முளைச்சு மூணு இலை விடல.. 12 வயது மாணவனின் "செட்டப்".. பெண்ணை பலாத்காரம் செய்ய ரூ.100.. ஆடிப்போன ஜனம்
மும்பை: 7ம் வகுப்பு மாணவனுக்கு, இந்த அளவுக்கு வன்முறை எண்ணம் மனதில் உதிக்குமா? என்று ஒட்டுமொத்த மகாராஷ்டிர மாநில பெற்றோர்களும் அதிர்ந்துபோய் உள்ளனர்.. இன்னும் 12 வயதுகூட நிரம்பாத இந்த சிறுவன் செய்திருக்கும் வேலையை பாருங்க..!
சென்னை பெரம்பூரை சேர்ந்த 12 வயது சிறுமி, தோழியின் வீட்டுக்கு செல்வதாக கூறி புறப்பட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர், போலீஸுக்கு புகார் தந்ததையடுத்து, இந்த பகீர் வெளிச்சத்துக்கு வந்தது.

மாணவியின் 14 வயது மற்றும் 16 வயது தோழிகளும் அதே நாளில் மாயமாகியிருக்கிறார்கள். 3 மாணவிகளையும், மாணவர்கள் 3 பேர், காதல் வலையில் வீழ்த்தி அழைத்து சென்றுள்ளனர்.. ஒரு ஐடிஐ மாணவர், 16 மற்றும் 17 வயது மாணவர்கள் என 3 பேரும் சேர்ந்து, மாணவிகளை காதலிப்பதாக அழைத்து சென்றுள்ளனர்.
சென்னை மாணவிகள்: பெரம்பூரில் உள்ள அரசு நூலகம் ஒன்றின் மொட்டை மாடிக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளனர்.. யாராவது வருகிறார்களா என்பதை நோட்டமிடுவதற்கு, சில நண்பர்கள் உதவியிருக்கிறார்கள். இவர்கள் 6 பேர் மீதும் போக்சோ பாய்ந்துள்ளது.. இதில் 3 சிறுவர்கள் சீர்திருத்த பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டனர். மற்ற 3 பேரும் ஜெயிலில் உள்ளனர். மாணவிகள் 3 பேரும் காப்பகத்தில் உள்ளனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடக்கிறது.
சென்னையில் நடந்த இந்த சம்பவத்தின் அதிர்வலையே இன்னும் அடங்காத நிலையில், அடுத்தடுத்த பாலியல் விவகாரங்களில் சிறுவர்கள் சிக்கி வருவது கவலையை தந்து வருகிறது. இதோ மகாராஷ்டிராவில் ஒரு கொடுமை நடந்துள்ளது.
தனியார் பள்ளி: புனேவில் டவுண்ட் டெசில் [Daund Tehsil] பகுதியில் செயல்பட்டுவரும் செயின்ட் செபாஸ்டின் ஆங்கில வழி தனியார் பள்ளியில், 2 மாதங்களுக்கு முன்பு இந்த அக்கிரமம் நடந்துள்ளது.. இந்த பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கிறான் அந்த சிறுவன்..
இந்த மாணவன் சரியாக படிக்க மாட்டான்.. தேர்வுகளிலும் மார்க் மிகவும் குறைவாக வாங்கி வந்துள்ளான்.. பள்ளியில் புராகரஸ் ரிப்போர்ட் தந்தால், அதில், பெற்றோரின் கையெழுத்தை, இந்த சிறுவனே திருட்டுத்தனமாக போட்டுவிடுவானாம்.. இப்படி திருட்டு கையெழுத்து போடுவது, மாணவனுக்கு இயல்பான விஷயமாகிவிட்டது.
கையெழுத்து: இப்படித்தான் ஒருநாள், ரிப்போர்ட் கார்டில், பெற்றோரின் கையெழுத்தை மாணவன் போடுவதை, அதே வகுப்பில் படிக்கும் சிறுமி பார்த்துள்ளார். உடனே இதை, தன்னுடைய வகுப்பு ஆசிரியையிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவன், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்ய சொல்லி, 9ம் வகுப்பு படிக்கும் மாணவனிடம் சொல்லியிருக்கிறான்.. இந்த பாலியல் பலாத்கார கொலைக்கு, கட்டணமாக 100 ரூபாய் கொடுத்துள்ளான். ஆனால் அந்த 9ம் வகுப்பு மாணவனோ, இந்த திட்டத்தை பள்ளி நிர்வாகத்திடம் சொல்லிவிட்டான்.
கோரிக்கை: இதற்கு நடுவில், சம்பந்தப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கும் விஷயம் தெரிந்துவிட்டது. தங்கள் மகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய, சக மாணவன் திட்டமிட்டதை அறிந்த சிறுமியின் பெற்றோர்கள், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டார்கள். ஆனால் , பள்ளி நிர்வாகம் , அவர்களின் கோரிக்கையை காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை..
மாறாக, இந்த விஷயத்தையே மூடி மறைக்க முயன்றுள்ளது. ஆக்ரோஷமாக இருந்த சிறுமியின் பெற்றோரிடம், "சிறுவனை கண்டித்து அனுப்பிவிட்டோம்" என்று பதிலளித்து. இதற்கு மேலும் பொறுமை இழந்த பெற்றோர், கடந்த நவம்பர் 23ம் தேதி போலீசுக்கு சென்றார்கள்.. அங்கேயும் போராடிதான் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது 2 நாளைக்கு முன்பு ஜனவரி 26ம் தேதிதான் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்தார்கள்..
சட்டம்: இதற்கு பிறகே, விஷயத்தை மறைக்க முயன்ற பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் 2 ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது, திருட்டு கையெழுத்து, கொலை, பலாத்காரம் திட்டங்களை தீட்டிய அந்த சிறுவனுக்கு இன்னும் 12 வயதுகூட ஆகவில்லை.. அதனால், சிறார் நீதிச்சட்டம், 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கையை அனுமதிக்காததாலும் அவனுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை....!!












Click it and Unblock the Notifications