மகாராஷ்டிராவின் விதர்பா பிராந்தியத்தில் ₹70,000 கோடி முதலீடு செய்யும் அதானி குழுமம்!
டெல்லி: அதானி குழுமம், விதர்பா பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு உதவும் வகையில், எரிசக்தி, உள்கட்டமைப்பு, தளவாடங்கள், விமானப் போக்குவரத்து மற்றும் சமூக மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் ₹70,000 கோடி மதிப்பிலான தொலைநோக்குத் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டம், நாக்பூரை கிரீன் எனர்ஜி, தொழில்துறை உற்பத்தி மற்றும் ஒருங்கிணைந்த தளவாடங்களுக்கான முக்கிய பிராந்திய மையமாக மாற்றுவதை இலக்காகக் கொண்டுள்ளது. இதற்குத் தனியார் முதலீடு மற்றும் அரசு ஆதரவு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாக்பூரில் நடைபெற்ற "அட்வான்டேஜ் விதர்பா 2026" மாநாட்டில், அதானி ஏர்போர்ட்ஸ் இயக்குநர் ஜீத் அதானி பேசுகையில், விதர்பாவுடனான அதானி குழுமத்தின் ஈடுபாடு என்பது வெறும் வர்த்தக அணுகுமுறை அல்ல.. மாறாகத் தலைமுறை சார்ந்தது என்று குறிப்பிட்டார். இது எரிசக்தி பாதுகாப்பு, நிலையான உள்கட்டமைப்பு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி போன்ற இந்தியாவின் தேசிய முன்னுரிமைகளுடன் ஒத்துப்போகிறது என்றும் அவர் விளக்கினார்.

முதலீடு
மகாராஷ்டிராவின் பொருளாதார நிலப்பரப்பில் விதர்பாவின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதாக அதானி சுட்டிக்காட்டினார். உள்கட்டமைப்பு மேம்பாடு, கொள்கை நிலைத்தன்மை மற்றும் தனியார் முதலீடுகளின் ஆதரவால், மாநிலத்தின் மற்றும் நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் விதர்பா ஒரு முக்கிய தூணாக உருவாகி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அதானி குழுமம் 3,300 மெகாவாட் திறன்கொண்ட மீத்திறன் அனல் மின் நிலையத்தை டிரோடாவில் இயக்கி வருகிறது. மேலும், 2025-ஆம் ஆண்டில் 600 மெகாவாட் திறன்கொண்ட புட்டிபொரி மின் நிலையத்தையும் மீண்டும் செயல்படுத்தியது. காவ்டாவில் இருந்து பெறப்படும் சூரிய மின்சக்தியை அனல் மின் உற்பத்தியுடன் இணைப்பதன் மூலம், அதானி குழுமம் தற்போது மாநிலத்திற்கு 6,600 மெகாவாட் மின்சாரத்தை நீண்டகால விநியோக ஒப்பந்தங்களின் கீழ் வழங்கி, மின் கட்டமைப்பு நிலைத்தன்மை மற்றும் நம்பகமான மின்சார சப்ளையை உறுதி செய்கிறது.
இந்த புதிய வளர்ச்சித் திட்டத்தின் மையப்புள்ளி, லிங்கா-கல்மேஷ்வரில் முன்மொழியப்பட்டுள்ள ₹70,000 கோடி மதிப்பிலான ஒருங்கிணைந்த நிலக்கரி வாயுவாக்கம் மற்றும் துணை-பொருள் உற்பத்தி வளாகம் ஆகும். இந்தத் திட்டம் சுமார் 30,000 நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும், மேம்பட்ட ரசாயன உற்பத்தித் திறன்களை உண்டாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொழில்துறை பொருட்களுக்கு இறக்குமதியை இந்தியா சார்ந்திருப்பதைக் குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம், கிரீன் எனர்ஜி எரிசக்தி சார்ந்த தொழில்துறை தொழில்நுட்பங்களுக்கான உலக வரைபடத்தில் நாக்பூரை நிலைநிறுத்த உதவும் என்றும் அதானி தெரிவித்தார்.
