மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கழன்று விழுந்த சக்கரம்.. விமானியின் துணிச்சல் முடிவு.. மும்பையில் பத்திரமாக தரையிறங்க ஆர் ஆம்புலன்ஸ்

Google Oneindia Tamil News

மும்பை: ஏர் அம்புலன்ஸ் ஒன்றின் சக்கரம் புறப்படும்போதே கழன்று விழுந்த நிலையில், விமானி சமயோஜிதமாக செயல்பட்டதால் அந்த விமானம் மும்பையில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Recommended Video

    Air Ambulance-ஐ சமயோஜிதமாக Belly Landing செய்த Pilot | Oneindia Tamil

    மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருந்து ஹைதராபாத்திற்கு ஏர் ஆம்புலன்ஸ் ஒன்று நேற்றிரவு புறப்பட்டது. அதில் விமானப் பணியாளர்கள் இருவர், நோயாளி, அவரது உறவினர், டாக்டர் என மொத்தம் ஐந்து பேர் இருந்தனர்.

    Air ambulance loses wheel during takeoff from Nagpur, safely belly-lands at Mumbai airport

    அந்த ஏர் ஆம்புலன்ஸ் நாக்பூர் விமான நிலையத்தில் இருந்து புறப்படும்போது, அதன் சக்கரம் திடீரென ஓடுபாதையிலேயே கழன்று விழுந்து விட்டது. இதையடுத்து அந்த விமானத்தை மும்பை சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க விமானி முடிவு செய்தார்.

    சக்கரங்கள் இல்லாத காரணத்தினால் பெல்லி-லேண்டிங் முறையில் விமானத்தைத் தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. அதாவது சக்கரங்கள் இன்றி விமானத்தில் உடல் பகுதியைக் கொண்டு தரையிறங்குவது பெல்லி-லேண்டிங் எனப்படும்.

    இப்படித் தரையிறக்கும் போது விமானம் தீப்பற்றக்கூடிய வாய்ப்பு இருப்பதால், மும்பை விமான நிலை ஊழியர்கள் எச்சரிக்கையுடன் இருந்தனர். விமான ஓடுதளத்தில் முன்னெச்சரிக்கையாக நுரைகள் தெளிக்கப்பட்டிருந்தன. விமானி திறமையாகத் தரையிறக்க, விமானத்தில் இருந்த ஐந்து பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். விமானி சமயோஜிதமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    English summary
    Air ambulance belly-lands at Mumbai airport as it loses wheel during takeoff.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X