1 நிமிடத்துக்கு ரூ.5 லட்சம்.. மருமகன் சோஹைலிடம் கேட்ட நடிகை ஹன்சிகாவின் தாய்..இப்படி ஒரு காரணமா?ஆஹா
நடிகை ஹன்சிகா கடந்த ஆண்டு சோஹைல் கதுரியாவை திருமணம் செய்து கொண்டார்.
மும்பை: நடிகை ஹன்சிகா மோத்வானி கடந்த ஆண்டு சோஹைல் கதுரியாவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தான் முக்கிய விஷயம் ஒன்றை சுட்டிக்காட்டி சோஹைல் கதுரியாவின் குடும்பத்திடம் ஒரு நிமிடத்துக்கு ரூ.5 லட்சம் வரை தர வேண்டும் என நடிகை ஹன்சிகாவின் தாய் மோனா மோத்வானி கேட்ட தகவல் வெளியாகி அனைவரின் புருவத்தையும் உயர்த்த வைத்துள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிப்படங்களில் நடித்தவர் ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழில் முன்னணி கதாநாயகியாகவும் வலம் வந்தார். நடிகர் விஜய், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், நடிகராக இருந்து அரசியலில் இருந்து தற்போது அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் உள்பட பலருடன் நடித்துள்ளார்.
இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார். இந்நிலையில் தான் திடீரென்று ஹன்சிகா திருமண முடிவை எடுத்தார். கடந்த ஆண்டு நிச்சயத்தார்த்தம், திருமணம் அடுத்தடுத்து நடந்த நிலையில் ஹன்சிகா தற்போது இல்லற வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார்.

ஹன்சிகா திருமணம்
கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதி ஹன்சிகா திருமணம் செய்து கொண்டார். தனது நீண்ட கால நண்பரும் தொழில் அதிபருமான சோஹைல் கதுரியாவை அவர் காதலித்து கரம் பிடித்தார். இவர்களின் திருமணம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பழமையான அரண்மனையில் நடந்து முடிந்தது. தற்போது ஹன்சிகா - சோஹைல் கதுரியா தம்பதி மும்பையில் வசித்து வருகின்றனர். முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஹன்சிகா, சோஹைலுடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டு "இப்போதும், எப்போதும்" என தெரிவித்து இருந்தார்.

ஹன்சிகா லவ் ஷாதி டிராமா
இந்நிலையில் தான் ஹன்சிகா லவ் ஷாதி டிராமா என்ற பெயரில் திருமணத்தின்போதும், அதற்கு பிறகு நடந்து விஷயங்கள் பற்றிய எபிசோடுகள் வெளியாகி வருகிறது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் சமீபத்தில் ரிலீசான எபிசோடுவில் ஹன்சிகாவின் தாய் மோனா மோத்வானி சில விஷயங்களை பகிர்ந்து இருந்தார்.

சுவாரசிய தகவல்
அப்போது முந்தைய காலத்தில் அவர் சந்தித்த பிரச்சனைகளை விளக்கி இருந்தார். மேலும் ஒரு சுவாரசிய தகவலையும் அவர் கூறியிருந்தார். இந்த தகவல் என்பது ஹன்சிகாவின் கணவரும், தனது மருமகனுமா சோஹைல் கதுரியாவின் குடும்பத்தை பற்றியதாகும். அதாவது சோஹைல் கதுரியாவின் குடும்பத்தினர் அடிக்கடி நிகழ்ச்சிகளுக்கு தாமதமாக வந்துள்ளனர். இதனால் கடுப்பான மோனா மோத்வானி மருமகன் சோஹைல் கதுரியாவின் தாயிடம் புதியவிதமான கோரிக்கையை வைத்துள்ளார்.

ஒரு நிமிடத்துக்கு ரூ.5 லட்சம்
அதாவது சோஹைலின் தாயை அழைத்து விழாக்களுக்கு தாமதமாக வருவதைப் பற்றி புகார் செய்ததாகக் கூறப்பட்டுள்ளது. இதுபற்றி மோனா மோத்வாணி‛‛நான் ஒரு பணிவான வேண்டுகோள் வைக்கிறேன். கதுரியாக்கள் மிகவும் தாமதமாக வருபவர்கள். ஹன்சிகாக்கள் சரியான நேரத்தை கடைப்பிடிப்பவர்கள். இன்றும் தாமதமாக வந்தால் ஒவ்வொரு நிமிட தாமதத்துக்கு ரூ.5 லட்சம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கிறேன். மாலை 4.30 மணி முதல் 6 மணி என்பது நல்ல நேரம் கிடையாது. அதனால் கொஞ்சம் சீக்கிரமாக வர வேண்டும்'' என குறிப்பிட்ட நிகழ்ச்சியில் அவர் சோஹைலின் தாயிடம் தெரிவித்ததாக கூறியுள்ளது. இது தற்போது இணையதளங்களில் பேசும்பொருளாகி உள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications