சரியான திட்டமிடல் இருந்தால் எந்த சூழலிலும் எப்போதும் வெற்றி பெறலாம் - முனைவர் சௌ. நாராயணராஜன்

மாணவர்கள் நேர மேலாண்மையை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சரியான திட்டமிடல் இருந்தால் எந்த சூழலிலும் எப்போதும் வெற்றி பெறலாம் என்றும் முனைவர் சௌ. நாராயணராஜன் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

மதுரை: மாணவர்கள் உயர்கல்வியை தேர்வு செய்யும் முன்பாக என்ன மாதிரியான படிப்புகள் உள்ளன என்று பார்த்து நமக்குத் தேவையான விரும்பிய கோர்ஸை தேர்வு செய்ய வேண்டும். விரும்பிய கோர்ஸ் கிடைக்கா விட்டால் நமக்கு கிடைத்த கோர்ஸை விரும்பி படிக்க வேண்டும் அதுதான் விவேகமானது. எந்த படிப்பு படித்தாலும் நன்றாக படித்தால் வெற்றி பெற முடியும் என்று சிவந்தி ஆதித்தனார் கல்லூரி செயலாளர் டாக்டர் சௌ. நாராயணராஜன்

மாறிவரும் இன்றைய கல்விச்சூழலில் உயர்கல்வித்துறையில் என்ன மாதிரியான படிப்புகள் உள்ளன என்று நமது ஒன் இந்தியா தமிழ் இணையதளத்திற்கு விரிவாகவும் விளக்கமாகவும் பதில் அளித்துள்ளார் டாக்டர் சௌ. நாராயணராஜன்.

கலை,அறிவியல், பொறியியல், மருத்துவம், வேளாண்மை, மேலாண்மை, மீடியா, டிசைனிங் போன்ற கல்வித்துறையில் நமக்கு எதில் திறமையும் ஆர்வமும் உள்ளதோ அது சார்ந்த படிப்புகளை தேர்வு செய்து படிக்க வேண்டும் அப்படி படித்தால் எளிதில் அந்த துறையில் வெற்றி பெறலாம் என்கிறார் டாக்டர் சௌ. நாராயணராஜன்.

முக்கிய துறைகள்

முக்கிய துறைகள்

அறிவியல் துறை சார்ந்த படிப்புகளில் கடல் சார் அறிவியல், வேளாண்மை அறிவியல், வானவியல், பயோ கெமிஸ்ட்ரி, சுற்றுச்சூழல் அறிவியல், தடய அறிவியல், உணவுத் தொழில் நுட்பம், மண்ணியல், தோட்டவியல், மனையியல், கடலியல், பிளாஸ்டிக் சயின்ஸ், பிசிக்கல் சயின்ஸ் போன்ற பல முக்கிய படிப்புகள் உள்ளன.

டெக்னாலஜி

டெக்னாலஜி

பொறியியல் தொழில் நுட்பத்துறையில் எண்ணற்ற துறைகள் உள்ளன. அதில் தற்போது பல படிப்புகளை மாணவர்கள் தேர்வு செய்யலாம். ஏரோநாட்டிக்கல், ஆர்க்கிடெக்சர்,பயோ மெடிக்கல், பயோ டெக்னாலஜி, ஜெனிடிக்ஸ், வேதியியல் பொறியியல், சுற்றுச்சூழல் பொறியியல், மின் பொறியியல், ரப்பர் டெக்னாலஜி, டெக்ஸ்டைல் டெக்னாலஜி என பலதுறைகள் உள்ளன.

தேவையான துறைகள்

தேவையான துறைகள்

மருத்துவத்துறையில் நிறைய படிப்புகள் உள்ளன. ஆயுர்வேதா, சித்தா, பிசியோதெரபி, நேச்சுரோபதி, நியூட்ரிசன் அன் டயட்டிக்ஸ், ரேடியோதெரபி, வெட்னரி சயின்ஸ், பல் மருத்துவம், ஹோமியோபதி, நர்சிங், கண் மருத்துவம், மனநல மருத்துவம், ஸ்பீச் அன் ஹியரிங் தெரபி என பல துறைகள் உள்ளன. மருத்துவத்துறையை படிக்க விரும்பும் மாணவர்கள் அவர்களுக்குத் தேவையான துறைகளை தேர்வு செய்து படிக்கலாம்.

