திருப்பரங்குன்றத்தில் தர்கா அருகே தீபம்! நீதிபதி சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிராக.. அரசு அவசர வழக்கு
மதுரை: திருப்பரங்குன்றத்தில் சிக்கந்தர் தர்காவுக்கு அருகே தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று, இந்துத்துவா அமைப்பை சேர்ந்த ராம ரவிக்குமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீப தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து திருப்பரங்குன்றத்தில் கலவரம் ஏற்பட்டிருக்கிறது. எனவே உத்தரவை எதிர்த்து நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வில் தமிழக அரசு தரப்பு முறையீடு செய்துள்ளது.
திருப்பரங்குன்றத்தில் கலவரம் வெடித்ததில், 2 காவலர்களுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. தடுப்புகளை உடைத்துக்கொண்டு இந்துத்துவா அமைப்பினர் கோயிலுக்கு உள்ளே செல்ல முயன்றுள்ளனர். இதனையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்திருக்கிறார்.

இந்நிலையில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை அமர்வில் தமிழ்நாடு அரசு முறையீடு செய்திருக்கிறது. தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன், நீதிபதி ஜெயச்சந்திரன் முன் முறையீடு செய்தார். இதை ஏற்ற நீதிபதி, நாளை முதல் வழக்காக இது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளார்.
இருப்பினும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவை காட்டி, தங்களை மலைக்கு மேலே அனுமதிக்க வேண்டும், 144 தடை உத்தரவு தானே! குறைந்தபட்சம் 3 பேரை அனுமதிக்கலாம். எனவே மனுதாரரையும் உடன் 2 பேரையும் அனுமதிக்க வேண்டும் என்று இந்துத்துவா அமைப்பு வழக்கறிஞர் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார். ஆனால், போலீசார் உறுதியாக அனுமதியளிக்க மறுத்துவிட்டனர். வழக்கு தொடர்பாக முறையீடு செய்யப்பட்டிருப்பதால் அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளனர்.
முன்னதாக இந்த வழக்கை விசாரித்த ஜி.ஆர்.சுவாமிநாதன் நீதிமன்றத்தில் காவலுக்கு உள்ள சிஐஎஸ்எஃப் வீரர்களின் உதவியுடன் கோயிலுக்கு சென்று விளக்கை ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications