திடீரென உரசிக் கொண்ட விமானங்கள்! பதற்றத்தில் உறைந்த பயணிகள்! பரபரப்பில் ஆழ்ந்த மும்பை விமான நிலையம்!
மும்பை: மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு சிறு விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விமானங்கள் தரையிறங்கும் டாக்ஸி வேயில் ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ விமானங்களின் இறக்கைகள் ஒன்றோடு ஒன்று உரசியதால் பரபரப்பு ஏற்பட்டது. வேகம் குறைவாக விமானங்கள் இயக்கப்பட்டதால் பெரும் சேதம் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து இந்தியா மற்றும் பல்வேறு உலக நாடுகளுக்கு நேரடி விமான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
எப்போதும் பரபரப்பாய் காணப்படும் இந்த விமான நிலையத்தில் தான் திடீர் விபத்து ஏற்பட்டுள்ளது. விமானங்கள் தரையிறங்கிய பின்னரும், புறப்படும் முன்னரும் இயக்கப்படும் டாக்ஸி வேயில், ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ விமானங்களின் இறக்கை முனைகள் ஒன்றோடு ஒன்று உரசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மும்பை விமான நிலையம்
ஏர் இந்தியாவின் ஏர்பஸ் A320 விமானமும், இண்டிகோ நிறுவனத்தின் ஏர்பஸ் A320 விமானமும் தான் உரசியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏர் இந்தியாவின் AI 2732 விமானம் மும்பையிலிருந்து கோயம்புத்தூருக்கு புறப்படுவதற்காக டாக்ஸி வேயில் சென்று கொண்டிருந்தது. அதே நேரத்தில், இண்டிகோவின் 6E 791 என்ற விமானம் ஹைதராபாத்திலிருந்து மும்பை வந்த பின்னர் டாக்ஸி வேயில் நகர்ந்து கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.
ஏர் இந்தியா விமானம்
இந்த நிலையில், இரு விமானங்களின் வலது பக்க இறக்கை முனைகள் ஒன்றோடு ஒன்று லேசாக மோதியதாக விமான போக்குவரத்து அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இரு விமானங்களின் வேகம் மிகக் குறைவாக இருந்ததால் பெரும் சேதம் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், பாதுகாப்பு காரணமாக இரு விமானங்களும் உடனடியாக விமானங்கள் நிறுத்துமிடமான 'பே' பகுதிக்கு திரும்ப கொண்டு செல்லப்பட்டன.
DGCA விசாரணை
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், மும்பை விமான நிலையத்தில் உள்ள சிவில் விமான போக்குவரத்து பொது இயக்குநரகத்தின் (DGCA) அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வை தொடங்கினர். இந்த மோதல் எப்படி ஏற்பட்டது, டாக்ஸி வேயில் வழிகாட்டல் அல்லது ஒருங்கிணைப்பில் ஏதேனும் குறைபாடு இருந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஏர் இந்தியா
இந்த சம்பவம் குறித்து ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், "பிப்ரவரி 3ஆம் தேதி மும்பையிலிருந்து கோயம்புத்தூருக்கு செல்லவிருந்த AI 2732 விமானம், புறப்படும் முன் டாக்ஸி வேயில் காத்திருந்தபோது, மற்றொரு விமானத்துடன் உரசியது. இதனால் எங்கள் விமானத்தின் இறக்கை முனையில் சேதம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக, விமானம் தொழில்நுட்ப ஆய்வுகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை விமானம்
மேலும், விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டதாகவும், அவர்களை விரைவில் கோவைக்கு அழைத்துச் செல்ல சேர்க்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து DGCA உள்ளிட்ட அமைப்புகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
இண்டிகோ
இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஹைதராபாத்திலிருந்து மும்பை வந்த 6E 791 விமானம், தரையிறங்கிய பின்னர் டாக்ஸி வேயில் நகரும்போது, மற்றொரு விமானத்தின் இறக்கை முனையுடன் லேசாக மோதியது. அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக விமானத்திலிருந்து இறக்கப்பட்டுள்ளனர். விமானம் தற்போது ஆய்வில் உள்ளது. வழக்கமான நடைமுறைகளின்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது பயணிகளுக்கு ஒரு நிம்மதியான விஷயமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், மும்பை போன்ற பரபரப்பான விமான நிலையங்களில் டாக்ஸி வேயில் ஏற்படும் சிறிய தவறுகளும் பெரிய விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்பதால், இந்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி!












Click it and Unblock the Notifications