மதுரையில் மஞ்சுளா.. ராத்திரியில் நைலான் கயிறை எடுத்து.. கணவன் கதற கதற கொலை.. என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மாவட்டம் குட்லாம்பட்டி அருகே கணவனை கயிறால் இறுக்கி மனைவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக மனைவி கணவனை கொன்றார் என்பதை பார்ப்போம்.

குடிப்பழக்கம் என்பது சமூகத்தை மோசமாக சீரழித்து வருகிறது. முன்பு குடிப்பது என்பதை அவமானமாக மக்கள் கருதினார்கள். குடிகாரர்களை மோசமானவர்களாகவும், திருடர்களை போலவும் பார்த்தார்கள். அதனால் குடிப்பதை அவமானகரமான விஷயமாக மக்கள் கருதினார்கள். ஆனால் அரசே மதுவிற்பனையை ஏற்று நடத்திய பின்னர், குடிப்பழக்கம் தாறுமாறாக அதிகரித்தது. பலரும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர்.

Wife arrested for murdering husband in Madurai Kutladampatti

சம்பாதிக்கும் பணத்தை பெரும்பாலும் மது அருந்தவே செலவு செய்கிறார்கள். இதனால் தமிழகத்தில் பலகுடும்பங்கள் வறுமையில் தவிக்கின்றன. பல குடும்பங்களின் வறுமைக்கு மிக முக்கிய காரணம் குடிபழக்கமாக உள்ளது. அதேபோல் குடிப்பழக்கத்தின் காரணமாக குடும்பத்தில் சண்டைகள் நடக்கின்றன. கள்ளக்காதல்கள் அதிகரிக்கின்றன. இன்னொரு பக்கம் வன்முறை, கொலை போன்ற குற்றச்செயல்களுக்கும் மதுவே முதல் காரணமாக இருக்கிறது. அதற்கு உதாரணமே இந்த மதுரை சம்பவம்.

மதுரை மாவட்டம் குட்லாம்பட்டி அருகே மது குடித்துவிட்டு அடிக்கடி தகராறு செய்த கணவனை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்திருக்கிறார். மதுரை மாவட்டம் குட்லாடம்பட்டி அஞ்சுகுழி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் 27 வயது ஆகும் ராஜ்குமார் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். இவரும், அஞ்சுகுழி பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா (24) என்பவரும் காதலித்து, 2015-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.

இவர்களுக்கு சபரி பாண்டி, மகாலட்சுமி, சரவணபாண்டி என 3 குழந்தைகள் இருக்கிறார்கள்.. ராஜ்குமார் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்திருக்கிறார். இது ஒருபுறம் எனில் கணவனின் குடிப்பழக்கத்தால் வாழ்வாதாரம் பறிபோன நிலையில் வேலைக்கு சென்று வந்துள்ளார் மஞ்சுளா. இந்நிலையில் மஞ்சுளா வேலைக்கு செல்ல தொடங்கிய நிலையிலும் நடத்தையிலும் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

கணவன் ராஜ்குமாரின் நடவடிக்கையால் மனவேதனை அடைந்த மஞ்சுளா, மனது அளவில் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறதுது. இதனால் அவரை கொன்றுவிடுவது என முடிவு செய்திருக்கிறார். கடந்த ஞாயிறு இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராஜ்குமாரின் கழுத்தை நைலான் கயிற்றால் இறுக்கி கொலை செய்திருக்கிறார்.

அவர் இறந்ததை உறுதி செய்த மஞ்சுளா, தனது கணவர் தனக்குத்தானே கழுத்தை கயிற்றால் இறுக்கி, தற்கொலை செய்து கொண்டதாக அக்கம்பக்கத்தினரிடம் கூறி, கதறி அழுதிருக்கிறார். இந்த தகவல் அறிந்த வாடிப்பட்டி போலீசார் அங்கு சென்று ராஜ்குமாரின் உடலை கைப்பற்றி விசாரித்துள்ளார்கள். இதனிடையே போலீசாரின் விசாரணைக்கு பயந்து, கச்சைகட்டி கிராம நிர்வாக அலுவலரிடம் மஞ்சுளா சரண் அடைந்தார். அப்போது அவர், தனது கணவரின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த தகவலின்பேரில் மஞ்சுளாவை வாடிப்பட்டி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையே தாய் மஞ்சுளா சிறையில் அடைக்கப்பட்டதாலும், தந்தை ராஜ்குமார் கொல்லப்பட்டதாலும் இவர்களுடைய 3 குழந்தைகளும் பெற்றோரை இழந்து பரிதவிப்பில் உள்ளன. தற்போது அந்த குழந்தைகள் ராஜ்குமாரின் பெற்றோரிடம் உள்ளன. பெற்றோரை 3 குழந்தைகளும் சிறுவயதிலேயே இழக்கும் நிலைக்கு மோசமான மதுபழக்கம் தான் முதல் காரணமாக பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+