வைகை அணையில் தண்ணீர் திறப்பு.. விநாடிக்கு 900 க.அடி.. மதுரை, திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி
மதுரை: மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல் போக விவசாய பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. விநாடிக்கு 900 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
தேனி மாவட்டம் முழுவதும் தென் மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதேபோல் முல்லைப்பெரியாறு நீர்பிடிப்பு பகுதிகளிலும் தொடர் மழை பெய்தது. இதைத்தொடர்ந்து அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. எனவே அணையில் இருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது.

சமீபத்தில் பெய்த மழையால் தேனி மாவட்டம் வைகை அணையின் நீர்மட்டம் 60 அடி நிரம்பியுள்ளது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 60 அடியாக உயர்ந்து உள்ளது. இதையடுத்து, வைகை அணையில் மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல் போக விவசாயத்திற்காக தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து வைகை அணையில் இருந்து பெரியார் பிரதான கால்வாய் பாசன பகுதியில் ஜூன் 15 முதல் அக்டோபர் 12 வரை தண்ணீர் திறந்து விடப்படும் என தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அறிவித்தது.
அதன்படி இன்று (ஜூன் 15) காலை வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு தண்ணீரை திறந்து வைத்தனர். இதனைத்தொடர்ந்து விநாடிக்கு 900 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இன்று முதல் 120 நாட்களுக்கு முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுகிறது.
இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை, மதுரை மாவட்டத்தில் மதுரை வடக்கு, வாடிப்பட்டி வட்டங்களில் உள்ள 45 ஆயிரத்து 41 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். அணையின் தண்ணீர் இருப்பு, வரத்தை பொறுத்து வினாடிக்கு 900 கன அடி வீதம் 45 நாட்கள் முழுமையாகவும், 75 நாட்கள் முறை வைத்தும் என 120 நாட்களுக்கு 6 ஆயிரத்து 739 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படும். இதனால் கரையோர மக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications