மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மதுரை சென்ற முதல்வர் ஸ்டாலின்.. அழகிரியை சந்திக்காமல்.. அப்படியே திருச்சி கிளம்பினார்.. என்ன நடந்தது

Google Oneindia Tamil News

மதுரை: தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின் இன்று மதுரை சென்ற நிலையில், அவர் தனது சகோதரர் மு. க அழகிரியை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று இவர்களுக்கு இடையில் சந்திப்பு நடக்கவில்லை.

Recommended Video

    Madurai வரை Stalin சென்றும் Azhagiri-ஐ சந்திக்கவில்லை.. பின்னணி என்ன?

    தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக கொரோனா பணிகளை பார்வையிட்டு வருகிறார். முக்கியமாக கொரோனா கேஸ்கள் அதிகரிக்கும் மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக சென்று பார்வையிட்டு இருக்கிறார்.

    நேற்று கோயம்புத்தூர், சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார். அங்கு புதிய கொரோனா சிகிச்சை மையங்களை திறந்து வைத்தார்.

    இன்று

    இன்று

    இந்த நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் மதுரைக்கு சென்றார். காலை மதுரைக்கு விமானம் மூலம் சென்ற முதல்வர் இன்னும் சற்று நேரத்தில் மதுரை ஆட்சியர் கூட்டத்தில் நடக்கும் மீட்டிங்கில் கலந்து கொண்டார். திமுக அமைச்சர்கள் பி மூர்த்தி, பிடிஆர் பழனிவேல், ஆட்சியர் அனிஷ் சேகர், திமுக கூட்டணி எம்பிக்கள் ஆகியோர் இந்த மீட்டிங்கில் கலந்து கொண்டனர்.

    என்ன செய்வார்

    என்ன செய்வார்

    இதையடுத்து 11 மணிக்கு தோப்பூர் என்று அங்கு கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிடுகிறார். அதன்பின் மதுரை தோப்பூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட கொரானா மருத்துவமனையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் மதுரையில் நடந்த அரசு விழாவில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.

    இடைப்பட்ட நேரம்

    இடைப்பட்ட நேரம்

    இதற்கு அடுத்து அவர் திருச்சி கிளம்பி செல்வதாக திட்டம் இருந்தது. இடைப்பட்ட நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் தனது அண்ணன் மு.க அழகிரியை சந்திக்க வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டது. இருவரும் இன்று சந்திப்பு நடத்த அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வந்தன. ஆனால் இன்று இவர்களுக்கு இடையில் சந்திப்பு நடக்கவில்லை.

     இல்லை

    இல்லை

    ஆனால் முதல்வர் ஸ்டாலின் மதுரையில் பணிகளை முடித்துவிட்டு திருச்சி சென்றார். திருச்சியில் திட்டப்படி இன்று கொரோனா பணிகளை பார்வையிட வேண்டும். இதனால் மு. க அழகிரியை சந்திக்காமல் ஸ்டாலின் நேரடியாக திருச்சிக்கு கிளம்பி சென்றார். 1 மணி அளவில் அவர் திருச்சிக்கு சென்றடைந்தார்.

    மீட்டிங்

    மீட்டிங்

    தமிழக சட்டசபை தேர்தலில் திமுக வென்று, முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற போது, மு. க அழகிரி முதல் ஆளாக வாழ்த்தி இருந்தார். என் தம்பி முதல்வராவது எனக்கு மகிழ்ச்சி என்று அழகிரி வாழ்த்தி இருந்தார். ஸ்டாலினின் பதவி ஏற்பு விழாவில் அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி மட்டுமே கலந்து கொண்டார்.

    English summary
    Tamilnadu CM Stalin leaves Madurai: Did not meet his brother M K Alagiri today and left to Trichy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X