Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகாராஷ்டிராவில் ‘டபுள்’ மடங்கு வெற்றியை பதிவு செய்த ஓவைசி கட்சி.. 126 வார்டுகளில் வெற்றி!

Subscribe to Oneindia Tamil

மும்பை: அசாதுதீன் ஓவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சி மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தல்களில் 13 மாநகராட்சிகளில் 126 வார்டுகளை வென்று குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது. முன்பு 56 சீட்களில் வென்றிருந்த நிலையில் இந்த முறை டபுள் மடங்கு வெற்றியை பதிவு செய்துள்ளது AIMIM.

தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத் பவார்) மற்றும் ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா போன்ற முன்னணி கட்சிகளை விட AIMIM அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது கவனம் பெற்றுள்ளது.

maharashtra corporation bjp

மகாராஷ்டிராவில் மும்பை உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வியாழக்கிழமை அன்று நடைபெற்றது. மும்பை உள்ளிட்ட 29 மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பாஜக வெற்றிக் கொடி நாட்டியுள்ளது. 29 மாநகராட்சிகளில் 24 மாநகராட்சிகளை பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கைப்பற்றி உள்ளன.இதில் 20 மாநகராட்சிகளை பாஜக தனித்து கைப்பற்றியுள்ளது. பாஜகவின் கூட்டணி கட்சிகள் 4 மாநகராட்சிகளில் வென்றுள்ளன.

பல மாநகராட்சிகளில், சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா போன்ற முன்னணி மாநிலக் கட்சிகளை விட அசாதுதீன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி முன்னணியில் இருந்தது. 126 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ள AIMIM கட்சி. ஆளும் மகாயுதி அல்லது எதிர்க்கட்சியான எம்.வி.ஏ அறுதிப் பெரும்பான்மையைப் பெறாத மாநகராட்சிகளில் கிங் மேக்கராக உருவெடுத்துள்ளது.

29 நகராட்சிகளில் 24 மாநகராட்சிகளில் AIMIM கட்சி வேட்பாளர்களை நிறுத்தியது. கட்சியின் மகாராஷ்டிரா பிரிவுத் தலைவரும் முன்னாள் எம்.பியுமான சையத் இம்தியாஸ் ஜலீல் எடுத்த சீட் முடிவுகள் தொடர்பாக உள் கருத்து வேறுபாடுகள் மற்றும் சில மூத்த தலைவர்கள் ராஜினாமா செய்த போதிலும், அக்கட்சி தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொண்டது. ஒவைசி மற்றும் கட்சியின் தெலுங்கானா சட்டமன்றத் தலைவர் அக்பருதீன் ஒவைசி ஆகியோர் முக்கிய நகர்ப்புற பகுதிகளில் பல பிரச்சாரப் பொதுக் கூட்டங்களில் உரையாற்றினர்.

AIMIM கோட்டையாகக் கருதப்படும் சத்ரபதி சம்பாஜிநகரில், 115 வார்டுகளில் 33 இடங்களை அக்கட்சி கைப்பற்றி, பாஜகவுக்குப் பிறகு இரண்டாவது பெரிய சக்தியாக உருவெடுத்தது. AIMIM மகாராஷ்டிரா தலைவர் இம்தியாஸ் ஜலீல், சிவசேனாவின் இரு பிரிவுகளும் பல வார்டுகளில் AIMIM-ஐ விட பின்தங்கியுள்ளதாகவும். இதனால் கட்சியை மாநகராட்சியில் பிரதான எதிர்க்கட்சியாக நிலைநிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

AIMIM பல நகரங்களில் வெற்றி பெற்றது. மாலேகானில் 21 வார்டுகள், நாந்தேட்டில் 14, அமராவதியில் 12, துலியாவில் 10, சோலாப்பூரில் 8, நாக்பூரில் 7, அகமதுநகர் மற்றும் ஜல்னாவில் தலா இரண்டு, மற்றும் பர்பானி மற்றும் சந்திராபூரில் தலா ஒரு இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, பிரஹன் மும்பை மாநகராட்சியில் 8 வார்டுகளை அக்கட்சி கைப்பற்றியது. மகாராஷ்டிர மாநிலத்தின் மிகப்பெரிய மாநகராட்சியில் வலுவாக தடத்தைப் பதித்துள்ளது AIMIM.

மும்பையில் வார்டு எண் 145 இல் வெற்றி பெற்ற AIMIM தலைவர் கைருனிசா அக்பர் ஹுசைன். "வெற்றி என்னுடையது மட்டுமல்ல, மக்களுடையது... நாங்கள் எழுப்பிய அனைத்து பிரச்சனைகளுக்காகவும் நாங்கள் பாடுபடுவோம்" என்றார். ஒடுக்கப்பட்ட பிரிவினரிடையே கட்சியின் பணியும். பொதுமக்களின் நம்பிக்கையும் அதிகரிப்பதே இந்த வெற்றிகளுக்குக் காரணம் என்று ஜலீல் கூறினார்.

AIMIM இன் ஆதரவுத் தளம் முஸ்லிம்களைத் தாண்டி விரிவடைந்துள்ளதாகவும், SC மற்றும் ST வாக்காளர்கள் உட்பட இந்துக்கள் AIMIM வேட்பாளர்களை ஆதரித்துள்ளதாகவும், கட்சி வென்ற சீட்களில் முஸ்லிம் அல்லாத பல வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்றும் அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

126 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது AIMIM கட்சி. ஆளும் மகாயுதி அல்லது எதிர்க்கட்சியான எம்.வி.ஏ. அறுதிப் பெரும்பான்மையைப் பெறாத மாநகராட்சிகளில் AIMIM ஒரு கிங் மேக்கராக உருவெடுத்துள்ளது. வரும் நாட்களில் இக்கட்சிகளுக்கு ஆதரவை வழங்குவதா அல்லது எதிர்க்கட்சியில் நீடிப்பதா என்பதை கட்சித் தலைமை முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+