551 கோவில்களில் குடமுழுக்கு – அமைச்சர் சேகர்பாபுவின் அறிவிப்பு
ராணிப்பேட்டை: வரும் 7 மாதங்களில் தமிழகத்தில் உள்ள 551 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழக இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
Recommended Video
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் ரோப் கார் அமைவிடத்தில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ரூபாய் 11 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப் பணிகளை மாநில இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பிகே சேகர்பாபு இன்று துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, தமிழகத்தில் வரும் 7 மாதங்களில் 551 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 6 மாதத்தில் ரூபாய் 1600 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்புகளிலிருந்து மீட்கப்பட்டு உள்ளது எனக் கூறினார்.

திருக்கோவில்களுக்கு வரைவு திட்டம்
தமிழகத்திலுள்ள பிரசித்தி பெற்ற 47 திருக்கோயில்களுக்கு வரைவு திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது எனவும், அதனடிப்படையில் அந்த கோவில்களுக்கு பேருந்து வசதிகள்,கழிவறை வசதிள், மலைப்பாதையில் உள்ள கோவில்களுக்கு மருத்துவமனைகள், மடப்பள்ளி, ரோப் கார் வசதி,தானியங்கி வசதி, உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. எனக் கூறினார்.

அறநிலையத்துறையில் மறுமலர்ச்சி
வரும் 5 ஆண்டுகளில் இந்து அறநிலையத்துறையில் மறுமலர்ச்சி ஏற்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது எனக் கூறிய அமைச்சர், தமிழகத்தில் மொழி இன ஜாதி மதங்களை கடந்து இந்து அறநிலைத்துறை செயல்பட்டு வருகிறது எனவும், தமிழகத்தில் பழனி கோவிலுக்கு அடுத்தபடியாக திருச்செந்தூர் கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது எனவே ரூபாய் 300 கோடி மதிப்பீட்டில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைமுறைப்படுத்த ஆணை பிறப்பித்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

சோளிங்கரில் ரோப்கார்
சோளிங்கரில் ஆஞ்சநேயர் கோயிலுக்கு 53 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பேசிய அமைச்சர் சேகர் பாபு,சோளிங்கர் நரசிம்மர் சாமி கோவிலுக்கு வரும் ஆறு மாத காலத்திற்குள் ரோப்கார் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், முதலில் பாதுகாப்பு கருதி மூன்று மாத காலத்திற்குள்ளாக வெள்ளோட்டம் விடப்பட்டு, பின்னர் ரோப்கார் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

காலிப்பணியிடங்கள் நிரப்பட்டு வருகிறது
இந்து அறநிலை துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்பட்டு வருகிறது குறிப்பாக அவசியம் தேவைப்படுகின்ற இடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது எனவும், சென்னை கபாலீஸ்வரர் கலைக்கல்லூரியில் இந்த ஆண்டு 240 மாணவர்கள் சேர்ந்துள்ளனதாகவும், இக்கல்லூரியில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் எனவும் அமைச்சர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
-
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? தனியரசு விலக முடிவு.. அதிருப்தியின் பின்னணி -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்!












Click it and Unblock the Notifications