பிரபல மாலில் கொடூரம்.. 6 மாத நாயை பலாத்காரம் செய்த உணவு டெலிவரி பாய் கைது!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஒரு பிரபல மாலில் உணவு டெலிவரி செய்யும் 28 வயது இளைஞர் ஒருவர், நாயை பலாத்காரம் செய்ததால் அவரை பாவை போலீஸார் கைது செய்தனர்.
விலங்குகள் நல ஆர்வலரும் , மும்பை விலங்குகள் உரிமை ஆணையத்தின் உறுப்பினருமான மினு சேத் (61). இவர் தெருவில் உள்ள நாய்களுக்கு வழக்கமாக உணவுகளை வழங்குவார்.
இவர் அவருடைய பகுதியில் உள்ள நாய்களுக்கு தினந்தோறும் உணவு அளித்து வருவார். அப்படி உணவு அளித்து வரும் போது கடந்த 29 ஆம் தேதி மும்பை விலங்குகள் உரிமை ஆணையத்தின் தலைவர் விஜய் மோஹான்னியிடம் இருந்து ஒரு வீடியோ வந்தது.

மும்பையில் மால்
அதில் மும்பையில் உள்ள ஒரு மாலில் இரண்டாவது தளத்தில் ஒரு பால்கனியில் இளைஞர் ஒருவர் ஒரு 6 மாத நாயை தூக்கிக் கொண்டு பலாத்காரம் செய்த காட்சிகள் பதிவாகியிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அந்த இளைஞர் குறித்து வழக்குப் பதிவு செய்யுமாறு மினுவுக்கு விஜய் மோஹான்னி கோரிக்கை விடுத்துள்ளார்.

மாலில் பார்
அந்த மாலில் உள்ள பார் மற்றும் உணவகத்தின் சார்பில் பிறந்த 6 மாதமே ஆன நாய் ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது. மற்ற நாய்களை போல் இந்த நாய்க்கும் மினு உணவு அளிப்பாராம். இந்த நாயை அந்த உணவகத்தில் பணியாற்றும் டெலிவரி பாய் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

பல நாட்களாக பலாத்காரம்
இந்த நாயை பல நாட்களாக இது போன்ற கொடூர செயலில் அந்த இளைஞர் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. இந்த பலாத்கார சம்பவத்தை அந்த இளைஞருடன் டெலிவரி பாயாக பணியாற்றும் நபர் வீடியோ எடுத்துள்ளார். அவர் தன்னுடன் பணியாற்றும் நபர்கள், தனக்கு தெரிந்தவர்கள் என நிறைய பேருக்கு வீடியோவை அனுப்பியுள்ளார்.

இளைஞர் கைது
அந்த வகையில் இந்த வீடியோ விஜய் மோஹான்னிக்கும் சென்றது. இதையசுத்து போலீஸார் அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அவர் பாந்த்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த ஆண்டு இதே பகுதியில் நூரி எனும் நாய் பலாத்காரம் செய்யப்பட்டு அதன் பிறப்புறுப்பில் ஒரு குச்சியையும் நுழைத்துவிட்டு சென்ற கொடூர சம்பவமும் நிகழ்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications