திருப்பரங்குன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: என் உத்தரவை மதிக்காமல் இருந்தது ஏன்? ஜிஆர் சுவாமிநாதன்
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் இந்த ஆண்டு ஏற்றப்பட வேண்டும் என நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டார். எனினும், இந்த உத்தரவை அதிகாரிகள் அமல்படுத்தவில்லை என்பதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை இன்று தொடங்கியது. அப்போது மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், காவல் ஆணையர் நேரில் ஆஜராகினர்.
அப்போது நீதிபதி எனது உத்தரவுக்கு எதிராக மதுரை, திண்டுக்கல் ஆட்சியர்கள் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர். எனது உத்தரவை மதிக்காதது ஏன் என்பதை கட்டாயமாக கூறியே ஆக வேண்டும். நான் தேர்தலில் போட்டியிடபோவதாக தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விகாஷ் சிங் வாதம் செய்தது ஏன்? என்பதற்கும் பதில் அளிக்க வேண்டும் என காட்டமாக கேள்வி எழுப்பினார்.
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் என்பது முருகப்பெருமானின் முதற்படை வீடு என்ற சிறப்புக்குரியது. திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் குடவரை கோயிலாக இந்த கோயில் உள்ளது. மலை மீது ஏறிச்செல்ல இரு இடங்களில் படிப்பாதை வசதிகள் உள்ளன. மலை உச்சியில் காசிவிசுவநாதர் கோவில், தீபத்தூண் உள்ளிட்டவை உள்ளன. இதே போன்று சிக்கந்தர் தர்காவும் உள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்திருவிழா அன்று தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்து அமைப்புகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றன. அதே நேரத்தில் இதற்கு எதிர்ப்பும் உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக மலையில் உச்சிப்பிள்ளையார் கோவில் அமைந்துள்ள இடத்தில் தீபக்கொப்பரை அமைத்து தீபம் ஏற்றப்பட்டு வந்தது.
இந்த நிலையில்தான், இதுதொடர்பாக மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ராம ரவிக்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர் நீதிமன்ற கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் இந்த ஆண்டு ஏற்றப்பட வேண்டும் என உத்தரவிட்டார். எனினும், இந்த உத்தரவை அதிகாரிகள் அமல்படுத்தவில்லை என்பதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
தலைமை செயலாளர், டிஜிபி
இந்த வழக்கை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் விசாரித்து வருகிறார். இந்த வழக்கில், இன்று தமிழக தலைமைச் செயலாளர், காவல்துறை டி.ஜி.பி. ஆகியோர் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக மதுரை உயர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டு இருந்தார்.
இதற்கிடையே, திருப்பரங்குன்றம் வழக்கின் தீர்ப்பை எதிர்த்து டிவிஷன் பெஞ்சில் மேல் முறையீட்டு வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கடந்த இரு தினங்களாக காரசாரமாக வாதம் நடைபெற்று வருகிறது. வழக்கின் விசாரணையை இன்று நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.
விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு
வழக்கு விசாரணையின் போது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அதிகாரிகள் ஆஜராக விலக்கு அளித்து உத்தரவிட வேண்டும் என்று நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு தமிழக அரசு தரப்பில் முறையிடப்பட்டது. எனினும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நீதிபதியிடமே முறையிடலாம் என்றும் தெரிவித்தனர்.
மாலை 3 மணிக்கு விசாரணை
திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் உத்தரவை நிறைவேற்றாததால் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தனி நீதிபதி சுவாமிநாதன் அமர்வில் இன்று மாலை 3 மணிக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. தலைமைச் செயலாளர், ஏடிஜிபி ஆகியோர் காணொலி மூலம் ஆஜராக வேண்டும் என்றும், மதுரை ஆட்சியர், மாநகர காவல் ஆணையர், இணை ஆணையர் ஆகியோர் நேரில் ஆஜராகவும் கடந்த விசாரணையில் உத்தரவு பிறப்பித்து இருந்தது.
நீதிமன்ற உத்தரவை மதிக்காதது ஏன்
இதன்படி மதுரை காவல் ஆணையர் பிரவீன் குமார் நேரில் விசாரணைக்கு ஆஜர் ஆனார். காவல் ஆணையர் லோகநாதன் நேரில் ஆஜராகினர். தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி எனது உத்தரவுக்கு எதிராக மதுரை, திண்டுக்கல் ஆட்சியர்கள் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர். நீதிமன்ற உத்தரவை மதிக்காதது ஏன் என்பதை கட்டாயமாக கூறியே ஆக வேண்டும்.
உரிய பதிலை மனுவாக தாக்கல் செய்யுங்கள்
நான் தேர்தலில் போட்டியிடபோவதாக தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விகாஷ் சிங் வாதம் செய்தது ஏன்? என்பதற்கும் பதில் அளிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருக்க சட்டம் ஒழுங்கை காரணம் காட்டுவது என்னவிதமான செயல்?.. என காட்டமாக கேள்வி எழுப்பினார்.
என் உத்தரவை அதிகாரிகள் யாரும் மதிக்கவில்லை. இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். உரிய பதிலை விரிவான மனுவாக தாக்கல் செய்ய அவகாசம் தருகிறேன். அப்போது, எந்த உள்நோக்கத்துடனும் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வில்லை. ஏற்கனவே உள்ள உத்தரவுகளின் அடிப்படையில் தான் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தலைமை செயலர் வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆஜராகி விளக்கம் அளித்தார்.
-
அண்ணா நகர் சிறுமி வழக்கு.. தினமும் விசாரணை நடத்தி விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications