கும்பமேளா! நெல்லை டூ காசிக்கு சிறப்பு ரயில்! ஒருவருக்கு கட்டணம் எவ்வளவு? என்னென்ன வசதிகள்?
மதுரை: நெல்லையில் இருந்து காசி கும்பமேளா நிகழ்வுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில் இயக்கப்படும் நிலையில் அந்த ரயிலில் பயணம் செய்ய ஒரு நபருக்கு என்ன கட்டணம் வசூலிக்கப்படும், எந்த மாதிரியான வசதிகள் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள காசியில் ஜனவரி 13 ஆம் தேதி முதல் பிப்ரவரி 26 ஆம் தேதி வரை கும்பமேளா நடைபெறுகிறது. இது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. இந்த விழாவில் காசி கங்கை நதியில் புனித நீராட பொது மக்கள் விரும்புவார்கள்.

அந்த வகையில் இந்த ஆண்டு காசி கும்பமேளாவிற்கு பயணிகள் செல்வதற்கு வசதியாக தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு சுற்றுலா ரயில் இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய ரயில்வே சார்பில் வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது: பயணிகளின் வசதிக்காக நெல்லையில் இருந்து தென்காசி, ராஜபாளையம், மதுரை, திருச்சி, தஞ்சை வழியாக காசிக்கு சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது.
அதன்படி சிறப்பு சுற்றுலா ரயில் நெல்லையில் இருந்து பிப்ரவரி 5ஆம் தேதி அதிகாலை 1 மணிக்கு புறப்பட்டு மதுரை வரும். அங்கிருந்து காலை 6 மணிக்கு காசிக்கு புறப்படும். பிப்ரவரி 7ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு பனாரஸ் சென்றடைகிறது.
இதையடுத்து பிப்ரவரி 7ஆம் தேதி மாலை கங்கா ஆரத்தியை பார்த்து விட்டு பிப்.8 ஆம் தேதி முழுவதும் பிரக்யராஜ் பகுதியில் சுற்றுலா அழைத்து செல்லப்படும். அடுத்த நாளான பிப்.9 ஆம் தேதி காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சாரநாத் கோயில்களுக்கு சுற்றுலா செல்லுதல், பிப் 10 அயோத்தியா சரயு நதி மற்றும் ராமஜென்ம பூமி கோயில் வழிபாடு செய்துவிட்டு அன்று இரவு நெல்லையில் இருந்து புறப்படும்படி சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சுற்றுலா ரயில் பிப்ரவரி 13 ஆம் தேதி அதிகாலை 2.50 மணிக்கு மதுரைக்கு வரும். அங்கிருந்து காலை 7.30 மணிக்கு புறப்பட்டு நெல்லைக்கு செல்லும். இந்த ரயில் தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர் போன்ற ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த 12 நாள் சுற்றுலாவுக்கு ரயிலில் பயணம் செய்ய கட்டணம், தங்குமிடம், கைடுக்கான கட்டணம், பாதுகாப்பு அலுவலர், உணவு வகைகள், சுற்றுலா போக்குவரத்து உள்ளிட்டவை உள்பட ஒரு நபருக்கு ரூ 26,850 வசூலிக்கப்படுகிறது.
குளிர்சாதன ரயில் பெட்டி பயணம், சிறப்பு வசதிகளுக்கு கட்டணமாக நபர் ஒருவருக்கு ரூ 38,470 மற்றும் ரூ 47,900 வசூலிக்கப்படுகிறது. இந்த சுற்றுலா ரயிலில் பயணம் செய்ய முன்பதிவுக்கு 8287931977 மற்றும் 8287932122 என்ற அலைபேசி எண்களில் மதுரை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications