என்னை சுட்டுப் பிடிக்க உத்தரவா? பதறிப் போய் மதுரையில் பிரஸ் மீட் கொடுத்த வரிச்சியூர் செல்வம்!
மதுரை: கோவையில் பயங்கர ஆயுதங்களுடன் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டதால் ரவுடி வரிச்சியூர் செல்வத்தை சுட்டுப்பிடிக்க போலீசார் உத்தரவு எனத் தகவல் பரவிய நிலையில், மதுரையில் அவர் பேட்டி அளித்துள்ளார். தான் கோவைக்கு சென்றே 13 வருடம் ஆகிவிட்டது எனத் தெரிவித்துள்ளார் வரிச்சியூர் செல்வம்.
மதுரை மாவட்டம் வரிச்சியூரைச் சேர்ந்தவர் செல்வம். பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில், பிரபல ரவுடியான வரிச்சியூர் செல்வம் கோவை செல்வபுரம் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.

கோவையில் கட்டப்பஞ்சாயத்து ஒன்றுக்காக தனது ஆதரவாளர்கள் மற்றும் ஆயுதங்களுடன் வரிச்சியூர் செல்வம் சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை பிடிக்க கோவையில் 5 சிறப்பு தனி படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது.
தனிப்படையினர் நேற்று இரவு முதல் செல்வபுரம் உள்பட மாநகரம் முழுவதும் சல்லடை போட்டு வரிச்சியூர் செல்வம் கேங்கை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தியதாக கூறப்படுகிறது. ஓட்டல்கள், லாட்ஜ்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் என பல இடங்களில் அவரை தேடினர். ஆனால் வரிச்சியூர் செல்வமோ, அவரது ஆதரவாளர்களோ பிடிபடவில்லை. இன்றும் தேடுதல் வேட்டை 2-வது நாளாக தொடர்ந்து நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று மதுரையில் திடீரென செய்தியாளர்களைச் சந்தித்தார் வரிச்சியூர் செல்வம். அப்போது பேசிய அவர், "கோவை பகுதிக்கு சென்று கட்டப்பஞ்சாயத்து செய்ததாக இப்போது நான் செய்தி பார்த்தேன். நான் கோவை பக்கம் போயே 13 வருடம் ஆகிவிட்டது. போலீஸ் கட்டுப்பாட்டில் தான் நான் இருக்கிறேன். நான் எங்கு போனாலும் காவல்துறை அதிகாரி ஒருவரிடம் சொல்லிவிடுவேன். நான் வெளியே எங்கு சென்றாலும் என் இருப்பிடத்தை அனுப்பி விடுவேன்.
போலீஸ்காரர்கள் தான் என்னை பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள். காவல்துறைக்கு கட்டுப்பட்டு நல்ல பிள்ளையா வாழ்ந்துட்டு இருக்கேன். எந்த கேஸுக்கும் நான் போறதில்லை. பேரன், பேத்திகளோடு நான் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என் தலைமையில் இன்று ஒரு நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. இந்த தவறான செய்தி காரணமாக அதற்கு போக முடியாமல் போய்விட்டது." எனக் கூறியுள்ளார்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications