கிறிஸ்தவ கொள்கைக்கும் திராவிட கொள்கைக்கும் வித்தியாசம் கிடையாது.. உதயநிதி ஸ்டாலின் பேச்சு
மதுரை: கிறிஸ்தவ கொள்கைக்கும், திராவிட கொள்கைக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது.. சமத்துவத்தை அடுத்தவரிடம் போதிக்க வேண்டும் என்று தான் இரண்டும் வலியுறுத்துகிறது என மதுரையில் நடைபெற்ற கிறிஸ்தவ விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். பாசிஸ்ட்டுகளின் எல்லா நடவடிக்கைகளையும் தாண்டி தமிழகத்தையும் தமிழ்நாட்டையும் காப்போம். திமுகவிற்கும் சிறுபான்மை மக்களுக்கான பந்தத்தை பிரிக்க முடியாது என்றும் உதயநிதி கூறினார்.
பெந்தெகோஸ்தே சபைகளின் மாமன்றம் சார்பில், கிறிஸ்து பிறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், மதுரை பைபாஸ் அருகே உள்ள நேரு நகரில் நடைபெற்றது. இவ்விழாவில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்து கிறிஸ்துமஸ் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் அமைச்சர்கள் மூர்த்தி, அன்பில் மகேஷ் ஆகியோர் பங்கேற்றனர். இதில், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள், பொதுமக்கள் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து விழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், அனைவருக்கும் அட்வான்ஸ் கிறிஸ்மஸ் வாழ்த்துகள். என் மேல் காட்டும் தனி பிரியம். கிறிஸ்தவ கொள்கைக்கும் திராவிட கொள்கைக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. சமத்துவத்தை அடுத்தவரிடம் போதிக்க வேண்டும் என்று தான் இரண்டும் வலியுறுத்துகிறது.
இவ்வளவு மகிழ்ச்சியோடு கொண்டாடப்படும். முழுவதும் ஒரு போரின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது என்றால் அது இயேசு கிறிஸ்து பிறப்பு
எப்போது அரண்மனை எல்லாம் இருப்பாங்க அப்படிங்கிற அந்த கருத்தை தன்னுடைய பிறப்பால் உணர வச்சவர்தான் இயேசு அவர்கள். பல்வேறு நலத்திட்டங்களை நன்மைகளை சிறுபான்மை மக்களுக்கு செய்துள்ளது திமுக அரசு.
சிறுபான்மை மக்களுக்கு எப்போதும் திமுக உறுதுணையாக இருக்கும். அவர்களும் எங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். சகோதரத்துவம் சமத்துவம் மதசார்பின்மையே நம் அடையாளம். வெறுப்பு பொய் பிளவுவாத பிரச்சனைகளை பிரச்சாரங்களை புறந்தள்ளி நாம் ஒரே அணியில் இணைய வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு எதிரான அணிக்கு கூட்டங்களுக்கு எதிராக நாம் ஒன்றிணைய வேண்டும்.
கிறிஸ்துமஸ் திருவிழாவை மட்டும் கொண்டாடாமல் இயேசுவின் கருத்துக்களையும் நாம் கொண்டாட வேண்டும். சாதாரணமானவர்கள் உழைத்தால் உயரலாம் என்பதை நிருபித்த தியாகம் திராவிட இயக்கம். உயர்ந்த கொள்கையான இரக்கத்தை போதிப்பது கிறிஸ்தவம். அதையே தான் திராவிடமும் கூறுகிறது. ஆனால் தமிழகம் தமிழ்நாடு மீது ஒன்றிய அரசுக்கு இரக்கம் இல்லை. கிறிஸ்துமஸ் என்றாலே நட்சத்திரம் தோரணம் வண்ண விளக்குகள் நிறைந்தது.
கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் என் மீது தனி பாசம் தனி அன்பு வைத்துள்ளனர். கிறிஸ்தவ கொள்ளைகளுக்கும் திராவிட கொள்கைகளுக்கும் வேறுபாடு இல்லை. மனிதநேயம் அன்பை மட்டுமே இரண்டு கொள்கைகளும் போதிக்கிறது. இந்திய ஒன்றியத்தை ஆளும் அரசுக்கு தமிழகம் தமிழ்நாடு மீது பயம் உள்ளது. எங்கே மக்கள் ஒன்றாகிவிடுவார்கள் நம்மை எதிர்த்துவிடுவார்கள் என்ற பயம். ஒன்றிய அரசின் பாசிஸ்டுகளின் தமிழகத்தில் பிரித்தாளும் சூழ்ச்சி எடுபாடது.
சாதியால் மதத்தால் பிரித்தாள நினைக்கிறார்கள். அது நடக்காது. தமிழகம் தனித்துவமான மாநிலம். மக்களை பிரித்து பிரித்தாளும் சூழ்ச்சியால் கலவரத்தை ஏற்படுத்த முயன்றால் மக்களே தக்க பாடம் புகட்டுவார்கள். அதற்கு ஒருநாளும் மக்கள் இணங்க மாட்டார்கள். எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் ஆட்சி நடத்துகிறார் முதல்வர். பிரித்துக்கொடுப்பது என்றாலே ஒன்றிய அரசுக்கு பிடிக்கவில்லை.
ஒன்றிய அரசு நிதியை பிரித்து கொடுக்காவிட்டாலும் எல்லா தேவைகளையும் நிறைவேற்றி வருகிறார் முதல்வர். பாசிஸ்ட்டுகளின் எல்லா நடவடிக்கைகளையும் தாண்டி தமிழகத்தையும் தமிழ்நாட்டையும் காப்போம். திமுகவிற்கும் சிறுபான்மை மக்களுக்கான பந்தத்தை பிரிக்க முடியாது. அனைவருக்கும் நன்றி" இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications