நெருக்கடி வளையம்.. விசாரணைக்கு ஆஜராகாத அமலாக்கத்துறை அதிகாரிகள்.. மதுரை போலீசாரின் அதிரடி முடிவு!
மதுரை: லஞ்ச ஒழிப்புத்துறையினர் அளித்த புகார் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியும், மதுரை அமலாக்கத்துறை அதிகாரிகள் தல்லாகுளம் காவல்நிலையத்தில் ஆஜராகவில்லை. இதனால் மீண்டும் சம்மன் அனுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் சுரேஷ் பாபு மீதான வழக்கை விசாரிக்காமல் இருக்க லட்சம் லஞ்சம் பெற்றபோது, கடந்த டிசம்பர் 1ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். அதன்பின் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு மதுரை மத்திய சிறைக்கு அவர் மாற்றப்பட்டார்.

அமலாக்கத்துறை அங்கித் திவாரி, லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக அன்றைய தினமே மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புப் பிரிவினர் சோதனை நடத்தினர். காவல்துறையுடன் வந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளை உள்ளே விட மறுத்த அமலாக்கத்துறையினர், பதிலுக்கு துணை ராணுவ படையினரை காவலுக்கு அழைத்தனர்.
இதனால் மாநில அரசின் கீழ் செயல்படும் லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கும், மத்திய அரசின் கீழ் செயல்படும் அமலாக்கத்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர், அமலாக்கத்துறையினரை மீறி லஞ்ச ஒழிப்புத் துறையினர் அந்த அலுவலகத்தில் சோதனை செய்தனர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்யசீலன் அளித்த புகாரின் பேரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது மதுரை தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி பற்றி அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை செய்த போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. இன்று காலை 11 மணிக்கு மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அமலாக்கத்துறை சார்பில் இன்று யாரும் ஆஜர் ஆகவில்லை. இதையடுத்து, உயர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து மீண்டும் அமலாக்கத்துறையினருக்கு சம்மன் அனுப்பப்படும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, மதுரை துணை மண்டல அமலாக்கத் துறை அலுவலக உதவி இயக்குநர் பிரிஜிஷ்ட் பெனிவால் சார்பில், தமிழக டிஜிபிக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டது. மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்துக்குள் லஞ்ச ஒழிப்புத் துறையினர் எனக் கூறி அத்துமீறி நுழைந்தவர்கள் மீதும், தேவையின்றி ஆவணங்களை திருடிச் சென்றவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்கத்துறை புகார் அளித்தது. இதுதொடர்பாக அண்மையில் மீண்டும் நினைவூட்டல் செய்யப்படதும் குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications