குஷ்பு.. இளமை.. தொட்டால் சிவக்கும் அழகு.. செல்லூர் ராஜு.. எலக்ஷன் மேட்டரு.. பீல் ஆயிட்டாப்ள!
Recommended Video

மதுரை: குஷ்பூ இளமை வயதில் தொட்டால் சிவக்கும் அழகில் இருந்தார். எனவே அப்போது கூட்டம் வந்தது. ஆனால் தற்போது வராது என அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
மதுரை கோச்சடையில் அதிமுக அலுவலகம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜூ பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் ப.சிதம்பரம் முதல் குஷ்பு வரை பேட்டியில் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்து தமிழகத்திற்கு கேடுதான் செய்தார். நன்மை செய்யவில்லை. ப.சிதம்பரம் நினைத்தால் தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களை கொடுத்திருக்கலாம். தென் இந்தியாவை சேர்ந்த ப.சிதம்பரம் காளைகளை காட்சிப்படுத்தப்பட்ட பட்டியலிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கவில்லை. ப.சிதம்பரம் தனது குடும்பத்தை மட்டுமே வளர்த்தார்.

உதவாக்கரை
கையாலாகாதவர். உப்பிற்கு கூட பயனில்லாத உதவாக்கரையாக இருந்தவர் ப.சிதம்பரம். ப.சிதம்பரம் தமிழர் என்ற உணர்வுடன் செயல்படவில்லை. தமிழர் என்பதற்கு அடையாளமாய் வேட்டியை மட்டுமே கட்டிக் கொள்பவர் ப.சிதம்பரம். ஜெயலலிதா வழியைப் பற்றி ப.சிதம்பரத்திற்கு என்ன தெரியும்.
நிர்வாக செயல்பாடு குறித்து தெரியாமல் 5 சவரன் நகைக்கடன் பெற்றுள்ள கடன் ரத்து செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறுவது வேடிக்கையாக உள்ளது.

தவறு
கூட்டுறவுத் துறையில் பொய்யான, தவறான தேர்தல் அறிக்கையை மு.க ஸ்டாலின் வெளியிட்டுளார். நிர்வாகத்தில் என்ன என்பது தெரியாமல் தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார். கூட்டுறவு சங்கத்தில் 5 சவரன் அடகு வைத்த நகைக் கடனாக 20 முதல் 25 ஆயிரம் கோடி கடன் வழங்கியுள்ள நிலையில் அதனை தள்ளுபடி செய்வதாக மு.க.ஸ்டாலின் கூறுவது வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்பது போன்று உள்ளது.
ரொம்ப கோபம்.. காங்கிரசின் முடிவால் கடுப்பான குஷ்பு.. இதுதான் காரணம்- வீடியோ

விளம்பில் ஸ்டாலின்
தோல்வி விளிம்பிற்கு சென்றுவிட்டார் மு.க.ஸ்டாலின். மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற முடியாத பல்வேறு திட்டங்களை தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளார். அ.தி.மு.க நிர்வாகத்தை பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு என்ன தகுதி உள்ளது,மு.க.ஸ்டாலின் அரசனாக இருந்த போது நாட்டு மக்களுக்கு நலன் செய்யாதவர் எப்படி ஆண்டியாக இருக்கும் போது எப்படி மக்களுக்கு நல்லது செய்ய முடியும்.

குஷ்புவுக்கு ஓட்டு வராது
குஷ்பு வாட்டசாட்டமாக இருந்த போதே அவரது பிரச்சாரத்தை கண்டு மக்கள் வாக்களித்ததே கிடையாது. குஷ்புவின் பிரச்சாரத்தை பார்ப்பவர்கள் அனைவரும் அவர் ஆதரிப்பவர்களுக்கு வாக்களிப்பது கிடையாது. போற போக்கில் அடுத்த தேர்தலில் மு.க ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக கூட வர முடியாது.

கத்துக்குட்டி
ப.சிதம்பரத்தையே நாங்கள் பெரிய பொருட்டாக நினைக்கவில்லை, கார்த்திக் சிதம்பரம் எங்களுக்கு கத்துக்குட்டி. கூடா நட்பு கேடா நட்பாக முடிந்தது என கலைஞர் தெரிவித்தார். திமுக காங்கிரஸ் கட்சியிடம் கொத்தடிமையாக உள்ளது. காகித பூ மனக்கலாம், கருவாடு கூட மீனாகலாம் ஆனால் திமுக என்ற கட்சியை மீண்டும் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்தார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications