கப்பலூர் சுங்க சாவடியை இழுத்து மூடியே ஆகனும்.. திருமங்கலத்தில் ஜூலை 30-ல் பொதுமக்கள் பந்த் போராட்டம்
மதுரை: கப்பலூர் சுங்க சாவடியை இழுத்து மூட வலியுறுத்தி மதுரை அருகே திருமங்கலத்தில் வரும் 30-ந் தேதி பொதுமக்கள் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். திருமங்கலம் அருகே கப்பலூரில் அமைக்கப்பட்டுள்ள சுங்கசாவடி விதிமுறைகளை மீறி நகரில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவுக்குள்ளேயே இருக்கிறது; ஆகையால் இதனை அகற்றியே ஆக வேண்டும் என 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வரும் போராட்டம் கடந்த சில வாரங்களாக தீவிரமடைந்துள்ளது.
மதுரையை அடுத்து தென் மாவட்ட நகரங்களை நோக்கி செல்லும் வாகனங்கள் கப்பலூர் சுங்க சாவடியை கடந்துதான் செல்ல வேண்டும். கப்பலூர் சுங்க சாவடிக்கு எதிராக அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கப்பலூர் சுங்க சாவடி பணியாளர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையே பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து மோதல்களும் நடைபெற்று வருகின்றன.

அண்மையில் உள்ளூர் வாகனங்கள் சுங்க சாவடி சாலையை பயன்படுத்தியதற்கு ரூ4 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும் என கப்பலூர் சுங்க சாவடி தரப்பில் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு எதிராக திருமங்கலம் வணிகர்கள் கடையடைப்புப் போராட்டம் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து உச்சப்பட்டி, தர்மத்துப்பட்டி ஆகிய கிராமங்களுக்கு செல்லக் கூடிய சாலைகளையும் கப்பலூர் சுங்க சாவடி நிர்வாகம் மூடும் நடவடிக்கைகளை மேற்கொண்டது மக்களை கொந்தளிக்க வைத்தது. இதனால் சுங்க சாவடி முன்பாக பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இத்தகைய மோதல் போக்கின் உச்சமாக கடந்த வாரம் கப்பலூர் சுங்க சாவடியை இழுத்து மூடும் வரை தொடர் போராட்டம் நடத்துவோம் என ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் பல மணிநேரம் நடைபெற்றது. உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு மாதம் ரூ340 கட்டணம் வசூலிக்கவும் கப்பலூர் சுங்க சாவடி நிர்வாகம் திட்டமிட்டதும் பெரும் கோபத்துக்கு காரணமானது. இந்த முற்றுகைப் போராட்டத்தில் அதிமுகவும் பங்கேற்றது. 10 மணிநேர போராட்டத்துக்குப் பின்னர் கப்பலூர் சுங்க சாவடி நிர்வாகத் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதனையடுத்தே வரும் 30-ந் தேதி திருமங்கலத்தில் பொதுமக்கள் முழு அடைப்புப் போராட்டம் (பந்த்) நடத்த அழைப்பு விடுத்துள்ளனர். திருமங்கலத்தில் நடைபெற்ற கப்பலூர் சுங்க சாவடி எதிர்ப்பு குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருமங்கலத்தைச் சுற்றிய கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications