மதுரையில் அமித் ஷா.. தூங்கா நகரில் திட்டமிட்டு கூட்டத்தை நடத்தும் டிடிவி தினகரன்.. மாறும் கணக்கு!
மதுரை: அதிமுக + ஓபிஎஸ் + டிடிவி தினகரன் ஆகியோர் இணைந்து போட்டியிட வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக இருக்கிறது. திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டுமென்றால் ஒருங்கிணைந்த அதிமுக உருவாக வேண்டும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா விரும்புவதாக சொல்லப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே பாஜக தரப்பில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் என்டிஏ கூட்டணியில் இருப்பதாக கூறி வருகின்றனர்.
என்டிஏ கூட்டணி
ஆனால் எடப்பாடி பழனிசாமிம், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை சேர்க்க கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறார். ஆனால் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவின் முக்கிய தலைவர்கள், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் கூட்டணியிலேயே இருப்பதாக கூறி வருகின்றனர்.

மதுரையில் அமித் ஷா
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று இரவு மதுரை வருகிறார். தென் மாவட்டங்களைச் சேர்ந்த பாஜகவின் முக்கிய நிர்வாகிகளை அமித் ஷா சந்திக்கும் நிலையில், தேர்தல் பணிகள் தொடர்பாகவும் ஆலோசனைகளை வழங்க உள்ளார். அதேபோல் ஒத்தக்கடையில் நடக்கவுள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்க உள்ளார்.
அமமுக செயல் வீரர்கள் கூட்டம்
இதனிடையே அமித் ஷாவை ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் சந்திக்க ஆர்வமாக இருக்கின்றனர். இதற்காக டிடிவி தினகரன் மதுரையில் முகாமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அமித் ஷா வரும் இன்றைய நாளில், மதுரை மாவட்ட அமமுக செயல் வீரர்கள் கூட்டத்தை டிடிவி தினகரன் நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டம் என்பது பெயரளவிலான கூட்டம் என்றே சொல்லப்படுகிறது.
டிடிவி தினகரன் பேட்டி
மதுரையில் டிடிவி தினகரன் முகாமிட்டிருப்பது அமித் ஷாவை சந்திப்பதற்காக தான் என்று சில அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் செய்தியாளர்களை சந்தித்து டிடிவி தினகரன் பேசுகையில், பாஜக கூட்டணியில் ஓபிஎஸ்-க்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தேர்தல் நேரத்தில் சசிகலாவுக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இன்றிரவு சந்திப்பு?
இன்று இரவு மதுரை வரும் அமித் ஷாவை சந்திக்க டிடிவி தினகரன் நேரம் கேட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் பாஜக நிர்வாகிகளுடனான ஆலோசனை முன் டிடிவி தினகரன் அமித் ஷாவை சந்திக்க வாய்ப்புகள் இருப்பதாக சில தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அதிமுக - பாஜக கூட்டணியில் அமமுக இணைவதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications