நீட்டி முழங்கிய வைகைச்செல்வன்! ஸ்நாக்ஸ் நேரத்தில் பொறுமையிழந்த தொண்டர்கள்! இபிஎஸ் பேச ஜஸ்ட் 30Mins
மதுரை: அதிமுக மாநாடு தீர்மானங்களை வாசிப்பதாக மைக் பிடித்த வைகைச் செல்வன், முதல் 3 தீர்மானங்களை வாசித்து முடிப்பதற்குள் கூட்டம் கலைய ஆரம்பித்துவிட்டது.
காரணம் மதியம் கொடுக்கப்பட்ட சாம்பார் சாதம், புளி சாதம் பலருக்கும் பிடிக்கவில்லை என்பதால் பிஸ்கட்டும், தண்ணீரும் மட்டும் சாப்பிட்டுவிட்டு மாநாட்டில் பங்கேற்றவர்கள் ஏராளம். மாலையாவது தேநீர் குடிக்கலாம் என எதிர்பார்த்திருந்த நேரத்தில் அதிமுக மாநாடு தீர்மானங்களை வைகைச் செல்வன் வாசிக்க ஆரம்பித்தார்.

பக்கம் பக்கமாக அவர் வாசித்ததை கேட்டு தலை சுற்றாத குறையாக அதிமுக தொண்டர்கள் தவித்து வந்தனர். கால் மணி நேரமாக 3 தீர்மானங்களை தான் அவர் வாசித்திருந்தார். இன்னும் 13 தீர்மானங்களை அவர் வாசித்து முடிப்பதற்கு மயக்கமே வந்துவிடும் எனக் கருதி தொண்டர்கள் லேசாக கலையத் தொடங்கிவிட்டனர்.
இதனை பார்த்து பதறிப்போன சி.விஜயபாஸ்கர் அவர்களை அமைதிப்படுத்தி அமர வைத்தார். அதுமட்டுமல்ல ஆவலோடு எதிர்பார்த்த எடப்பாடி பழனிசாமி இன்னும் 30 நிமிடங்களில் பேச தொடங்கிவிடுவார் எனக் மேடையிலிருந்து அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சுதாரித்துக்கொண்ட வைகைச் செல்வன் மாநாடு தீர்மானங்களின் தலைப்பு வரியை மட்டும் படிப்பதாக கூறி கடகடவென படித்துக் கொண்டிருந்தார்.
இடையே கே.பி.முனுசாமி எழுந்து வந்து ஏதோ சொல்ல, டக்கென மைக் பிடித்த விஜயபாஸ்கர் மின்னல் வேகத்தில் மீதமிருந்த தீர்மானங்களை வாசித்து முடித்தார். இதனால் அப்செட் ஆன வைகைச் செல்வன் இருக்கையில் அமர்ந்துகொண்டார்.
நேரத்தின் அருமைக் கருதியும், தொண்டர்கள் சீக்கிரம் ஊர் திரும்ப வேண்டும் என்பதற்காகவும் இந்த துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications