சிவப்பு காதுகள் ஆமையுடன் மதுரைக்கு வந்த விருந்தாளி பெண்.. வாழ்க்கையில் மறக்க முடியாத பரிசு
மதுரை: மதுரை விமான நிலையத்திற்கு சட்டவிரோத பொருட்களை கடத்தி வருவதாக சுங்க இலாகா வான் நுண்ணறிவு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் உடனடியாக அதிகாரிகள் கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.. அப்போதுதான் அந்த பெண் பயணி வைத்திருந்த அட்டை பெட்டி மீது அதிகாரிகளின் கவனம் குவிந்தது.. அதற்கு பிறகு என்ன நடந்தது தெரியுமா?
சிவப்பு காது ஆமைகளுக்கு Red-eared slider என்று சொல்வார்கள்.. சிவப்பு காது நட்சத்திர ஆமைகள் உலகில் மிகவும் பிரபலமான சிறிய வீட்டுச் செல்லப்பிராணிகள். அதற்கு குட்டியான காதுகள் உள்ளன.. அதிலும் கவர்ச்சிகரமான சிவப்பு காதுகள் மிகவும் ஸ்பெஷலாகும்.

இந்தவகை ஆமைகளின் காதுகளுக்கு பின்னால் சிவப்பு அல்லது ஆரஞ்சு நிற திட்டுகள் உள்ளன.. அதாவது இதன் வலது மற்றும் இடது தலைப்புறுப்பில் சிவப்பு நிறம் பட்ட காது போன்ற பாதி வட்டம் இருக்கும். அதனால்தான் இந்த பெயரில் அழைக்கப்படுகின்றன..
நட்சத்திரப் பேட்டர்ன்
தெற்கு அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட செல்லப்பிராணியாகும்.. ஆனால் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ஆக்கிரமிப்பு இனமாகும். அதனால்தான் இந்த வகை ஆமைகள் கொண்டுவரவும், எடுத்து செல்லவும் தடை விதிக்கப்படுகின்றன.
எனினும் அரிய இனமாகவும், அபூர்வ உயிரினமாகவும் கருதப்படுவதால் வணிக ரீதியாக உயர்ந்த விலையில் விற்கப்படுகின்றன. நட்சத்திர பேட்டர்ன் காரணமாகவும் இவை வாங்குபவர்களை ஈர்க்கின்றன.
நம்முடைய இந்தியாவை பொறுத்தவரை, ஒற்றை ஆமை 1,000 முதல் 5,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படலாம்... இந்த வகை ஆமைகளை வீட்டு செல்லப்பிராணியாக, குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு அனுபவமாகவும், நீரில் அழகாக பார்க்கவும் சிலர் பயன்படுத்துகிறார்கள்.
சிவப்பு காது ஆமை
எனவே வீட்டு செல்லப்பிராணியாக அல்லது அழகாக அலங்கார நோக்கத்திற்காக கடத்தப்படுவது பெருகி வருகிறது.. சிலர் ஆராய்ச்சி அல்லது கல்வி நுண்ணறிவுக்காகவும் இந்த ஆமைகளை கடத்துகிறார்கள்.. ஆனாலும், சட்டப்படி அனுமதி இல்லாமல் கடத்தல் விரோதமாக கருதப்படுகிறது. இதனால் உயிரினங்கள் பாதுகாப்பிற்கான சர்வதேச நெறிமுறைகளை மீறுவதும், சட்ட பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.
எனவேதான் விமான நிலையங்களில் இதற்கான கெடுபிடிகள், கண்காணிப்புகள் அதிகரித்து வருகின்றன.. சில நாட்களுக்கு முன்புகூட சென்னை ஏர்போர்ட்டில் மலேசிய சுற்றுலா பயணியின் பைகளில் 2,805 அரிய சிவப்பு காது நட்சத்திர ஆமைகள் கண்டுபிடிக்கப்பட்டன.. அவை முறையான அனுமதி மற்றும் மருத்துவ பரிசோதனைகளின்றி கடத்தப்பட்டதாக தெரிய வந்தது.
சுங்க அதிகாரிகள் ஆமைகளை விமானத்தில் திருப்பி அனுப்ப முடிவு செய்து, செலவுகளை பயணியிடம் வசூலித்து, மலேசிய பயணியை சட்டப்படி கைது செய்து விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்..
மதுரையில் சிவப்புக் காதுகள் ஆமைகள்
இந்த நேரத்தில் மீண்டும் மலேசியாவிலிருந்து இந்த சிவப்பு காதுகள் ஆமைகள் கடத்தி தமிழகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
கோலாலம்பூரில் இருந்து, இலங்கை வழியாக மதுரை வரும் விமானத்தில் சட்டவிரோத பொருட்கள் கடத்தப்படுவதாக, மதுரை ஏர்போர்ட் சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அதிகாரிகள், தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
அப்போது கொழும்புவிலிருந்து மதுரைக்கு பிற்பகல் 2.40 மணிக்கு வந்த, ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்த பயணிகளின் உடைமைகளை சோதனையிட்டபோது ஒரு பெண் வசமாக சிக்கி விட்டார்..
அட்டைப் பெட்டிகள்
அவர் கொண்டவந்திருந்த அட்டை பெட்டிகளை அதிகாரிகள் திறந்து பார்த்தபோது 3,101 சிகப்பு காதுகள் கொண்டு ஆமைகள் இருப்பது தெரியவந்தது.
அந்த ஆமைகள் குறித்து அதிகாரிகள் கேட்டதற்கு, கோலாலம்பூரில் இருந்து கொழும்பு வழியாக மதுரைக்கு கடத்தி வந்ததாக அந்த பெண் கூறினார்.. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள், ஆமைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications