For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அவேர்னஸ் இல்லைனு எப்படி சொல்றீங்க?.. அப்ப நீங்கள் ஃபீல்டு வொர்க் பன்னலை!.. கடிந்த அமைச்சர் நாசர்

Google Oneindia Tamil News

திருத்தணி: கொரோனா தடுப்பு பணியில் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என திருத்தணியில் நடந்த ஆய்வு கூட்டத்தில் பால் வளத் துறை அமைச்சர் நாசர் அதிகாரிகளிடம் கடிந்து கொண்டார்.

திருத்தணி அரக்கோணம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில், திருத்தணி மற்றும் திருவள்ளூர் சட்டசபை தொகுதிகளுக்கான கொரோனா தடுப்பு பணி ஆய்வுக் கூட்டம் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் நேற்று நடந்தது.

கொரோனா காலத்தில் உயரும் உள்நாட்டு விமான கட்டணங்கள் - ஜூன் 1 முதல் அதிகரிப்பு கொரோனா காலத்தில் உயரும் உள்நாட்டு விமான கட்டணங்கள் - ஜூன் 1 முதல் அதிகரிப்பு

திருவள்ளூர் கலெக்டர் பொன்னையா வரவேற்றார்.
இதில், அரக்கோணம் எம்.பி., ஜெகத்ரட்சகன், எம்.எல்.ஏ.,க்கள் திருத்தணி எஸ்.சந்திரன், திருவள்ளூர் வி.ஜி.ராஜேந்திரன், மாவட்ட திட்ட அலுவலர் லோகநாயகி, சுகாதாரத்துறை இணை இயக்குனர் ராணி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றிய அதிகாரிகள் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

அமைச்சர் நாசர்

அமைச்சர் நாசர்

முதலில் அமைச்சர் நாசர் அதிகாரிகள் மற்றும் வட்டார மருத்துவர்களிடம் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்தார். பின்னர் அடுத்த மாதம், 15ம் தேதிக்குள், 18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என அறிவுறுத்தினார்.

கொரோனா தொற்று

கொரோனா தொற்று

பின்னர், அமைச்சர் நாசர் பேசியதாவது: கொரோனா தொற்றில் இருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக முதல்வர் ஸ்டாலின் தேவையான மருத்துவ உபகரணங்களை பிற மாநிலங்களில் இருந்து வாங்கி வருகிறார். மருத்துவர்கள் மற்றும் உள்ளாட்சி துறை அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும்.

ஒரு வாரம்

ஒரு வாரம்

அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும். மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீடித்ததால், அதற்கேற்றவாறு காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் கூடுதல் வாகனங்கள் மூலம் கிராமம் மற்றும் நகர்புறங்களில் விற்பனை செய்ய வேண்டும். சில அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் கொரோனா தடுப்பு பணியில் தொய்வு காட்டி வருகின்றனர்.

துரிதம்

துரிதம்

அவர்கள் தங்களை மாற்றிக் கொண்டு பணிகளை துரிதப்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் அதிகாரிகள், மருத்துவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அரசுடன் அதிகாரிகள் ஒத்துழைத்தால்தான் கொரோனா தொற்று பரவலை தடுக்க முடியும். இவ்வாறு அவர் அதிகாரிகளை கடிந்து கொண்டு பேசினார்.

English summary
Minister Sa.Mu. Nasser gets angry over Government Officers in Coronavirus vaccine.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X