கும்பலுக்கும் கூட்டத்துக்கும் உள்ள வித்தியாசம்! அடடே.. அதிமுக பேச்சாளர்களை மிஞ்சிய பாடகி ராஜலட்சுமி!
மதுரை: அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர்களை மிஞ்சும் வகையில் மதுரையில் நடைபெற்று வரும் மாநாட்டில் பேசி கவனம் ஈர்த்திருக்கிறார் விஜய் டிவி புகழ் பின்னணி பாடகி ராஜலட்சுமி.
அதிமுக மாநாட்டில் செந்தில் கணேஷ் ராஜலட்சுமி தம்பதியின் மக்கள் இசைக் கச்சேரி நடைபெற்று வருகிறது. அதிமுக தொண்டர்களை மாநாடு முடியும் வரை உற்சாகமாக வைத்துக்கொள்ளும் வகையிலான பாடல்களை மட்டும் அவர்கள் பாடி வருகின்றனர். இந்நிலையில் பாடலுக்கு நடுவே பேசிய ராஜலட்சுமி, கும்பலுக்கும் கூட்டத்துக்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா என வினவினார்.

அதற்கு அவரது கணவர் செந்தில் கணேஷ் தெரியாது என்று கூற, கும்பல் என்றால் எந்த நோக்கமும் இல்லாமல் கூடுவது என்றும் சந்தைகளில் பார்த்தால் தெரியும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலைக்கு வந்திருப்பார்கள் எனவும் தெரிவித்தார். ஆனால் அதேவேளையில் கூட்டம் என்றால் எல்லோருமாக சேர்ந்து ஒரே நோக்கத்துக்காக ஒன்றிணைந்தால் அதற்கு பெயர் கூட்டம் எனவும் விளக்கம் அளித்தார்.
மதுரையில் திரண்டிப்பது வெறும் கும்பல் இல்லை என்றும் மிகப்பெரிய தலைவனுக்கு பின்னால் கூடியிருக்கக் கூடிய கூட்டம் எனவும் எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்தார் ராஜலட்சுமி. அதற்கு அதிமுக தொண்டர்கள் மத்தியில் கைதட்டல்களும், விசில்களும் பறந்தன.
அண்ணாமலை பெரிய கிரவுடுடன் பாதயாத்திரை நடத்தி வரும் சூழலிலும், திமுக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் நிலையிலும், அதிமுக மாநாட்டு மேடையில் கும்பலுக்கும், கூட்டத்துக்கும் புது விளக்கம் கொடுத்து கவனம் ஈர்த்திருக்கிறார் ராஜலட்சுமி.
ராஜலட்சுமி தான் இப்படி பேசியிருக்கிறார் என்று பார்த்தால் செந்தில் கணேஷ் அவரையும் மிஞ்சும் வகையில் ஏழைகளின் நாயகன், விவசாயிகளின் காப்பாளன் என எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்து ஐஸ் மழை பொழிந்தார்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications