மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மதுரை மக்களே.. சித்திரை திருவிழாவை கொண்டாடிட்டு இரவு 8 மணிக்கு கூட ஓட்டு போடுங்க.. தேர்தல் ஆணையம்

Google Oneindia Tamil News

மதுரை: மதுரையில் சித்திரை திருவிழாவையொட்டி வாக்கு பதிவு நேரம் இரவு 8 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவை மற்றும் சட்டசபை தேர்தல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்குகிறது. இது தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது.

பள்ளி, கல்லூரி தேர்வு தேதி, திருவிழாக்கள், மதரீதியிலான சடங்குகளை சரிபார்த்த பின்னரே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறியிருந்தார். ஆனால் மதுரையில் ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தலை நடத்த அடுத்த நாளே எதிர்ப்பு கிளம்பின.

 ஸ்ரீபெரும்புதூரில் வைத்திலிங்கம்.. திண்டுக்கல்லில் ஜோதிமுத்து.. பாமக இறுதிக்கட்ட வேட்பாளர் லிஸ்ட்! ஸ்ரீபெரும்புதூரில் வைத்திலிங்கம்.. திண்டுக்கல்லில் ஜோதிமுத்து.. பாமக இறுதிக்கட்ட வேட்பாளர் லிஸ்ட்!

திருவிழா

திருவிழா

மதுரையில் ஆண்டுதோறும் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இதை காண லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடுவர். இந்த திருவிழா ஏப்ரல் 17, 19 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

வாக்குப் பதிவு தேதி

வாக்குப் பதிவு தேதி

இந்த நிலையில் மக்கள் திருவிழாவை காண்பரா இல்லை வாக்குச் சாவடிகளுக்கு செல்வரா என்ற கேள்வி எழுந்தது. மேலும் பெருவாரியான மக்கள் வாக்களிக்க வரமாட்டார்கள் என்பதால் வாக்குப் பதிவு தேதியை மாற்றுமாறு கோரிக்கைகள் எழுந்தன.

வாக்குப் பதிவு

வாக்குப் பதிவு

இந்த நிலையில் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதசாஹூ தலைமையிலான ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. அதில் பேசிய அவர் தமிழகத்தில் காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கும்.

ஒரு மணி நேரம் நீட்டிப்பு

ஒரு மணி நேரம் நீட்டிப்பு

வழக்கமாக வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு முடிவடையும். ஆனால் மக்களின் சிரமம் கருதி மேலும் ஒரு மணி நேரம் நீட்டித்து மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடத்தப்படும்.

இரவு 8 மணி வரை

இரவு 8 மணி வரை

குறிப்பிட்ட தொகுதியான மதுரையில் மட்டும் தேர்தலை மாற்றுவது சிரமமான காரியம். எனவே அங்கு வாக்குப் பதிவை நீட்டிக்க முடிவு செய்துள்ளோம். அதன்படி காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெறும் என்றார்.

English summary
Chief Electoral officer Sathyapradha Sahoo says that polling will start in TN by 7 am and ends at 6 pm. In madurai the ending time is extended upto 8 pm.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X