Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமன்னா வருவாங்களா சார்? சுந்தர்.சி களமிறக்க போகும் நட்சத்திர குரூப்! குஷ்பூவால் அடிக்கும் அதிர்ஷ்டம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மதுரை மத்திய தொகுதி திடீரென அதிக கவனம் பெறும் விஐபி தொகுதியாக மாறியுள்ளது. திமுகவின் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் 3வது முறையாக களமிறங்கும் நிலையில், அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி சார்பில் திரைப்பட இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளார். இந்நிலையில், மதுரை மத்திய தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள சுந்தர்.சி அதிமுகவுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 20 நாட்கள் மட்டுமே பிரச்சாரத்துக்கு இருப்பதால், தனக்கு நெருக்கான நடிகர், நடிகைகள் அவர் பிரச்சாரத்து களமிறக்கலாம் என சொல்லப்படுகிறது.

2026 தேர்தலை முன்னிட்டு அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி இணைந்துள்ளது. அந்த கூட்டணியில் புதிய நீதிக்கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

TN Election Exclusive Tamil Nadu Assembly Election 2026 Khushbu Sundar C

அதில் ஒரு தொகுதியை அதிமுக ஒதுக்கியதுடன், மற்றொரு தொகுதியை பாரதிய ஜனதா கட்சி ஒதுக்கியதாக கூறப்படுகிறது. அதிமுக வழங்கிய தொகுதியாக மதுரை மத்திய தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு இரட்டை இலை சின்னத்தில் சுந்தர்.சி போட்டியிடுவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மத்திய தொகுதி

மதுரை மத்திய தொகுதியில் நேரடியாக அதிமுக போட்டியிடாததால் ஆரம்பத்தில் கட்சியினரிடையே சிறிது வருத்தம் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், தற்போது சுந்தர்.சி இரட்டை இலை சின்னத்தில் களம் இறங்கியிருப்பதால், அதிமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் பணியாற்ற தயாராக உள்ளனர். இந்த தொகுதியில் கடந்த 2 தேர்தல்களில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெற்றி பெற்றுள்ளார். குறிப்பாக 2016 தேர்தலில் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவர், 2021 தேர்தலில் அதிமுக போட்டியிடாததால் எளிதில் வெற்றி பெற்றார்.

சுந்தர் சி

இந்த முறை புதிய முகமாக சுந்தர்.சி களமிறங்கியிருப்பது, இந்த தொகுதியில் போட்டியை கடுமையாக்கும் என கூறப்படுகிறது. தற்போது தேர்தல் பிரச்சாரத்திற்கு சுமார் 20 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், சுந்தர்.சி தனது பிரச்சார திட்டங்களை தீவிரமாக ஆலோசித்து வருகிறார். அதிமுக நிர்வாகிகளுடன் இணைந்து பிரச்சார திட்டம் குறித்து அவர் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அவருக்கு நெருக்கமான நடிகர், நடிகைகள் தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கலாம் எனவும் கூறப்படுகிறது.

குஷ்பூ பிரச்சாரம்

குறிப்பாக அவரது மனைவியும் நடிகையுமான குஷ்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டால், அது வாக்காளர்களிடையே கூடுதல் கவனம் பெறும் என அதிமுகவினர் கூறுகின்றனர். மதுரை மத்திய தொகுதியில் முஸ்லிம் வாக்காளர்கள் கணிசமாக இருப்பதாக கூறப்படுகிறது. நடிகை குஷ்பு அந்த சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரது பிரச்சாரம் வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக சிலர் சொல்கின்றனர்.

மதுரை மத்திய தொகுதி

மேலும், சுந்தர்.சி ஆதரவாக அவரது நண்பர் நடிகர்கள் மற்றும் அதிமுக ஆதரவு கொண்ட திரைப்பட பிரபலங்களும் பிரச்சாரத்தில் ஈடுபடலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதனால் தேர்தல் முடியும் வரை மதுரை மத்திய தொகுதி மாநில அளவில் கவனம் பெறும் முக்கிய தொகுதியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுந்தர்.சி போன்ற திரைப்பட பிரபலத்தின் வருகையால், இந்த தொகுதி அரசியல்வாதிகளிடையே மட்டுமின்றி பொது மக்களிடையேயும் அதிக கவனம் பெறத் தொடங்கியுள்ளது.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

குறிப்பாக எதிரணியில் வலுவான வேட்பாளராக உள்ள பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை எதிர்கொள்வதால், இந்த போட்டி கடுமையாக இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. சுந்தர்.சி களமிறங்கியிருப்பதால் மதுரை நகரின் மத்திய தொகுதி இந்த தேர்தலில் மிக முக்கியமான 'விஐபி' தொகுதியாக மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மதுரையில் இருக்கும் அதிமுக நிர்வாகிகளுடன் சுந்தர் சி தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்திருக்கிறார்.

தமன்னா பிரச்சாரம்?

விரைவில் மதுரை இருப்பதாகவும், அதற்கு முன்னதாக மதுரையில் இருக்கும் பிரச்சனைகள் என்ன? பிடிஆருக்கு எதிராக என்ன பேசலாம்? என ஒரு பெரிய பட்டியலையே தயார் செய்து வைத்திருக்கிறாராம். அது மட்டும் அல்லாமல் தனது இயக்கத்தில் நடித்த தமன்னா, அஞ்சலி, ஜெய் உள்ளிட்ட நடிகர், நடிகர்களை பிரச்சாரத்திற்கு வரவழைக்கலாமா? என அதிமுக நிர்வாகிகளிடம் ஐடியா கேட்டதாக சொல்லப்படுகிறது. அதிமுகவில் ஏற்கனவே சில நடிகர் இருக்கும் நிலையில் நீங்களும் அழைத்து வாருங்கள் நன்றாக தான் இருக்கும் என அதிமுகவினர் சொல்ல உற்சாகமடைந்திருக்கும் சுந்தர்.சி அதற்கான வேலைகளை தொடங்கியுள்ளார் என்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+