Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பரங்குன்றம்- நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. அரசின் அப்பீல் மனு தள்ளுபடி.. 2 நீதிபதிகள் அமர்வு ஆணை

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருப்பரங்குன்றம் தீபத்தூண் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்த நிலையில், அதனை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அதேபோல் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவும் நீதிமன்றம் மறுத்துள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இந்த உத்தரவை நிறைவேற்றாததால் வழக்கு தொடர்ந்த மனுதாரர்கள், சிஐஎஸ்எப் பாதுகாப்புடன் திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு சென்று தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜிஆர்.சுவாமிநாதன் நேற்று மாலை உத்தரவிட்டார்.

madurai thirupparankundram high court

இதைத் தொடர்ந்து மனுதாரரான ராம ரவிக்குமார், சக மனுத்தாரர்கள், இந்து அமைப்பினர் 60-க்கும் மேற்பட்ட சிஐஎஸ்எப் வீரர்களுடன் நேற்று இரவு திருப்பங்குன்றம் சென்றனர். முருகன் கோவிலுக்கு அருகிலுள்ள பழனியாண்டவர் கோவில் பாதை வழியாக மலை உச்சிக்கு செல்ல முயற்சித்தனர. அப்போது, அவர்களை அங்கு போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்து யாரையும் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தனர்.

சிஐஎஸ்எப் வீரர்கள் தரப்பில் நீதிமன்ற உத்தரவுடன் வந்துள்ளதாக கூறிய போதும், காவல்துறை தரப்பில் அனுமதிக்க முடியாது.. இதற்காக எந்த சிக்கல் வந்தாலும் எதிர்கொள்ள தயார் என்று தெரிவித்தனர். இதனால் கோபமடைந்த இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. மேலும், தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி கோரி முழக்கம் இட்டனர்.

இதனிடையே திடீரென தடுப்புகளை உடைத்து ஆர்ப்பாட்டக்கார்கள் மலைக்கு மேல் செல்ல முயன்றனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ஒரு காவலர் காயம் அடைந்தார். இதனைத்தொடர்ந்து தீபம் ஏற்றுவதற்காக சென்ற பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். அதேபோல, போலீசார் தடுப்பை மீறி, மலைப் பாதையில் ஓடிச் சென்றவர்கள் பிடித்து அழைத்து வரப்பட்டனர்.

தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலை போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. இதற்கிடையே, திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும் நீதிமன்றம் உத்தரவுப்படி, பாதுகாப்புக்கு வந்த சிஐஎஸ்எப் வீரர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 144 தடை உத்தரவு உள்ளதாலும் அரசு மேல்முறையீடு செய்ய உள்ளதாலும் மலைக்கு செல்ல அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று இரவு மதுரை நீதிமன்ற நிர்வாக நீதிபதி ஜி.ஜெயச்சந்திரனிடம் தமிழக அரசு சார்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன் சென்று, திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என முறையிட்டார்.

அதற்கு நீதிபதி ஜெயச்சந்திரன், தங்களது முறையீடு சம்பந்தமாக காலையில் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை முதல் வழக்கமாக திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் வழக்கு விசாரணை தொடங்கியுள்ளது. நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கேகே ராமகிருஷ்ணன் அமர்வு முன் விசாரணை தொடங்கிய நிலையில், தமிழக அரசு தனது வாதத்தை முன் வைத்து வருகிறது.

அதில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க அதிகாரம் கிடையாது என்றும், தர்கா தரப்புக்கு மேல்முறையீடு செய்வதற்கு போதிய அவகாசம் வழங்கப்படவில்லை.தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவால் சமூக நல்லிணக்கம், சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. பேரி கார்டுகள் உடைக்கப்பட்டுள்ளன.. காவலர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.. திருப்பரங்குன்றத்தில் மதப் பிரச்சனை ஏற்படும் நிலை உருவாகியது.

மனுதாரர் 10 நபர்களோடு இணைந்து தீபத்தூணில் தீபமேற்ற அனுமதி வழங்கியுள்ளார் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன். ஆனால் மனுதாரர் பெரும் கூட்டத்தோடு சென்று சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளார். அவர் மீதே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கப்பட வேண்டும். தமிழக அரசின் அச்சம் உண்மையாகிவிட்டது. மனுதாரர் அதிக நபர்களோடு சென்று பிரச்சனை ஏற்படுத்தியதால், அவர் மீதே நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனி நீதிபதி ஆணையால் திருப்பரங்குன்றத்தில் சமூக நல்லிணக்கம், சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தர்கா தரப்பில் மேல்முறையீடு செய்ய போதிய கால அவகாசம் வழங்கப்படவில்லை. 30 நாட்கள் மேல்முறையீடு செய்ய அவகாசம் இருக்கையில், விளக்கம் அளிக்கவே வாய்ப்பு தரப்படவில்லை என்று வாதிடப்பட்டது. அதேபோல் தர்கா தரப்பும், மனுதாரர் தரப்பும் தங்களின் வாதங்களை முன் வைத்தனர்.

தொடர்ந்து நீதிபதிகளும் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். தொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களையும் நீதிபதிகள் கேட்டறிந்தனர். இந்த நிலையில் தனி நீதிபதி கொடுத்த தீர்ப்பை ரத்து செய்ய இரு நீதிபதிகள் அமர்வு ரத்து செய்ய மறுப்பு தெரிவித்துள்ளதோடு, தனி நீதிபதி அளித்த தீர்ப்பில் தவறு இருப்பதாக தெரியவில்லை என்றும் தீர்ப்பளித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+