரிக்காவின் ஜார்ஜ் பிளாய்டு முதல் சிவகங்கை மாவட்டம் மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு வரையிலும் காவல் நிலையங்களில் நடக்கும் சித்ரவதை மரணங்களை எடுத்துக்காட்டாக கூறலாம்.
தமிழக காவல் துறையில் பல நேர்மையான அதிகாரிகள் உள்ளனர். பொதுவாக போலீஸ் நிலையங்களில் நடந்த குற்றச் சம்பவங்களுக்கு நேரடி சாட்சிகள் இருக்காது. இந்த வழக்கில் கேமரா காட்சிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
சக பெண் போலீஸார் உள்ளிட்டோர் இந்த 9 பேருக்கும் எதிராக சாட்சியங்கள் அளித்துள்ளனர். போலீஸ் நிலையங்களில் நடக்கும் மரணங்களை சகித்துக் கொள்ள முடியாது என தமிழக அரசு அளித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அது போல் மத்திய அரசு சார்பிலும் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார்கள். இந்த சம்பவம் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கும் வகையிலேயே இருந்தது. அதற்கு பதிலளிக்கும் வகையிலும் தீர்ப்பு இருக்க வேண்டும் என இந்த கோர்ட் முடிவு செய்தது.
இனியும் இவ்வாறு நிகழக் கூடாது என்பதற்கு உதாரணமாகவும், குற்றவாளிகள் இனிமேல் திருந்த வாய்ப்பில்லை என்பதாலும் பொதுமக்கள் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என அவர்கள் நினைப்பதாலும் 9 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்படுகிறது என நீதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும் அபராத தொகை மொத்தமாக ரூ 1.04 கோடியை பெனிக்ஸின் தாயார் செல்வராணியிடம் கொடுக்குமாறு உத்தரவிட்டனர்.
இந்த தீர்ப்பில் ஒவ்வொருவருக்கும் கொடுத்த தண்டனை விவரங்களை பார்க்கலாம்.
இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கான அபராதம் 24 லட்சம், இரண்டாவது குற்றவாளி பாலகிருஷ்ணனுக்கு ரூ 16.80 லட்சம், 3ஆவது குற்றவாளி ரகு கணேஷ் ரூ 5.20 லட்சம், 4ஆவது குற்றவாளி முருகனுக்கு அபராதம் ரூ 10.10 லட்சம் விதிக்கப்பட்டுள்ளது.
ஏ5 சாமதுரைக்கு ரூ. 5.60 லட்சம் அபராதம், ஏ6 முத்துராஜுக்கு ரூ 3.20 லட்சம் அபராதம், ஏ7 செல்லதுரைக்கு ரூ 14.40 லட்சம் அபராதம், ஏ8 தாமஸ் பிரான்சிஸுக்கு ரூ 10 லட்சம், ஏ9 வெயில்முத்துவுக்கு ரூ 10.54 லட்சம் என பெனிக்ஸின் தாயாருக்கு ரூ 1 கோடியே 40 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படுகிறது.
அந்த 9 பேரும் கொடுக்க தவறினால், அந்த சொத்துக்களை பறிமுதல் செய்து அந்த பணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications