பாத்தீங்களா.. ஒருத்தருக்கே டெண்டரா?.. திமுகவில் பெருகும் அத்துமீறல்கள்.. லிஸ்ட் போட்டு தாக்கிய மாஜி

செல்லூர் ராஜு திமுகவை விமர்சித்து பேட்டி தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

மதுரை: நாளுக்கு நாள் ஆளுங்கட்சியினரின் அத்துமீறல் அதிகரிக்க துவங்கிவிட்டதாகவும், இப்படியே போனால் மதுரை விரைவில் அமைதிப்பூங்கா என்ற அடையாளத்தை இழந்துவிடும் என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ காட்டமாக தெரிவித்துள்ளார்.

மதுரை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ புகார் மனு ஒன்றை தந்திருந்தார்.. அந்த மனுவில் மதுரையில் தற்போது நடந்து வரும் வன்முறைகளை பட்டியலிட்டிருந்தார்.

மேலும், மதுரை மாநகரில் ஒப்பந்தப் புள்ளிகள் கோருவதிலிருந்து பல்வேறு வகையிலும் ஆளுங்கட்சியினரின் அத்துமீறல் அதிகரிக்க துவங்கியுள்ளதாகவும், இதனை உடனடியாக மதுரை மாநகராட்சியும், காவல்துறையும் கவனத்தில் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

 ஒப்பந்த புள்ளிகள்

ஒப்பந்த புள்ளிகள்

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜு சொன்னதாவது: "மாநகர் மதுரையில் சாலைகள் மிகவும் பழுதடைந்துள்ளன. இப்போது மழைக்காலம் என்பதால் போர்க்கால அடிப்படையில் அவற்றை உடனடியாக சரி செய்ய வேண்டும். இதற்காக எங்களது ஆட்சியில் வழங்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளை தற்போதைய திமுக அரசு ரத்து செய்துள்ளது. புதிய ஒப்பந்தப்புள்ளிகளை அறிவித்து வேலைகளைத் தொடங்க வேண்டும்.

டெண்டர்கள்

டெண்டர்கள்

தற்போது மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டுள்ள ஒப்பந்தப்புள்ளி கோருதலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன... ஒருத்தரே எடுத்து சென்று, அவர் மூலமாகவே டெண்டர் விட்டுள்ளார்.. அதேபோன்று வீட்டு வசதி வாரியத்தில் நடைபெற்ற டெண்டரில் ஒரு சில நபர்களே கலந்து கொள்ளும் வகையில் முறைகேடு நடைபெற்றுள்ளன.. 155 பேர் கலந்து கொள்ள வேண்டிய நிலையில், அதில் யாருமே கலந்து கொள்ளாதபடி செய்துவிட்டார்கள்.. இதேபோன்று திண்டுக்கல்லில் நடைபெற்று அக்குறிப்பிட்ட டெண்டரையே ரத்து செய்துள்ளனர். ஆளுங்கட்சியினரின் அத்துமீறல் அதிகரித்துள்ளது.

 சாலை தடுப்புகள்

சாலை தடுப்புகள்

சட்டத்தின் பிடியில் அனைத்தையும் கொண்டு வர வேண்டும்.. மெல்ல மெல்ல இப்படித்தான் ரவுடிகள், கட்டப்பஞ்சாயத்து என்று பெருகிவிடும்.. மதுரையின் அமைதி சீர்கெட்டுவிடும்.. அதனால் ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளோம்.. மதுரையில் அமைக்கப்பட்டுள்ள சாலைத் தடுப்புகள் பல்வேறு இடங்களில் தேவையற்றதாக உள்ளன. இவற்றையெல்லாம் குழு ஒன்று அமைத்து எங்கு தேவையோ அங்கு அமைத்துவிட்டு தேவையற்ற இடங்களில் உள்ள சாலைத் தடுப்புகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். இவை பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக உள்ளன. அதுக்காக எல்லா இடங்களிலும் உள்ள தடுப்பு சுவர்களை அப்புறப்படுத்த சொல்லவில்லை.

குற்றங்கள்

குற்றங்கள்

குறிப்பாக மதுரை அண்ணா பேருந்துநிலையத்திலிருந்து கோரிப்பாளையம் வரை உள்ள சாலையில் சாலைத் தடுப்பு தேவையற்றது... ஜிஎச்-க்கிட்ட போக்குவரத்து பாருங்க.. அங்கே எதுக்கு விபத்து? அங்கே ஆம்புலன்ஸ் சென்று வருவதற்கு நெருக்கடியாக உள்ளது.. ஆம்புலன்ஸ் விரைந்து வந்து, ஒரு உயிரை காப்பாற்றகூட போக முடியாத நிலைமை உள்ளது.. இதுபோன்ற சாலைத் தடுப்புகள் நகரின் பல்வேறு குறுகிய சாலைகளில் அமைக்கப்பட்டுள்ளன.

 பரிசீலனை

பரிசீலனை

சாலைகள் அகலமாகவும் விரிவாகவும் உள்ள இடங்களில் மட்டுமே சாலைத்தடுப்பு அமைப்பது குறித்து அரசு பரிசீலனை செய்ய வேண்டும். ஒருவழிப்பாதைகளில்கூட சாலைத்தடுப்பு அமைப்பது தேவையற்ற ஒன்றாகும்... மதுரையில் உயர்மட்டப்பாலங்கள் அமைப்பது குறித்த பொதுப்பணித்துறை அமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறோம். உடனடியாக அதற்கான பணிகளை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

 கோரிக்கை

கோரிக்கை

அதிமுகவைப் பொறுத்தவரை ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்களின் நலன் மீது அக்கறை கொண்டே இவற்றையெல்லாம் கோருகிறோம். இதில் எந்தவித காழ்ப்புணர்ச்சியும் கிடையாது... அதேபோன்று அண்மைக் காலமாக மதுரை மாநகரில் செயின் பறிப்பு, கொலை, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இவற்றையெல்லாம் மாநகர காவல்துறை கட்டுப்படுத்த வேண்டும்.

கீரைத்துறை

கீரைத்துறை

கீரைத்துறையில் போலீஸ் ஸ்டேஷன் இருந்தது.. அதை புதிதாக கட்டிடம் கட்டி வில்லாபுறத்துக்கு கொண்டு போய்ட்டாங்க..அதனால், அங்கே இப்போ காவல் நிலையம் இல்லை என்பதால், புறக்காவல்நிலையம் ஒன்றை அமைக்க வேண்டும்... தற்போது இயங்காமல் உள்ள புறக்காவல் நிலையங்களை உடனடியாக இயக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இரவு நேர ரோந்து காவலை அதிகரிக்க வேண்டும்.. மக்களுக்கு பாதுகாப்பு தரணும்.. பெரியார் பஸ் ஸ்டாண்டில் நேற்றுகூட 2 திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன.. இதெல்லாம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+