அந்தரங்க உறுப்பை தொட வைத்தார்.. இயக்குனர் சஜித்கான் மீது நடிகை ஷெர்லின் சோப்ரா பரபர புகார்
மும்பை: திரைப்பட இயக்குனர் சஜித் கான் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார். அந்தரங்க உறுப்பை தொட வைத்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீ டூ மூலம் குற்றம்சாட்டிய நடிகை ஷெர்லின் சோப்ரா தற்போது போலீசில் புகார் செய்துள்ளார். இவர் மீது ஏற்கனவே 10 பேர் பாலியல் புகார் கொடுத்துள்ள நிலையில் இந்த புகார் என்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திரைத்துறையில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன. இவ்வாறு பாதிக்கப்பட்ட நடிகைகள் மீ டூ இயக்கம் மூலம் புகார் தெரிவித்து வருகின்றன.
இதில் பல பிரபலங்கள் சிக்கியுள்ளனர். இந்நிலையில் தான் இந்தி திரைப்பட நடிகை ஒருவர், இந்தி திரைப்பட இயக்குனர் மீது பாலியல் புகார் அளித்து மீ டூ மூலம் குற்றம்சாட்டி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

இயக்குனர் மீது புகார்
இந்தி திரைப்பட இயக்குனர் சஜித் கான். இவர் மீது பாலியல் புகார் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் 10 பெண்கள் பாலியல் புகார் அளித்தனர். இந்நிலையில் தான் இயக்குனர் சஜித் கான், இந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 16-வது சீசனில் பங்கேற்றுள்ளார். இவர் மீது பாலியல் புகார் எழுந்துள்ள நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க செய்தது தற்போது சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது.

நடிகை ஷெர்லின் சோப்ரா புகார்
இதற்கிடையே தான் தற்போது இந்தி திரைப்பட நடிகை ஷெர்லின் சோப்ரா, தனக்கு இயக்குனர் சஜித் கான் பாலியல் தொல்லை அளித்ததாக கூறியுள்ளார். இதுதொடர்பாக ஷெர்லின் சோப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் மீ டூவில் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இதுதொடர்பாக ஷெர்லின் சோப்ரா மும்பை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நடிகை கூறுவது என்ன?
இதுதொடர்பாக ஷெர்லின் சோப்ரா கூறுகையில், ‛‛இயக்குனர் சஜித் கான் எனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தார். மேலும் மிரட்டல் விடுத்தார். அவர் மீது புகார் அளிக்க எனக்கு முன்பு தைரியம் இல்லை. மீ டூவுக்கு பிறகு தைரியம் வந்தது. நான் போலீசில் புகார் அளித்தபோது சம்பவம் எப்போது நடந்தது என போலீசார் கேட்டனர். அப்போது 2005ம் ஆண்டு என கூறினேன். புகார் அளிப்பதன் பின்னணியில் உள்ள தாமதம் பற்றி கேட்டனர். அதற்கு அப்போது தைரியம் இல்லை. பயத்தின் காரணமாக புகார் அளிக்கவில்லை என்று கூறினேன்'' என்றார்.

அந்தரங்க உறுப்பை தொட வைத்தார்
மேலும் ஷெர்லின் சோப்ரா, ‛‛மேலும் அந்தரங்க உறுப்பை என்னிடம் காட்டி தொட வைத்தார். இதனை வெளியே சொல்ல முடியாமல் தவித்த நிலையில் தான் தற்போது தைரியம் வந்து புகார் அளித்துள்ளேன். இந்த தைரியம் என் மீ டூ இயக்கத்தின் மூலமாகவே வந்துள்ளது. போலீசில் புகார் அளித்துள்ளேன். அவர் சிறையில் அடைக்கப்பட வேண்டும். '' என்றார்.

மகளிர் ஆணையம் வரை சென்ற விஷயம்
இதற்கிடையே இயக்குனர் சஜித் கானை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் எனக்கூறி டெல்லி மகளிர் ஆணைய தலைவியான சுவாதி மலிவால் மத்திய அமைச்சர் அனுராக் தாகூருக்கு கடிதம் எழுதி உள்ளார். இதில் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் சுவாதி மலிவாலுக்கும் பாலியல் ரீதியான மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications