கஞ்சாவா? போலீஸ் உதவி பண்ணாம எப்படி விற்க முடியும்! காவல்துறையை ’’லாக்” செய்த ஹைகோர்ட்!அதிரடி ஆர்டர்

Subscribe to Oneindia Tamil

மதுரை: கஞ்சா வழக்கில் தமிழ்நாடு உள்துறை செயலர், தமிழ்நாடு காவல்துறை தலைவர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் போலீஸ் உதவியின்றி கஞ்சா வியாபாரம் நடக்க வாய்ப்பு இல்லை; அப்படியெனில் கஞ்சா புழக்கம், வழக்கு எப்படி அதிகரிக்கும்? என்றும் ஐகோர்ட் கிளை கேள்விகளை எழுப்பியுள்ளது.

ராமநாதபுரம் திருமுருகன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை ஒத்தக்கடை யானைமலை பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஒத்தக்கடை ஐயப்பன் நகர் பகுதியில் 7 நபர்கள் போதை பொருட்கள் மற்றும் மது அருந்திய நிலையில், அப்பகுதியில் பிரச்சனை செய்து கொண்டிருந்தனர்.

The Madurai branch of the Madras High Court opined that there is no chance of ganja business going on without the help of the police

அப்போது அவர்கள் பணி முடிந்து வீடு திரும்பிய கான்முகமது என்பவரை தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஒத்தக்கடை பகுதியில் கஞ்சா விற்பனை காவல்துறையினருக்கு தெரிந்தே நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள்,i புகார் அளிக்க முன் வருவதில்லை. மதுரை ஒத்தக்கடை பகுதியில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆகவே ஒத்தக்கடை ஐயப்பன் நகர் மற்றும் நீலமேக நகர் பகுதியில் போலீஸ் அவுட் போஸ்ட் அமைக்கவும், போதை பொருட்கள் மற்றும் மது அருந்தி வாகனம் ஓட்டு ஒரு மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க சிறப்பு பிரிவு உருவாக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், தனபால் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், "ஒத்தக்கடையில் நடைபெற்ற சம்பவம் கஞ்சா உபயோகித்ததால் அல்ல. மது அருந்தியதாலேயே. கடந்த 3 ஆண்டுகளில் கஞ்சா விற்பனை தொடர்பாக வெளிமாநிலத்தைச் சேர்ந்த 2486 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன? எத்தனை வழக்குகளில் இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது? மதுரை ஒத்தக்கடை இந்த வழக்கில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+