இந்திய இணைப்பு மொழி தமிழ்; இந்திய அளவில் திராவிடர்களாக ஒன்றுபடுவோம்: இயக்குநர் பா.ரஞ்சித்
மதுரை: இந்தியாவின் இணைப்பு மொழி தமிழாக இருக்க வேண்டும் என தாம் விரும்புவதாகவும் இந்திய அளவில் திராவிடர்கள் ஒன்றாக இப்போது நிற்பது முக்கியம் என்றும் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
Recommended Video
மதுரையில் தலித் எழுத்தாளர்கள் ஒன்று கூடும் தலித் இலக்கிய கூடுகை நிகழ்வு நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பா.ரஞ்சித் கூறியதாவது:
இந்தியாவில் வட இந்தியா, தென்னிந்தியா என பிரிவினை உள்ளது. வட இந்தியர்கள், தென்னிந்தியர்களைவிட உயய்ர்ந்தவர்கள் என கருதுகின்றனர். தாங்கள் மேலானவர்கள் என கருதுகின்றனர். தாங்கள் பேசும் மொழி, பல மாநிலங்களில் பேசுவதால் அப்படி உயர்வாகவும் கருதலாம். ஆனால் நாம் இதனை எப்போதும் ஏற்பது இல்லை. தொடர்ந்து சண்டை போட்டுதான் வருகிறோம். கண்டிப்பாக நாம் அதனை ஏற்பது இல்லை.

தமிழே இணைப்பு மொழி- திராவிடர்கள்
எனக்கான இணைப்பு மொழி எப்போதும் தமிழாக இருக்க வேண்டும் என எப்பவுமே நான் விரும்புகிறேன். அது தப்புன்னு நான் நினைக்கவில்லை.
இந்தியாவில் திராவிடர்களுக்கான முக்கியத்துவம் ரொம்ப முக்கியம்னு நினைக்கிறேன். திராவிடர்கள் இந்த சமயத்தில் ஒன்றாக நிற்பது முக்கியம் என நான் நினைக்கிறேன்.

இளையராஜா விவகாரம்
இளையராஜா விவகாரத்தில் எதிர்வினை ஆற்றியவர்களின் மனநிலையை நாம் புரிந்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது. அவர்கள் விமர்சிக்கும் தன்மையை புரிந்து கொள்ள வேண்டும். அதை நாம் எதிர்க்கிறோம். அதை நாம் கண்டிக்கிறோம். இவ்வாறு பா.ரஞ்சித் கூறியுள்ளார்.

இந்தி சர்ச்சை
அண்மையில் கேஜிஎப்-2 படத்தின் வெற்றி குறித்து கருத்து தெரிவித்த கனன்ட நடிகர் சுதீப், இந்தி இனி தேசிய மொழி இல்லை. பாலிவுட்டிலும் பான் - இந்தியா திரைப்படங்களை தயாரிக்கிறார்கள். தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மற்ற மொழிகளில் வெற்றியை பெற போராடுகின்றனர். நாங்கள் அனைத்து இடங்களிலும் வெல்கிறோம் என்றார். இதற்கு பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் பதிலளிக்கையில், இந்தி தேசிய மொழி இல்லை எனில் எதற்காக உங்கள் மொழி படங்களை இந்தியில் டப் செய்கிறீர்கள்? இந்தி எப்பொழுதும் நம்முடைய தாய் மொழி- இந்தி தேசிய மொழியாக இருந்துள்ளது.இந்தி எப்போதும் இருக்கும் என கூறியிருந்தார். அஜய்தேவ்கானின் இந்த ட்வீட்டர் பதிவுக்கு தென்னிந்தியாவில் இருந்து மிக கடும் எதிர்ப்பு எழுந்தது. கர்நாடகாவில் பாஜகவினரும் கூட அஜய்தேவ்கானின் இந்த கருத்தை நிராகரித்தனர். இன்னமும் இந்த பஞ்சாயத்து ஓயாத நிலையில் தமிழே இந்தியாவின் இணைப்பு மொழி என கூறியுள்ளார் இயக்குநர் பா.ரஞ்சித்

இளையராஜா சர்ச்சை
அதே போல இசையமைப்பாளர் இளையராஜா, நூல் ஒன்றின் முன்னுரையில் பிரதமர் மோடியையும் அண்ணல் அம்பேத்கரையும் ஒப்பிட்டது பெரும் சர்ச்சையானது. இளையராஜாவின் இந்த கருத்தை தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கடுமையான சொற்களால் விமர்சித்தார். அதற்கு அப்போதே பா.ரஞ்சித் கண்டனம் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications