Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் மோசமான சூழல் உள்ளது.. சமூக ஆர்வலர்களுக்கு பாதுகாப்பில்லை.. கொதித்த மாஜி ஐஏஎஸ் சகாயம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழகத்தில் சமூக செயற்பாட்டாளர்களுக்கு பாதுகாப்பு என்பது இல்லை. மிக மோசமான, பாதுகாப்பாற்ற சூழல் சமூக செயற்பாட்டாளர்கள், போராளிகளுக்கு உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை பற்றி சிந்திக்க வேண்டி உள்ளது'' என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் சகாயம். இவர் கிரானைட் குவாரிகளில் நடந்த ஊழலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். இந்த நடவடிக்கைக்காக சகாயம் ஐஏஎஸ் மிகவும் பேசப்பட்டவர். அவரது செயலை பலரும் பாராட்டினார்.

there-is-no-security-for-social-activists-in-tamil-nadu-says-former-ias-officer-sagayam

கடந்த 2014 ஆம் ஆண்டு குவாரிகளில் நடந்த முறைகேடு குறித்து விசாரிக்க சிறப்பு அதிகாரியாக சகாயத்தை நீதிமன்றம் நியமித்தது. இதையடுத்து அவர் 1990ஆம் ஆண்டு முதல் சுமார் 24 ஆண்டு காலமாக நடந்து வந்த முறைகேட்டை வெளியே கொண்டு வந்தார். அவர் தாக்கல் செய்த 600 பக்க அறிக்கையின் மூலம் ரூ 1 லட்சம் கோடி ரூபாய்க்கு குவாரிகளில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது.

இந்நிலையில் தான் கிரானைட் குவாரிகளில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கு விசாரணைக்கு அவர் சாட்சியம் அளிக்க மதுரை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதற்கு அவருக்கு வந்த மிரட்டல் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக அவர் அரசு வழக்கறிஞருக்கு கடிதம் அனுப்பினார். அதில், ‛‛பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் மதுரை நீதிமன்றத்தில் ஆஜராக வாய்ப்பில்லை. எனக்கு மாநில அரசு வழங்கி வந்த பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டது. என் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது தவறானது, முறையற்றது. எனவே எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை நீதிபதியிடம் தெரிவிக்க வேண்டும்'' என குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் தான் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தமிழக அரசு மீது பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‛‛தமிழகத்தில் சமூக செயற்பாட்டாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை. நெல்லையில் ஜாகீர் உசேன் என்பவர் போராடினார். காவல்துறையில் பணியாற்றியவர், முன்னாள் முதலமைச்சர் ஒருவரிடம் பணியாற்றியவர் என்று சொல்லப்படுகிறது. என்னை கொல்லப்போகிறார்கள் என்று வீடியோ வெளியிட்ட 2 நாட்களுக்கு பிறகு கொல்லப்படுகிறார் என்று சொன்னால் நான் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை சிந்திக்க வேண்டியதாக உள்ளது.

இது அரசியல் அல்ல. அரசியலுக்கு அப்பாற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனை பற்றி சிந்திக்க வேண்டிய ஒன்று. மிக மோசமான, பாதுகாப்பற்ற சூழல் இந்த சமூக செயற்பாட்டாளர்கள், போராளிகளுக்கு உள்ளது. இதை எனக்காக மட்டும் பேசவில்லை. இவர்களுக்கு நீங்கள் என்ன செய்து இருக்கிறீர்கள்? இங்கே கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு லட்சக்கணக்கில் கொடுக்க கூடிய தமிழக அரசு மண்ணை காத்த சமூக சொத்தாக, தேசத்தின் சொத்தாக இருக்க கூடிய கனிமவளத்தை பாதுகாப்பதற்காக இருந்த எளிய இஸ்லாமிய குடிமகனின் குடும்பம் நிராயுதபாணியாக இன்று இருக்கிறது. அவருக்கு 3 பிள்ளைகள். 2 பெண் பிள்ளைகள். ஒரு மகன் என்று சொல்கிறார்கள். வறுமை நிலையில் இருக்கிறார்கள். ஆனால் கொல்லப்பட்ட ஜகபர் அலிக்கு தமிழக அரசு எந்த இழப்பீடும் அளிக்காதது வருத்தத்துக்குரியது'' என்று சாடியுள்ளார்.

இதில் சகாயம் ஐஏஎஸ் குறிப்பிட்ட ஜெகபர் அலி புதுக்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர். இவர் சட்டவிரோத கல் குவாரிகளுக்கு எதிராக போராடி வந்தார்.போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார்கள் அளித்து வந்த நிலையில் லாரி ஏற்றி கொல்லப்பட்டார். அதேபோல் ஜாகீர் உசேன் என்பவர் நெல்லையை சேர்ந்தவர். ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளரான அவர் 4 பேர் கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவர் வக்ஃபு சொத்து பாதுகாப்பு உள்பட பல விஷயங்களில் ஆர்வமாக செயல்பட்டு வந்த நிலையில் படுகொலை செய்யப்பட்டார். அதேபோல் சகாயம் ஐஏஎஸ், சட்டவிரோத கல்குவாரி தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அதிரடி நடவடிக்கைகளை எடுத்த நிலையில் தற்போது கொலை மிரட்டல் வந்துள்ளதாக புகாரளித்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடதக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+