மேலாண்மை

மேலாண்மை

வேளாண்மைத்துறை சார்ந்த படிப்புகள் நிறைய உள்ளன. அதே போல நிர்வாகத்துறை,மேலாண்மைத்துறை சார்ந்த படிப்புகளை தேர்வு செய்து மாணவர்கள் படிக்கலாம். பிசினஸ் மேனேஜ்மென்ட், ஈவன்ட் மேனேஜ்மென்ட், வெளிநாட்டு மேலாண்மை, பெர்சனால் மேனேஜ்மெண்ட், ரீடெய்ல் மேனேஜ்மென்ட், பப்ளிக் மேனேஜ்மெண்ட், தொழிலாளர் மேலாண்மை, சேல்ஸ் அன் மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட் என பலதுறைகள் உள்ளன.

பாதுகாப்புத்துறை

பாதுகாப்புத்துறை

கனிணித்துறையில் பல படிப்புகள் உள்ளன. அதுபோல மக்கள் தொடர்புத்துறை, இதழியல், விளம்பரத்துறை, ரேடியோ ஜாக்கி, வீடியோ ஜாக்கி என மீடியா துறையில் பல படிப்புகள் உள்ளன. ராணுவம், பாதுகாப்புத்துறை சார்ந்த படிப்புகளும் உள்ளன. கடற்படை, ராணுவம், விமானத்துறை போன்றவைகளை தேர்வு செய்யலாம்.

அலங்காரத்துறை

அலங்காரத்துறை

கலைத்துறை படிப்புகள் நிறைய உள்ளன. பங்குச்சந்தை பற்றி படிக்கலாம், வங்கித்துறை சார்ந்த படிப்புகளும் உள்ளன. சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட், செகரட்டரி படிப்புகள் என நிறைய விசயங்கள் உள்ளன.
நகை வடிவமைப்பு, ஆடை வடிவமைப்பு, தலை அலங்காரம், பியூட்டிசியன் சார்ந்த படிப்புகள் உள்ளன.

சினிமாத்துறை

சினிமாத்துறை

இயல், இசை, நாடகத்துறை சார்ந்த படிப்புகளில் நடிப்பு, இசை, இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங் என பலதுறைகளில் படிக்கலாம். டிசைனிங் துறையில் ஜெம்மாலஜி, இன்டீரியர் டிசைனிங் உள்ளிட்ட பலதுறை படிப்புகள் உள்ளன. கல்வித்துறையில் கடல் அளவு உள்ளன. நமக்குத் தேவையான படிப்புகளை தேர்வு செய்து படிக்க வேண்டும். இணைய தளத்தில் தகவல்கள் குவிந்து கிடக்கின்றன. உங்களின் திறமைக்கேற்ற படிப்புகளை தேர்வு செய்து படிப்பது நல்லது.

நேர மேலாண்மை அவசியம்

நேர மேலாண்மை அவசியம்

என்னதான் ஆன்லைன் வகுப்புகளாக இருந்தாலும் மாணவர்களுக்குள் ஒரு நேர நிர்வாகம் நேர மேலாண்மை அவசியம். உங்களுடைய அறிவைப் பெருக்குவதற்காக என்ன செய்கிறீர்கள் என்று பார்க்க வேண்டும். படிப்பில் கவனம் செலுத்தினால் மட்டுமே மாணவர்கள் எந்த சூழலிலும் வெற்றி பெற முடியும். எந்த தொழில் செய்தாலும் சிறப்பாக செய்து வெற்றி பெற வேண்டும்.

வெற்றிக்கு அவசியம்

வெற்றிக்கு அவசியம்

நம்முடைய கல்வி என்ன கற்றுத்தருகிறது என்று பார்க்க வேண்டும். நினைவாற்றல் அவசியம். மாணவர்களுக்கு இரண்டு விசயங்கள் ரொம்ப முக்கியம் உங்களுடைய மனநிலை, உங்களுடைய திறன். மனநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும் அது போல உங்களின் திறனையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்த திட்டமிடல் இருந்தால் இன்றைய மாணவர்கள் எந்த சூழலிலும் எப்போதும் வெற்றி பெறலாம் என்றும் முனைவர் முனைவர் சௌ. நாராயணராஜன் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+