Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இது வெறுப்பு பேச்சுக்கு சமமானது.. சனாதன தர்மம் பற்றிய பேச்சால் உதயநிதி ஸ்டாலினை சாடிய உயர்நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: ‛‛2023ல் சனாதன தர்மம் குறித்த உதயநிதி ஸ்டாலினின் கருத்து வெறுப்புப் பேச்சுக்குச் சமம். கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிடர் கழகம், திமுகவால் இந்து மதம் மீது தெளிவான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது'' எனக்கூறி மதுரை உயர்நீதிமன்றம் உதயநிதி ஸ்டாலினை கண்டித்ததோடு, உதயநிதி ஸ்டாலினின் பேச்சு தொடர்பாக கருத்து பதிவிட்டதால் பதியப்பட்ட பாஜகவின் அமித் மாளவியா மீதான வழக்கை ரத்து செய்து அதிரடியாக உத்தரவிட்டது.

கடந்த 2023ம் ஆண்டில் செப்டம்பர் 2ம் தேதி சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் சார்பில் ‛சனாதன தர்மம் ஒழிப்பு மாநாடு' ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த மாநாட்டில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அவர் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது.

udhayanidhi stalin sanatana dharma high court

அந்த மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின், ‛‛சிலவற்றை எதிர்க்க வேண்டும். சிலவற்றை ஒழிக்க வேண்டும். டெங்கு, மலேரியா அல்லது கொரோனாவை நாம் எதிர்க்க முடியாது. அவற்றை நாம் ஒழிக்க வேண்டும். அதேபோல், சனாதனத்தை எதிர்ப்பதை விட அதை ஒழிக்க வேண்டும்" என்று பேசினார்.
இது சர்ச்சையை கிளப்பியது.

உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, பீகார், கர்நாடகா, ஜம்மு -காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து பாஜகவின் ஐடி விங்க் தேசிய பொறுப்பாளர் அமித் மாளவியா தனது எக்ஸ் பக்க்ததில் கருத்து தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலின் பேசிய வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, உதயநிதி ஸ்டாலின், சனாதானத்தை டெங்கு, மலேரியாவுடன் இணைத்துப் பேசி இனப் படுகொலைக்கு அழைப்பு விடுத்துள்ளார் என்று கூறியிருந்தார்.

உதயநிதி ஸ்டாலின் இனப்படுகொலை என்று கூறாத நிலையில் தவறான தகவலை அமித் மாளவியா பரப்புவதாக திமுகவினர் கொதித்தனர். இதுதொடர்பாக திருச்சி மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் தினகரன் அளித்த புகாரின் பேரில் அமித் மாளவியா மீது திருச்சி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அமித் மாளவியா சார்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி எஸ் மதி விசாரித்தார். அப்போது அமித் மளாவியா மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.

மேலும் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நீதிமன்றம், ‛‛2023ல் சனாதன தர்மம் குறித்த உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து வெறுப்புப் பேச்சுக்குச் சமம். கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவால் இந்து மதம் மீது தெளிவான தாக்குதல்" நடத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றம் சொன்னது. உதயநிதி அதே சித்தாந்தப் பின்னணியைச் சேர்ந்தவர் என்பதையும் குறிப்பிட்டது.

வெறுப்புப் பேச்சுகளைத் தொடங்குபவர்கள் தண்டிக்கப்படாமல் விடப்படுவதை நீதிமன்றம் கவலையுடன் பதிவு செய்தது. அதன்படி, "கடந்த 100 ஆண்டுகளாக திராவிடர் கழகத்தாலும், அதைத் தொடர்ந்து திமுகவாலும் இந்து மதம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவது கண்கூடாக தெரிகிறது. தற்போதைய நபரும் அதே கட்சியை சேர்ந்தவர் தான்.

ஒட்டுமொத்த பேச்சையும் ஆராயும்போது அதில் பொதித்துள்ள மறைமுகமான அர்த்தம் பற்றி தான் மனுதாரர் (அமித் மாளவியா) கேள்வி எழுப்பி உள்ளது தெளிவாக தெரிகிறது. மேலும் இந்த நீதிமன்றம் வேதனையுடன் ஒரு விஷயத்தை பதிவு செய்கிறது. வெறுப்பு பேச்சுகளை தொடங்கும் நபர்கள் சுதந்திரரமாக உள்ளனர். ஆனால் அத்தகைய பேச்சுக்கு எதிர்வினையாற்றுபர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுகின்றனர்.

எதிர்வினையாற்றுபவர்களை நீதிமன்றங்கள் கேள்வி கேட்கின்றன. இருப்பினும் வெறுப்பு பேச்சை தொடங்கியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் தொடங்குவது இல்லை'' என்று கவலை தெரிவித்தது. மேலும் இந்த விவகாரத்தில் தற்போதும் உதயநிதி ஸ்டாலின் மீது தமிழகத்தில் எந்த போலீஸ் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. பிற மாநிலங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+