மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

20 நிமிடம் பரபர பேச்சு! நள்ளிரவில் திடீர் பிரவேசம்! மதுரை ஆதினத்தை திடீரென சந்தித்த அண்ணமலை!

Google Oneindia Tamil News

மதுரை : தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் இதற்கு தடை நீக்கப்பட்ட நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மதுரை ஆதீனத்தை திடீரென நேரில் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது.

தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப் பிரவேச நிகழ்வானது இம்மாத இறுதியில் நடைபெற உள்ளது. திராவிடர் கழகத்தினரின் எதிர்ப்பால் ஆதினத்தை பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து செல்ல தடை விதிக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பழமைவாய்ந்த சைவ மடமான தருமபுரம் ஆதினத்தின் பட்டினப் பிரவேச நிகழ்வு அப்பகுதியில் பதற்ற நிலையை உருவாக்கியது

தமிழக அரசு ஆன்மீக அரசு என்பதை மெய்பித்துவிட்டது! பட்டின பிரவேசம் விவகாரம்! தருமபுரம் ஆதீனம் பாராட்டுதமிழக அரசு ஆன்மீக அரசு என்பதை மெய்பித்துவிட்டது! பட்டின பிரவேசம் விவகாரம்! தருமபுரம் ஆதீனம் பாராட்டு

பல்லக்கு தூக்கும் நிகச்சி

பல்லக்கு தூக்கும் நிகச்சி

ஆதினம் பல்லக்கு தூக்கும் நிகழ்வுக்கு தடை விதிக்கக் கூடாது எனவும், பல ஆண்டு காலமாக நடைபெறும் நிகழ்ச்சிக்கு தடை விதிப்பது மக்கள் நம்பிக்கைக்கு எதிரானது என பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கூறினர். அதே நேரத்தில் மனிதனை மனிதனே சுமக்கும் நிகழ்சிக்கு தடை விதிக்க வேண்டுமென திரவிடர் கழகம், கம்யூனிஸ்ட் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

தடை செய்ய கோரிக்கை

தடை செய்ய கோரிக்கை

அதே நேரத்தில் பட்டின பிரவேச நிகழ்ச்சி ஆதீன எல்லைக்குள் தான் நடக்கிறது. அதனை தடை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை எனவும், திட்டமிட்டு அரசியல் காரணங்களுக்காக பட்டின பிரவேச நிகழ்ச்சியை தடை செய்துள்ளதாகவும், பல்லாக்கு தூக்கும் நிகழ்ச்சிக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

கடும் எதிர்ப்பு

கடும் எதிர்ப்பு

இந்நிலையில் தருமபுரம் ஆதீனத்தில் பல்லக்கு பட்டணப் பிரவேசம் நடத்துவது தொடர்பாக விரைவில் சுமூகத் தீர்வு காணப்படும் எனவும், முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் நல்ல முடிவெடுப்பார் என தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்தார். இந்நிலையில் முதல்வரை ஆதீனங்கள் சந்தித்த நிலையில், பட்டின பிரவேசத்துக்கு முதல்வர் வாய்மொழி உத்தரவு அளித்திருப்பதாக தகவல் வெளியான நிலையில், முன்னதாக பட்டின பிரதேசத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை கோட்டாட்சியர் நீக்கினார்.

அண்ணாமலைக்கு நன்றி

அண்ணாமலைக்கு நன்றி

தருமபுரம் ஆதினத்தின் பட்டினப் பிரவேசத்துக்கான தடை நீக்கப்பட்டதை மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக பரமாச்சாரியர் மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார். அரசின் உத்தரவை எதிர்த்து வெற்றிப் பெற்றதற்காக ஆதீனகர்த்தர் ஒருவர் மடத்தை விட்டு வெளியில் வந்து மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடியது இதுவே முதல் முறை என பலரும் ஆச்சர்யம் அடைந்தனர். மேலும் அப்போது பேசிய மதுரை ஆதீனம் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என குரல் கொடுத்ததற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நன்றியும் தெரிவித்தார்.

ஆதீனத்துடன் சந்திப்பு

ஆதீனத்துடன் சந்திப்பு

இந்த நிலையில்தான் தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை திடீரென மதுரை ஆதீனத்தை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். மதுரையில் நடைபெற்ற பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் அதன் பின்னர் இரவில் திடீரென மதுரை ஆதீன மடத்திற்கு சென்றுள்ளார். அவரை ஆதிசேஷன் என்பவர் மடத்துக்குள் அழைத்துச் சென்ற நிலையில் மதுரை ஆதினத்திடம் அண்ணாமலை ஆசி பெற்றுள்ளார். தொடர்ந்து அண்ணாமலையும் ஆதீனமும் தனியாக 20 நிமிடம் ஆலோசனை நடத்தியதாகவும் அதன் பின்னர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். இந்த சந்திப்பு தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

English summary
It is considered an important event in the political arena that the Tamil Nadu BJP leader had a sudden face-to-face meeting with Annamalai Madurai Athena after the ban on the Dharmapuram Athena pattina pravesam was lifted.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X