Tanishq Heist: சில்வண்டு சிக்கிருச்சு.. தனிஷ்க் கடையில் கைவைத்த நிஷாந்த் கைது! தருமபுரியில் தட்டித் தூக்கிய போலீஸ்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் பிரபலமான தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் கொல்லையில் ஈடுபட்ட நிஷாந்தை 5வது நாளாக காவல்துறையினர் தேடி வந்த நிலையில், தருமபுரி மாவட்டம் சேஷம்பட்டி அருகே வைத்துக் கைது செய்துள்ளனர் தனிப்படைப் போலீசார்.

மதுரை தனிஷ்க் ஜுவல்லரி நகை கடையில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கொள்ளையில் ஈடுபட்டது மதுரை பழங்காநத்தம் அருட்பெருஞ்ஜோதி தெரு பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞரான நிஷாந்த் என்பது தெரிய வந்தது.

Madurai Robbery Police crime

இந்த நிலையில் நிஷாந்திற்கு உதவிய நிஷாந்தின் தந்தை சுரேஷ் மற்றும் நிஷாந்தின் தோழி மீனாட்சி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து தலைமறைவாக இருந்த நிஷாந்தை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.

நகைக்கடை கொள்ளை

நிஷாந்தின் வீட்டிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. நிஷாந்தின் வீட்டில் நிஷாந்தின் தாயாரிடம் காவல்துறையினர் 3 மணி நேரமாக விசாரணை நடத்தினர். இதனிடையே நிஷாந்தின் தோழி மீனாட்சியின் வீடு அமைந்துள்ள திருப்பாலை, பார்க் டவுண், நாகனாகுளம் கண்மாய் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் நகைகள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதா? என காவல்துறையினர் தேடி வந்தனர்.

நகைகள் பதுக்கல்

நிஷாந்தின் தாயாரிடம் சாதரண உடையில் உள்ள காவல்துறை ஆய்வாளர் விசாரணை நடத்தினர் இந்நிலையில் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கின் முக்கிய நபரான நிஷாந்தை 5 நாளாக காவல்துறையினர் தேடி வந்தனர். இதனிடையே நிஷாந்தின் குடும்பத்திற்கு சொந்தமான மாடக்குளம் வயல்வெளியில் 3 ஆவது நாளாக கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவல்துறையினர்

மாடக்குளம் கண்மாய் மற்றும் காட்டுப்பகுதிகளில் உள்ள மரங்கள், கிணற்று பகுதிகளிலும், மீனாட்சியின் வீடு அமைந்துள்ள திருப்பாலை, தபால்தந்திநகர், நாகனாகுளம் கண்மாய், பார்க்டவுண் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளிலும் நகைகள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதா? என தேடி வருகின்றனர். நகை கொள்ளையடிக்க பட்ட தனிஷ்க் நகை கடையில் தனியார் பாதுகாவலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே நிஷாந்தின் செல்போன் அழைப்புகள் குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிம் கார்டுகள்

கொள்ளை நடந்த போதும் கொள்ளைக்கு முன்னரும் நிஷாந்த் யார் யாருடன் தொடர்பில் இருந்தார்? அவர் செல்போனில் வேறு சிம் கார்டுகள் பயன்படுத்தப்பட்டதா? அவரது ஆதார் கார்டு மூலம் வேறு சிம்கள் வாங்கப்பட்டதா? என்றும் விசாரணை நடத்தப்பட்டது. இது மட்டுமல்லாமல் மீனாட்சி நிஷாந்தின் தந்தை ஆகியோரது செல்போன் அழைப்புகளும் ஆய்வு செய்யப்பட்டது.

ரகசிய விசாரணை

தற்போதைய சூழலில் நிசாந்த் தமிழகத்திற்குள் தான் இருக்கிறார் எனவும், விரைவில் அவரை பிடித்து விடுவோம் என காவல்துறையினர் கூறியிருந்தனர். மேலும் நிஷாந்த்க்கு நெருக்கமானவர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலரிடமும் ரகசிய விசாரணை நடைபெற்றது. மேலும் ஏற்கனவே நிஷாந்த் உபயோகப்படுத்திய பைக் எங்கிருக்கிறது? வேறு எண்களில் அது சுற்றி வருகிறதா? என்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் சிசிடிவி காட்சிகளும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது.

நிஷாந்த்

கொள்ளை சம்பவம் நடந்து ஐந்து நாட்களுக்கு மேலாகி உள்ள நிலையில் நிஷாந்த் கைது செய்யப்பட்டால் தான் சதி திட்டம் தீட்டப்பட்டது எப்படி? இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு ஆகியவை குறித்த முழு தகவல்கள் வெளியாகும் என காவல்துறையினர் கூறியிருந்தனர். இந்நிலையில், தருமபுரி மாவட்டம் சேஷம்பட்டி பகுதியில் வைத்து நிஷாந்தை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+