மதுரை மேற்கில் தவெக தலைவர் விஜய் போட்டியா? மாவட்டச் செயலாளர் கொடுத்த பரபர விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியது. இதுதொடர்பான ஒன் இந்தியா செய்தி தளம் சார்பாக தவெகவின் மதுரை மேற்கு மாவட்டச் செயலாளர் தங்கப்பாண்டியிடம் விசாரித்த போது, அந்த போஸ்டர் தொண்டர்களின் விருப்பத்தை வெளிக்காட்ட ஒட்டப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். ஏற்கனவே விக்கிரவாண்டி மாநாடு, பூத் கமிட்டி மாநாடு, பொதுக்குழு ஆகியவற்றை தவெக நடத்தி முடித்துள்ள நிலையில், அடுத்தக்கட்டமாக விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளதாக சொல்லப்பட்டு வருகிறது.

Vijay To Contest From Madurai West TVK Secretary Thangapandi Explains

விஜய் பிறந்தநாள்

ஜூன் 22ஆம் தேதி விஜயின் பிறந்தநாள் வருவதால், அதனையொட்டி அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனிடையே தவெக தலைவர் விஜய், எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. தவெக தொடங்கப்பட்ட போது விஜய் நாகை தொகுதியில் போட்டியிட இருப்பதாக கூறி வந்தனர். ஆனால் தவெக தரப்பில் இதுவரை விஜய் போட்டியிடும் தொகுதி குறித்து பேசவில்லை.

எம்ஜிஆர் பாணியில் விஜய்

இந்த நிலையில் இன்று மதுரை மேற்கு தொகுதியில் விஜய் போட்டியிட்டு 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று தவெக நிர்வாகிகள் சார்பாக போஸ்டர் ஒட்டப்பட்டது. இதனால் செல்லூர் தொகுதியில் விஜய் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் 1980 தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்டு எம்ஜிஆர் வெற்றி பெற்றார்.

மதுரை மேற்கில் போட்டி?

இதனால் எம்ஜிஆர் பாணியில் விஜய்-ம் மதுரையில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் மதுரையில் விஜய் போட்டியிடும் பட்சத்தில் தென் மாவட்டங்களில் தவெகவுக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைக்கும். அதேபோல் அதிமுகவின் கோட்டையான மதுரை மேற்கு தொகுதியில் செல்லூர் ராஜுவை எதிர்த்து விஜய் நிற்பாரா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டது.

தவெக நிர்வாகி விளக்கம்

இந்த சூழலில் தவெகவின் மதுரை மேற்கு மாவட்ட தவெக செயலாளர் தங்கப்பாண்டியிடம் ஒன் இந்தியா சார்பாக விசாரிக்கப்பட்டது. அப்போது அவர் பேசுகையில், தவெக தலைவர் விஜய் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம். அந்த எண்ணத்தை வெளிப்படுத்தவே தொண்டர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

அடுத்தக்கட்ட நடவடிக்கை

தவெக தலைவர் விஜய் போட்டியிடுவது குறித்து தலைமையிடம் இருந்து முறையான அறிவிப்பு வரும். மதுரை பூத் கமிட்டி மாநாடு தொடர்பான அறிவிப்பு, பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஆகியவை தொடர்பாகவும் விரைவில் அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். மேலும், தவெக சார்பாக 234 தொகுதிகளிலும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+