மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இது நல்லா இருக்கே! சட்டென கேட்ட ஸ்டாலின்.. அருகே சென்ற "பிடிஆர்".. மொத்தமாக "நொறுங்கிய" வதந்தி!

Google Oneindia Tamil News

மதுரை: பள்ளி மாணவ, மாணவியருக்கான காலை உணவு திட்டத்தின் தொடக்க விழாவில் இன்று முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இருவரும் மிகவும் நெருக்கமாக காணப்பட்டனர்.

சமீபத்தில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி புதுப்பட்டியை சேர்ந்த லட்சுமணன் என்ற ராணுவ வீரர் ஜம்மு காஷ்மீரில் வீரமரணம் அடைந்தார். இவரின் உடலுக்கு அரசு மரியாதை மற்றும் அஞ்சலி செலுத்த நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் அவரின் வீட்டிற்கு சென்றார்.

அப்போது அவரின் காரின் செருப்பை வீசி எறிந்து பாஜகவினர் போராட்டம் செய்தனர். இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

 அமெரிக்க பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்! அலசி ஆராய்ந்து செயல்வடிவம் தந்த முதலமைச்சர் ஸ்டாலின்! அமெரிக்க பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்! அலசி ஆராய்ந்து செயல்வடிவம் தந்த முதலமைச்சர் ஸ்டாலின்!

 பரபரப்பு

பரபரப்பு

இந்த விவகாரத்தில் பாஜக உறுப்பினராக இருந்த முன்னாள் எம்எல்ஏ சரவணன், அன்று இரவே பிடிஆரை சந்தித்து மன்னிப்பு கேட்டார். சரவணன் இதில் மன்னிப்பு கேட்டாலும், ஆளும் திமுக ஏனோ இதை சீரியசாக எடுக்கவில்லை என்று விவாதங்கள் எழுந்தன. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்தில் ஆளும் திமுக அரசு பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் நிதானமான கையாண்டது. சட்டத்தை கையில் எடுக்காமல் சட்டப்படி இந்த விவகாரத்தை ஆளும் திமுக அரசு கையாண்டது.

நன்றாக கையாண்டது

நன்றாக கையாண்டது

பெரிய அளவில் சட்ட ஒழுங்கு பிரச்சனை எதுவும் எடுக்காமல், போலீசை வைத்து கைதுகளை மேற்கொண்டு அரசு முறையாக நடவடிக்கை எடுத்தது. ஆனால் இதை வைத்து வேறு மாதிரி விவாதங்களும் இணையத்தில் எழுந்தன. அதன்படி பிடிஆருக்கு போதுமான சப்போர்ட்டை ஆளும் தரப்பின் மேலிடம் கொடுக்கவில்லை என்றும் "சிலர்" கிளப்பி விட்டனர். அமைச்சர் ஒருவரின் காரில் இப்படி செருப்பு வீசி இருக்கிறார்கள். ஆளும் கட்சியினர் இப்படி வேடிக்கை பார்க்கிறார்களே என்று சில விமர்சனங்கள் எழுந்தன.

சப்போர்ட்

சப்போர்ட்

அதோடு அமைச்சர் பிடிஆருக்கும் கட்சி தலைமைக்கும் உரசல் என்றெல்லாம் கூட விவாதங்கள் எழுந்துள்ளன. இது போக கடந்த வாரம் முதல்வர் ஸ்டாலின் மதுரைக்கு சென்றார். அப்போதும் கூட அவர் பிடிஆர் உடன் நெருக்கமாக இல்லை. அமைச்சர் மூர்த்தி வீட்டு திருமணத்திற்கு முதல்வர் ஸ்டாலின் சென்றார். ஆனால் பெரிதாக பிடிஆருடன் நெருக்கமாக எங்கும் முதல்வர் காணப்படவில்லை. இதை வைத்தும் இருவரும் மனஸ்தாபமா என்றெல்லாம் விவாதங்கள் செய்யப்பட்டு வந்தன.

உரசல்

உரசல்

ஆனால் அந்த வதந்திகள், விவாதங்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இன்று அமைச்சர் பிடிஆர் உடன் முதல்வர் ஸ்டாலின் மிகவும் நெருக்கமாக இருந்தார். "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்" இன்று தமிழ்நாட்டில் அமலுக்கு வந்தது. சென்னை உள்ளிட்ட அனைத்து மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மற்றும் மலைப் பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டம் மூலம் நேரடியாக ஒரு லட்சத்து 14,095 மாணவா்களுக்கு காலை உணவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

 மெசேஜ்

மெசேஜ்

அதோடு இன்று முதல்வர் ஸ்டாலின் பிடிஆரிடம் மிகவும் நெருக்கமாக காணப்பட்டார். வதந்திகளை நொறுக்கும் விதமாக இருவரும் நெருக்கமாக காணப்பட்டனர். பிடிஆரிடம் சில சந்தேங்களை கேட்டார். இந்த உணவு திட்டத்திற்காக ஹை டெக் கிச்சன் மதுரையில் களமிறக்கப்பட்டு உள்ளது. அதாவது நடமாடும் கிட்சன் இதற்காக கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த கிட்சன் உள்ளேயே சமைக்கும் வசதிகள் இருக்கும். இதில் கைகளை வைத்து சமைக்காமல் முழுக்க முழுக்க எந்திரங்கள் மூலம் சமைக்கும் வசதிகள் உள்ளன.

மெசேஜ்

மெசேஜ்

அதோடு இன்று முதல்வர் ஸ்டாலின் பிடிஆரிடம் மிகவும் நெருக்கமாக காணப்பட்டார். வதந்திகளை நொறுக்கும் விதமாக இருவரும் நெருக்கமாக காணப்பட்டனர். பிடிஆரிடம் சில சந்தேகங்களை கேட்டார். இந்த உணவு திட்டத்திற்காக ஹை டெக் கிச்சன் மதுரையில் களமிறக்கப்பட்டு உள்ளது. அதாவது நடமாடும் கிட்சன் இதற்காக கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த கிட்சன் உள்ளேயே சமைக்கும் வசதிகள் இருக்கும். இதில் கைகளை வைத்து சமைக்காமல் முழுக்க முழுக்க எந்திரங்கள் மூலம் சமைக்கும் வசதிகள் உள்ளன.

English summary
Why CM Stalin being close with PTR Palanivel Thiagarajan is an important message to DMK?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X