உதவும்
தளவாடத் துறையில், அதானி குழுமம் போர்க்கேடியில் 75 ஏக்கர் பரப்பளவில் உள்நாட்டு கண்டெய்னர் சேமிப்புக் கிடங்கை அமைப்பதன் மூலமும், மகாராஷ்டிரா முழுவதும் 24 எல்லைச் சோதனைச் சாவடிகளைக் கையகப்படுத்துவதன் மூலமும் விதர்பாவின் இணைப்புத்திறனை வலுப்படுத்தி வருகிறது. இந்த முயற்சிகள் பிராந்தியத் தொழில்களுக்கான போக்குவரத்துச் செலவுகளைக் குறைத்து, ஏற்றுமதி போட்டி திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
கோண்ட்கைரியில் உள்ள அதானி குழுமத்தின் நிலத்தடி நிலக்கரிச் சுரங்கம், பொறுப்பான சுரங்கத் தொழிலுக்கான ஒரு முன்மாதிரியாக அதானியால் எடுத்துக்காட்டப்பட்டது. குறைந்த நிலப் பயன்பாடு, வெடிப்புகள் இல்லாதது, மழைநீர் சேகரிப்பு மற்றும் கழிவுநீர் லீக் இல்லாமல் சரியாகத் திட்டத்தைச் செயல்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
விமான போக்குவரத்து
விதர்பாவின் விமானப் போக்குவரத்துச் சூழல் மைஹானில் உள்ள 30 ஏக்கர் பராமரிப்பு, பழுதுபார்த்தல் மற்றும் சீரமைப்பு மையத்தை விரிவுபடுத்துவதன் மூலம் ஊக்கமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விரிவாக்கம், இண்டாமர் டெக்னிக்ஸ் பிரைவேட் லிமிடெட்டை கையகப்படுத்தியதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது.
இந்த மையானது 15 விமானத் தளங்களையும், ஃபெடரல் விமானப் போக்குவரத்து நிர்வாகம் (FAA) மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகம் (DGCA) ஆகியவற்றின் ஒப்புதல்களையும் பெற்றுள்ளது.. இது நாக்பூரை, ஏர் ஒர்க்ஸ் உலகளாவிய நெட்வொர்க் உடன் ஒருங்கிணைக்கப்பட்ட, வளர்ந்து வரும் சர்வதேச MRO மையமாக நிலைநிறுத்தும்.
அதானி அறக்கட்டளை
உள்கட்டமைப்பைத் தாண்டி, அதானி அறக்கட்டளையின் செயல்பாடுகளையும் அதானி கோடிட்டுக் காட்டினார். கோண்டியா மற்றும் நாக்பூர் மாவட்டங்களில் ஆரம்பச் சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி, மகளிர் சுய உதவிக்குழுக்கள், ஊட்டச்சத்து திட்டங்கள், சூரிய ஒளி விளக்குகள், சுத்தமான நீர் வழங்குதல், விளையாட்டு மேம்பாடு மற்றும் பள்ளி மேம்பாடு போன்ற பல்வேறு சமூக நலத் திட்டங்களை அதானி அறக்கட்டளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
நிலைத்தன்மை (sustainability) குறித்துப் பேசுகையில், டிரோடா மின் நிலையமானது ஜீரோ நீர் வெளியேற்ற நடைமுறைகளைப் பின்பற்றுவதாகவும், பறக்கும் சாம்பலைச் சிமெண்ட் மற்றும் விவசாயப் பயன்பாடுகளுக்கு மறுசுழற்சி செய்வதாகவும் அதானி தெரிவித்தார். அதானி குழுமம் 2030-க்குள் 10 கோடி மரங்களை நட உறுதியளித்துள்ளது. மேலும், அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ், 2027-க்குள் 60% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களைப் பெறுவதை இலக்காகக் கொண்டுள்ளது.
விதர்பாவின் மறுமலர்ச்சிக்கான சாதகமான சூழலை உருவாக்கியதற்காக மத்திய மற்றும் மகாராஷ்டிரா அரசுகளுக்கு அவர் நன்றி தெரிவித்தார். இந்த பிராந்தியம் இப்போது வெறும் நம்பிக்கையான வார்த்தைகளால் மட்டும் வரையறுக்கப்படாமல், உறுதியான முன்னேற்றத்தால் அடையாளப்படுத்தப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
விதர்பாவுக்கான இந்தத் திட்டம், மகாராஷ்டிராவுக்கான அதானி குழுமத்தின் மிகப் பெரிய முதலீடு உறுதிப்பாடுகளுடன் ஒத்துப்போகிறது. கடந்த மாதம் டாவோஸில் நடைபெற்ற 56-வது உலகப் பொருளாதார மன்றத்தில், அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் இயக்குநர் பிரணவ் அதானி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின் விநியோகம், தளவாடங்கள், தரவு மையங்கள் மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் 66 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மகாராஷ்டிர அரசுடன் கையெழுத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி












Click it and Unblock the Notifications