30 நொடியில் பிழைத்த உயிர்.. மாரடைப்பால் சுருண்டு விழுந்த நபர்.. காவலர் செய்த அசாத்திய உதவி -வீடியோ
மும்பை விமான நிலையத்தில் மாரடைப்பு காரணமாக துடித்துக் கொண்டிருந்த பயணி ஒருவருக்கு அங்கிருந்த போலீஸ் அதிகாரி கடைசி நேரத்தில் உதவி இருக்கிறார்.
Recommended Video

மும்பை: மும்பை விமான நிலையத்தில் மாரடைப்பு காரணமாக துடித்துக் கொண்டிருந்த பயணி ஒருவருக்கு அங்கிருந்த போலீஸ் அதிகாரி கடைசி நேரத்தில் உதவி இருக்கிறார்.
ஆந்திராவை சேர்ந்தவர் சத்தியநாராயணா குப்பாலா. இவர் மும்பைக்கு கடந்த வாரம் பணி நிமித்தமாக சென்று இருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று மாலை மும்பையில் இருந்து மீண்டும் ஹைதராபாத் வருவதற்காக மும்பை விமான நிலையம் வந்துள்ளார். அப்போதுதான் அந்த மோசமான சம்பவம் நடந்துள்ளது.

அவருக்கு என்ன ஆனது
விமான நிலையத்தில் இவரை அதிகாரிகள் பரிசோதித்துக் கொண்டு இருக்கும் போதே இவர் கீழே சுருண்டு விழுந்துள்ளார். மிகவும் கஷ்டப்பட்டு மூச்சு விட்டு இருக்கிறார். இந்த நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
|
என்ன நடந்தது
இதை பார்த்த அங்கிருந்த காவலதிகாரி மோஹித் குமார் சர்மா வேகமாக ஓடி வந்து அவருக்கு உதவி உள்ளார். சிபிஆர் எனப்படும் முதலுதவி முறை மூலம் அவருக்கு சிகிச்சை அளித்துள்ளார். சத்தியநாராயணாவின் இதயத்தை வேகமாக அழுத்தி, வாய் வழியே காற்றை செலுத்தி உள்ளார். இது சிசிடிவியில் பதிவாகி வீடியோவாக வெளியாகி உள்ளது.

பிழைத்துக் கொண்டார்
இந்த முதலுதவிக்கு பின் சத்தியநாராயணா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவர் மருத்துவமனையில் வைத்து தீவிரமாக சிகிச்சை பெற்றார். இந்த நிலையில் இவர் தற்போது நல்ல உடல்நிலையுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

மருத்துவர் பேட்டி
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து சத்தியநாராயணாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர் பேட்டியளித்துள்ளார். அதில், சத்தியநாராயனாவிற்கு முதலுதவி செய்யவில்லை என்றால் பெரிய ஆபத்து ஏற்பட்டு இருக்கும். அவருக்கு முதல் 30 நொடிக்குள் போலீசார் செய்த முதலுதவிதான் பெரிய அளவிற்கு உதவியது என்று மருத்துவர் கூறியுள்ளார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications