பெட்டிக்கடை வைத்து டாக்டர் ஆக்கிய தந்தைக்கு..33 வருடம் கழித்து மகன் கொடுத்த மறக்க முடியாத பரிசு
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தைச் சேர்ந்த டாக்டர் ஒருவர், வெளியிட்ட பதிவு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 33 ஆண்டுகளாக பெட்டிக் கடை நடத்தி டாக்டர் ஆக்கிய தனது தந்தைக்கு இப்போது ஓய்வு கொடுத்துள்ளார். பெட்டி கடை வைத்து, யாரிடமும் கடன் வாங்காமல் வாழ்க்கை நடத்தி எப்படி தன்னை டாக்டர் ஆக்கினார் என்பது குறித்து பதிவிட்டுள்ளார்.
வாழ்க்கையில் நல்ல தாய் தந்தை அமைந்துவிட்டால், இந்த உலகத்தில் அவர்கள் பெரிய வெற்றிகளை பெறுவது மிகவும் எளிது. வறுமையிலும் கல்வி கற்க வைத்து உயர் நிலையை தன் மகன் அல்லது மகள் அடைவதற்கு காரணமாக பல பெற்றோர்கள் இருக்கிறார்கள். சாலையோரங்களில் வண்டிக்கடை வைத்தும், தெருத்தெருவாக அலைந்து பூக்கள் விற்றும், கட்டிட வேலை செய்தும், பெட்டி கடை வைத்தும், கூலி சென்றும், ஆட்டோ ஓட்டியும், வீடு வீடாக போய் பத்து பாத்திரம் தேய்த்தும் தன் குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள் பெற்றோர்கள்.

மில்களில் மாதம் 6000 , 7000 சம்பளத்திற்கு வேலைக்கு போய் பிள்ளைகளை படிக்க வைக்க பல பெற்றோர் இன்றும் கஷ்டப்படுகிறார். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே வறுமையை விரட்ட கல்வி தான் சிறந்த ஆயுதம் என்பதை புரிந்து கொண்டுள்ளார். வடமாநிலங்களில் பலர் தற்போது ஆர்வமுடன் கல்வி கற்க தொடங்கி உள்ளார்கள்.
அப்படி ஒருவர் ஆர்வமுடன் கல்வி கற்று வறுமையை வென்று டாக்டர் ஆகி உள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் வசிக்கும் வாஹித் மூமின் என்ற டாக்டர் தனது தந்தை 33 வருடங்கள் எப்படி பெட்டிக்கடை நடத்தி படிக்க வைத்தார் என்பது குறித்து கடந்த ஏப்ரல் 28ம் தேதி பதிவிட்டுள்ளார். அது பெரிய அளவில் சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது.
டாக்டர் வாஹித் மூமின் வெளியிட்ட பதிவில், இன்று அப்பா தனது பெட்டிக் கடையில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெறுகிறார், இருப்பினும் அவர் அதற்கு மனதளவில் தயாராக இல்லை. 33 ஆண்டுகளுக்கு முன் இந்த வாடகை இடத்தில் சிறியதாக பெட்டிக்கடை தொடங்கினார்.
என் அம்பா, அப்பாவின் கடின உழைப்பின் காரணமாகவும், இந்த பெட்டிக் கடையின் காரணமாகவும் எந்த ஒரு பண நெருக்கடியும் இன்றி, எந்த நபரிடமோ அல்லது வங்கியிலோ ஒரு பைசா கூட கடன் வாங்காமல் எனது மருத்துவக் கல்வியை முடிக்க முடிந்தது. இரண்டு பெருநாள் கொண்டாட்டத்துக்காக வருடத்திற்கு 2 நாட்கள் மட்டும் விடுப்பு கொடுத்து தினமும் காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை இந்தக் கடையை எனது தந்தை நடத்தி வந்தார்.

9 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த வரை நானும் பள்ளி நேரம் முடிந்ததும் பெட்டிக்கடைக்கு வந்து வேலை பார்த்து வந்தேன். அந்தக் காலக்கட்டத்தில் எங்கள் பெட்டிக்கடையில் விற்ற பல பொருட்களின் விலை இன்னும் நினைவில் இருக்கிறது. என் பெற்றோர் எனக்கு சரியான கல்வி கொடுக்கவில்லை என்றால், நான் நிச்சயமாக பெட்டிக்கடையை தொடர்ந்திருப்பேன். அதேநேரம் நவீன முறையில் இந்த தொழிலை நன்றாக விரிவுபடுத்தியிருப்பேன் என்று நினைக்கிறேன்.
இந்தக் கடையிலிருந்து அப்பா ஓய்வு பெறுவது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. ஒருவகையில் வருத்தமாகவும் இருக்கிறது. ஏனென்றால், அப்பா இந்த வேலையை மிகவும் பிடித்து செய்தார். அவரால், மனதளவில் இந்த வேலையிலிருந்து விலக முடியவில்லை. அப்பா இனி ஓய்வு நேரத்தை உற்சாகமாக செலவிடுவார். எங்களுக்காக எப்பொழுதும் புறக்கணித்த அவரது ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வார் என்று நம்புகிறேன்” இவ்வாறு டாக்டர் வாஹித் மூமின் கூறியுள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications